சிதறால் மலைக் கோவில்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு சமணக் கோயில்

சிதறால் சமணக் கோயில் (Chitharal Jain Monuments) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் என்னும் ஊரின் அருகில் உள்ள சிதறால் கிராமத்தில் அமைந்துள்ள சமணக் குகைக் கோயில் ஆகும். இதனை உள்ளூர் மக்கள் சிதறால் குகைக் கோயில் என்றும், சிதறால் பகவதியம்மன் கோயில் என்றும் அழைப்பர்.[1]

சிதறால் சமணக் கோயில்
சிதறால் சமணக் கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்சிதறால் கிராமம், மார்த்தாண்டம், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு
சமயம்சமணம்

அமைவிடம்

தொகு

இச்சமணக் குகைக் கோயில், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும்; கன்னியாகுமரி மாவட்டத் தலைநகரான நாகர்கோவிலிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

இக்கோயில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தின் வெள்ளாங்கோடு ஊராட்சியில் உள்ள சிதறால் கிராமத்தின் மலைப் பகுதியில் உள்ளது.[2] நாகர்கோவிலிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

சமணச் சிற்பங்கள்

தொகு
 
சமணச் சிற்பங்கள்

சிதறால் மலையில் சமணக் குடைவரைக் கோயில், கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு வரை நிறுவப்பட்டதாகும்.[3]

இக்குடைவரைக் கோயிலில் சமண சமயத்தின் மகாவீரர், பார்சுவநாதர் போன்ற தீர்த்தங்கரர்கள் மற்றும் பத்மாவதி தேவதையின் சிற்பங்களைச் சுற்றிலும் யட்சர்கள் மற்றும் யட்சினிகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. தீர்த்தங்கரர்களை வழிபடுவிதமாக அம்பிகை, வித்தியாதரர்களின் சிற்பங்கள் உள்ளது.[3][4]

குடைவரைக் கோயில்

தொகு

இக்குடைவரைக் கோயில்கள் திகம்பர சமணப் பிரிவினர் நிறுவியதாகும்.[4] முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (பொ.ஊ. 610-640) காலத்தில், சிதறால் கிராமப் பகுதி, சமணர்களின் செல்வாக்கு செழித்திருந்தது.[2]

இக்குடைவரைக் கோயில் மண்டபம், முற்றம், பலி பீடம், சமையல் அறைகள் கொண்டது. இங்குள்ள மூன்று முக்கிய சந்நதிகளின் நடுவில் மகாவீரர் சிற்பமும், இருபுறங்களிலும் பார்சுவநாதர் மற்றும் பத்மாவதி தேவியின் சந்நதிகள் உள்ளது. இக்குடைக் கோயில் அருகில் இயற்கையில் அமைந்த குளம் உள்ளது.[4][5][6][7] பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டில் இச்சமணக் குடைவரைக் கோயிலில், பகவதியம்மனை பிரதிட்டை செய்து இந்து சமயக் கோயிலாக மாற்றப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.[2][4]

முன்னர் இக்குடைவரைக் கோயில் சமண சமயத் துறவிகளின் சமயக் கல்விக் கூடமாக விளங்கியதென இங்குள்ள தமிழ் வட்டெழுத்து கல்வெட்டுகள் கூறுகிறது.[3][4]

தற்போது இக்குடைவரைக் கோயில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது.

புகைப்பட தொகுப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. On the southern tip of India, a village steeped in the past
  2. 2.0 2.1 2.2 "Chitharal". Tamil Nadu Tourism. பார்க்கப்பட்ட நாள் 23 March 2017.
  3. 3.0 3.1 3.2 "Bagawati Temple (Chitral)". Thrissur Circle, Archaeological Survey of India. Archived from the original on 19 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 March 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Nagarajan, Saraswathy (17 November 2011). "On the southern tip of India, a village steeped in the past". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 23 March 2017.
  5. Anon (2005). Tourist Guide to South India. Sura Books. pp. 128–129.
  6. Rangarajan, H; Kamalakar, G; Reddy, AKVS; Venkatachalam, K (2001). Jainism: Art, Architecture, Literature & Philosophy. Sharada. p. 43.
  7. Shah, Umakant P (1987). Jaina Iconography. Abhinav Publications. p. 251.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chitharal Jain Monuments
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

[https://web.archive.org/web/20201022024717/https://www.maalaithendral.com/2014/07/chitharal-jain-monuments-kumari-distic.html பரணிடப்பட்டது 2020-10-22 at the வந்தவழி இயந்திரம் சிதறால் மலைக் கோவில் பயணம்]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதறால்_மலைக்_கோவில்&oldid=4044567" இலிருந்து மீள்விக்கப்பட்டது