திரியம்பகேசுவர் தொடர்

திரியம்பகேசுவர் தொடர் (Trimbakeshwar Range) மகாராட்டிர மாநிலத்தில் நாசிக்கில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். இது நாசிக்கிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது.[1] பிரம்மகிரி மலையின் சேண வடிவிலான தாழ்வுப் பகுதி, இப்பகுதியினை பாதுகாக்கின்றது. திரியம்பாக்கு நகரத்தின், திரியம்பகேசுவரர் சிவன் கோயிலுக்கு இந்து பக்தர்கள் பெரும் அளவில் வருகை புரிகின்றனர். இந்தியாவின் இரண்டாவது நீளமான ஆறான கோதாவரி, இத்தொடரின் வட திசையில் உற்பத்தியாகின்றது. இதன் தென் திசையில் உள்ள மலைகளில் அடர்ந்த காடுகள் காணப்படுகின்றன.[1] மும்பை நகரத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் மேல் வைடார்னா நீர்தேக்கத்தின், நீர்ப்பிடிப்புப் பகுதியாகவும் இப்பகுதி இருக்கிறது. இத்தொடரில் அஞ்சநேரி மலை அமைந்திருக்கிறது. குழப்பங்களைத் தவிப்பதற்காக இத்தொடர் திரியம்பாகு-அஞ்சநேரி என்றும் அழைக்கப்படுகிறது.

திரியம்பகேசுவர் தொடர்
Trimbakeshwar Range, Maharashtra
பிரம்மகிரி சிகரம்
உயர்ந்த புள்ளி
உயரம்4,248 அடி (1,295 m)
ஆள்கூறு19°55′N 73°30′E / 19.917°N 73.500°E / 19.917; 73.500
பெயரிடுதல்
தாயகப் பெயர்त्र्यंबकेश्वर पर्वत (மராத்திய மொழி)
புவியியல்
திரியம்பகேசுவர் தொடர் Trimbakeshwar Range, Maharashtra is located in மகாராட்டிரம்
திரியம்பகேசுவர் தொடர் Trimbakeshwar Range, Maharashtra
திரியம்பகேசுவர் தொடர்
Trimbakeshwar Range, Maharashtra
அமைவிடம்மகாராட்டிரம், இந்தியா
மூலத் தொடர்மேற்குத் தொடர்ச்சி மலை

புவியியல்

தொகு

தக்காண பீடபுமியின் மேற்கு முனையில் இத்தொடர் அமைந்துள்ளது.எரிமலைப்பாறைகள் இத்தொடரிலிருப்பதால், இது தக்காண பொறி என்றும் அழைக்கப்படுகிறது.[2] T NH848 மூலம் நகரத்திலிருந்து, இதம்மலைத்தொடரினை அடையலாம்.

சிகரங்களின் பட்டியல்

தொகு
பெயர் உயரம் (மீ)
பிரம்மகிரி 1,295
அஞ்சநேரி 1,280
கரிகர்[3] 1,120
பாசுகர்காத் 1,086
திரிங்கால்வாடி 987
கார்காத் 962
தோரியா 926
வாலவிகிர் 916
காவுனெய் 914

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Nasik District Gazetteers". Cultural.maharashtra.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2015-09-29.
  2. "Official WebSite of Nashik District". Nashik.nic.in. 2012-10-31. பார்க்கப்பட்ட நாள் 2015-09-29.
  3. "Harihar, Trimbakeshwar Range, Western Ghats, India, Adventure, Trekking". Trekshitiz.com. பார்க்கப்பட்ட நாள் 2015-09-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரியம்பகேசுவர்_தொடர்&oldid=3794534" இலிருந்து மீள்விக்கப்பட்டது