திரிப்பாரா சிவன் கோயில்
திரிப்பாரா சிவன் கோயில் இந்தியாவின் கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் வல்லிக்கோடு கிராமத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிவன் கோயிலாகும்.[1]இக்கோயில் அச்சன்கோவில் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் கருவறைதிறந்த வெளியில் அமைந்துள்ளது. இது இப்பகுதியில் உள்ள மற்ற கோவில்களில் இருந்து சற்று வித்தியாசமாக உள்ளது. இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது.