திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி
புனித சூசையப்பர் கல்லூரி (St. Joseph's College, SJC) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், திருகோணமலையில் அமைந்துள்ள ஆண்களுக்கான ஒரு தேசியப் பாடசாலை ஆகும்.[2]
புனித சூசையப்பர் கல்லூரி St Joseph's College | |
---|---|
அமைவிடம் | |
திருக்கோணமலை, கிழக்கு மாகாணம், 31000 இலங்கை | |
அமைவிடம் | 8°34′24.30″N 81°13′44.20″E / 8.5734167°N 81.2289444°E |
தகவல் | |
பிற பெயர் | SJC |
வகை | தேசியப் பாடசாலை |
தொடக்கம் | 27 சூலை 1867 |
நிறுவனர் | வண. லூயிசு மேரி கீட்டிங் |
அதிபர் | வண. அல்பிரட் விஜயகமலன்[1] |
இணையம் | www |
வரலாறு
தொகுஇப்பாடசாலை 1867 மார்ச்சு 19 இல் வண. அருட்தந்தை லூயிசு மேரி கீட்டிங் என்பவரால் தொடங்கப்பட்டது. 1931 ஏப்ரல் 1 அன்று திருகோணமலை மறைமாவட்டம் இப்பாடசாலையை லூசியானா மாகாணம் இயேசு சபையினரிடம் ஒப்படைத்தது. இலங்கையில் தனியார் பாடசாலைகள் 1960 ஆம் ஆண்டில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டன, புனித சூசையப்பர் கல்லூரி ஒரு கட்டணம் வசூலிக்காத தனியார் பாடசாலையாக இருக்கத் தீர்மானித்தது, ஆனாலும் அதன்பிறகு பொருளாதார ரீதியாகப் போராடிய இப்பாடசாலை, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
இங்கு படித்தவர்கள்
தொகு- நோயெல் இம்மானுவேல், திருகோணமலை மறைமாவட்ட ஆயர்
- யோசப் பொன்னையா
- இரா. சம்பந்தன், அரசியல்வாதி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Messages". St Joseph's College. பார்க்கப்பட்ட நாள் 20 February 2019.
- ↑ "Province - Eastern" (PDF). Schools Having Bilingual Education Programme. Ministry of Education (Sri Lanka). Archived from the original (PDF) on 2012-07-10.