திரிவேணி தாம்

நேபாள நாட்டிலுள்ள இந்துக்களின் யாத்திரை தளம்

திரிவேணி தாம் (Triveni Dham) என்பது நேபாளத்தின் நவல்பராசி மாவட்டத்திலுள்ள பினாய் திரிவேணி கிராமப்புற நகராட்சியில் அமைந்துள்ள மூன்று நதிகளான சோனா, தமாசா மற்றும் சப்த கண்டகி ஆகியவற்றின் சங்கமம் ஆகும். அருகிலுள்ள வால்மீகி ஆசிரமம் இராமாயணத்துடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. இங்கு சீதை தனது இரண்டு மகன்களான இலவன் மற்றும் குசனுடன் இராமனால் நாடுகடத்தப்பட்டார்.[1] இந்த இடத்தில் பல வரலாற்று கோவில்கள் உள்ளன. நேபாளம் மற்றும் இந்தியாவிலிருந்து வரும் யாத்ரீகர்கள் வழிபாட்டிற்காகவும் புனித நீராடுவதற்காகவும் இந்த இடத்திற்கு வருகிறார்கள்.[2] மாகே அவுசியின் போது, ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படுகிறது.[3] இந்தத் திருவிழா நேபாளி மற்றும் இந்திய வணிகர்களுக்கு பொதுவான சந்தையாக இருக்கிறது.[4]

திரிவேணி தாம்
திரிவேணி தாம் is located in நேபாளம்
திரிவேணி தாம்
நேபாளத்தில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:நேபாளம்
மாவட்டம்:நவல்பராசி மாவட்டம்
அமைவு:பர்தாகத் நகராட்சி
ஆள்கூறுகள்:27°27′07″N 83°55′48″E / 27.452°N 83.930°E / 27.452; 83.930
கோயில் தகவல்கள்

இந்த இடம் சுற்றுலா தளமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.[1] 2019 ஆம் ஆண்டு நேபாள ரூபாய் 25 கோடி செலவில் 500 தெய்வங்களின் சிலைகளுடன் புதிய கோவில் கட்டப்பட்டது. [5]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "Lumbini Development Trust- Birthplace of Buddha, Historical Place of Nepal, The World Heritage SiteLumbini Development Trust". Archived from the original on 2020-11-11. பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.
  2. "The Rising Nepal: Devotees throng Trivenidham". பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.
  3. "नवलपरासीकाे त्रिवेणीधाम सबल गन्तव्य". பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.
  4. "कहिले जोडिन्छ पोखरा–त्रिवेणी ?". Online Khabar. பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.
  5. "गजेंद्र मोक्ष धाम मंदिर में जनकपुर धाम से अयोध्या नगरी तक का दर्शन". Dainik Jagran. பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிவேணி_தாம்&oldid=4109200" இலிருந்து மீள்விக்கப்பட்டது