வித்தியாதரர்கள்

வித்தியாதரர்கள் (Vidyadhara) (சமஸ்கிருதம் Vidyādhara, என்பதற்கு பெரும் அறிவு உடையவர்கள் எனப் பொருள். இந்து சமயத்தில் உயர் ஆன்மாக்களான வித்தியாதர்ர்கள் மந்திர ஜால விந்தைகளை நன்கு கற்றறிந்தவரகள்.[1] கயிலை மலை சிவனின் உதவியாளாக வித்தியாதரர்கள் பணிவிடை செய்கின்றனர்.[2] வித்தியாதரர்களை உபதேவதைகள் ஆவார்.[3] பௌத்த சமய நூல்களில் வித்தியாதரகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளது.[4]

வித்தியாதர இணையர்கள்

புராணம் மற்றும் பிற நூல்கள்

தொகு
 
வானில் பறக்கும் வித்தியாதரர்

அக்னி புராணத்தில், ஆண் - பெண் வித்தியாதரர்கள் மலர் மாலகள் அணிந்து கொண்டு, அரம்பையர்கள், யட்சர்கள், யட்சினிகள், கந்தர்வர்கள், கிண்ணரர்கள் போன்ற உயர் ஆன்மா கொண்ட தேவதைகளுடன் வானுலகில் சஞ்சரிப்பர்கள் எனக் கூறுகிறது.[3]

பாகவத புராணம் சித்ரகேது என்பவன் வித்தியாதர்களின் அரசன் எனக்கூறுகிறது.[5]

சமணத்தில்

தொகு

சமண நூல்களில் வித்தியாதர்ர்கள், அசுரர்கள். வானரர்கள், போன்று பறத்தல் போன்ற மாய சக்தி ஆற்றல் கொண்டவர்கள் என்றும், வித்தியாதர இனத்தின் இரண்டு குலத்தில் பிறந்தவர்களே இராவணன் மற்றும் வாலி என்றும் கூறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Dalal, Roshen (2010), Hinduism: An Alphabetical Guide, இந்தியா: Penguin Books, p. 338
  2. "Monier Williams Sanskrit-English Dictionary (2008 revision): Vidyadhara". Archived from the original on 2020-08-14. பார்க்கப்பட்ட நாள் 2021-08-26.
  3. 3.0 3.1 Mani, Vettam (1975). Puranic Encyclopaedia: A Comprehensive Dictionary With Special Reference to the Epic and Puranic Literature. Delhi: Motilal Banarsidass. p. 850. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8426-0822-2.
  4. ed. Boswell, Robert E. (2004). Encyclopaedia of Buddhism. Macmillan Reference. p. 376. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0028657195. {{cite book}}: |last= has generic name (help)
  5. "Bhaktivedanta VedaBase: Śrīmad Bhāgavatam 6.16.49". Archived from the original on 2010-06-15. பார்க்கப்பட்ட நாள் 2016-07-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்தியாதரர்கள்&oldid=4057541" இலிருந்து மீள்விக்கப்பட்டது