திருகோணமலை மறைமாவட்டம்
திருகோணமலை மறைமாவட்டம் (Diocese of Trincomalee, இலத்தீன்: Dioecesis Trincomaliensis) இலங்கையின் கிழக்கேயுள்ள ஒரு உரோம கத்தோலிக்க மறைமாவட்டம் ஆகும். இதன் தற்போதைய ஆயர் நோயெல் இம்மானுவேல் ஆண்டகை ஆவார்.
திருகோணமலை மறைமாவட்டம் Dioecesis Trincomaliensis Trincomalee Diocese | |
---|---|
அமைவிடம் | |
நாடு | இலங்கை |
மாநிலம் | கொழும்பு |
பெருநகரம் | கொழும்பு |
புள்ளிவிவரம் | |
பரப்பளவு | 8,397 km2 (3,242 sq mi) |
மக்கள் தொகை - மொத்தம் - கத்தோலிக்கர் | (2010 இன் படி) 1,607,865 78,518 (4.9%) |
விவரம் | |
திருச்சபை | உரோமன் கத்தோலிக்கம் |
வழிபாட்டு முறை | இலத்தீன் வழிபாட்டு முறை |
உருவாக்கம் | 25 ஆகத்து 1893 |
கதீட்ரல் | புனித மரியாள் பேராலயம், திருக்கோணமலை |
தற்போதைய தலைமை | |
திருத்தந்தை | பிரான்சிசு |
ஆயர் † | நோயெல் இம்மானுவேல் |
பேராயர் † | மால்கம் ரஞ்சித் |
முன்னாள் ஆயர்கள் | கிங்ஸ்லி சுவாம்பிள்ளை |
வரலாறு
தொகுதிருகோணமலை மறைமாவட்டம் கொழும்பு உயர்மறைமாவட்டம், மற்றும் யாழ்ப்பாண மறைமாவட்டம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக 1893 ஆகத்து 25 இல் நிறுவப்பட்டது.[1] இம்மறைமாவட்டம் 1967 அக்டோபர் 23 இல் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1] 1975 டிசம்பர் 19 இல் இம்மறைமாவட்டத்தின் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட அனுராதபுரம் மறைமாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது.[1] இதன் பின்னர் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டம் 2012 சூலை 3 இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டு திருகோணமலை மறைமாவட்டம் என மீண்டும் பெயரிடப்பட்டது. மற்றைய பகுதி மட்டக்களப்பு மறைமாவட்டம் என்ற பெயரில் தனியான மறைமாவட்டம் ஆனது.[1]
ஆயர்கள்
தொகு# | ஆயர் | பதவியில் |
---|---|---|
1வது | சார்ல்சு லாவின் | 1898 - 1913 |
2வது | காஸ்டன் ரொபிச்செசு | 1917 - 1946 |
3வது | இக்னேசியசு பிலிப் திரிகெரசு கிளெனி | 1947 - 1974 |
4வது | லியோ ராஜேந்திரம் அந்தோனி | 1974 - 1983 |
5வது | கிங்ஸ்லி சுவாம்பிள்ளை | 1983 - 2015 |
6வது | நோயெல் இம்மானுவேல் | 2015 - |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Diocese of Trincomalee-Batticaloa". GCatholic.