திருச்சாரணத்து மலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு குன்று

திருச்சாரணத்துமலை (Thirucharanathumalai) என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தில் சிதறல் மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறு குன்றாகும். இது மார்த்தண்டத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும்,  கன்னியாகுமரியிலிருந்து 55 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மலையின் உச்சியில் இயற்கையாகவே தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு பாறையின் அடியில் மண்டபம், பலிபீடம்ப மடப்பள்ளி ஆகியவற்றைக் கொண்டதாக ஒரு கோயில் உள்ளது. இக்கோயிலில் மகாவீரர், பார்சுவநாதர், பத்மாவதி தேவி ஆகியோருக்கு என மூன்று கருவறைகள் உள்ளன. 1913 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் மன்னர் மூலம் திருநாள் மன்னரால் இங்கு இருந்த பத்மாவதி தேவிக்கு பதிலாக பாகவதி சிலை நிறுவப்பட்டது. குன்றின் ஒரு பாறையில் பாழடைந்த கோபுரம் ஒன்று உள்ளது. இந்தக் குன்றில் சமணத்தின் 24 தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சில கல்வெட்டுகளும் இங்கே காணப்படுகின்றன. அந்தக் காலத்தில் ஆடவர் மகளிர் என இருபாலருக்குமான சமண பயிற்சி மையமாக இது இருந்தது.

திருச்சாரணத்துமலை
திருச்சாரணத்து மலை is located in தமிழ் நாடு
திருச்சாரணத்து மலை
Location in Tamil Nadu, India
அமைவிடம்தமிழ்நாடு, கன்னியாகுமரி
ஆள்கூற்றுகள்8°07′30″N 77°33′54″E / 8.125°N 77.565°E / 8.125; 77.565
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சாரணத்து_மலை&oldid=3056849" இலிருந்து மீள்விக்கப்பட்டது