திருச்செங்கோடு கைலாசநாதர் கோயில்

திருச்செங்கோடு கைலாசநாதர் கோயில் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல்பெற்ற சிவத்தலமாகும். மூலவர் கைலாசநாதர் லிங்க வடிவிலுள்ளார். அம்மன் பெயர் ஏலவார் குழலம்மை. திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலைச் சேர்ந்த ஐந்து துணைக்கோயில்களில் இதுவும் ஒன்று.

தேவாரம் பாடல் பெற்ற
கைலாசநாதர் கோயில்
பெயர்
பெயர்:கைலாசநாதர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருச்செங்கோடு (புராணப் பெயர்:திருக்கொடிமாடச் செங்குன்றூர்)
மாவட்டம்:நாமக்கல்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கைலாசநாதர்
தாயார்:சுகந்த கூந்தலாம்பிகை (ஏலவார் குழலம்மை)
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

அமைவிடம் தொகு

கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோட்டில் அமைந்துள்ளது. இக்கோயில் ஈரோட்டிலிருந்து 20 கிமீ தொலைவிலும் சேலத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

அஞ்சல் முகவரி: கைலாசநாதர் கோயில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். அஞ்சல் குறியீட்டு எண்: 637211.

போக்குவரத்து தொகு

ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற நகரங்களிலிருந்து இக்கோயிலுக்குச் செல்ல பேருந்துவசதி உள்ளது. தொடருந்தில் பயணம் செய்ய விரும்புவோர் ஈரோடு சந்திப்பு சென்று அங்கிருந்து பேருந்து மூலம் திருச்செங்கோட்டை அடையலாம்.

கோயில் அமைப்பு தொகு

இக்கோயில் நான்குபுறமும் 240 சதுரஅடி அளவுள்ள சதுர அமைப்புகொண்டுள்ளது. இங்குள்ள இராஜகோபுரம் ஐந்துநிலைகளும் 76 அடி உயரமும் உடையது. கோயிலுக்கு முன்புறம் உயரமான விளக்குத்தூணும் அதன் அருகே நாற்பது கால் மண்டபமும் ஊஞ்சல் மண்டபமும் உள்ளன. கைலாசநாதர் சன்னிதிக்கு இடதுபுறத்தில் அம்மன் ஏலவார் குழலம்மைக்குத் தனி சன்னிதி அமைந்துள்ளது. கைலாசநாதர் கோயிலுக்கும் அம்மன் சன்னிதிக்கும் நடுவில் சுப்பிரமணியருக்குத் தனி சன்னிதியுள்ளது.

பெருமாள் திருவுருவம் தொகு

 
சுப்பிரமணியர் சன்னிதியில் பெருமாள் திருவுருவம்

சைவக் கோயிலான இங்குள்ள சுப்பிரமணியர் சன்னிதி மண்டப் தூணொன்றில் ஆதிசேசனின் குடையின்கீழ் பள்ளிகொண்ட பெருமாளின் திருவுருவம் வடிக்கப்பட்டுள்ளது.

நந்தி தேவர் தொகு

 
நந்திகூபம் வழிக் கிணற்றுக்குச் செல்லும் நுழைவாயில்

கைலாசநாதர் சன்னிதிக்கு முன்புறம் நந்திக்கென்று சிற்ப வேலைப்பாடுகளுடன் ஒரு சிறு தனிமண்டபமும் இந்த மண்டபத்தின் அருகில் வடபுறம் ’நந்தி கூபம்’ ஒன்றின் வழியாக கிணற்றுக்குச் செல்லும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெருமாள் திருவுருவம் தொகு

 
சுப்பிரமணியர் சன்னிதியில் பெருமாள் திருவுருவம்

சைவக் கோயிலான இங்குள்ள சுப்பிரமணியர் சன்னிதி மண்டத் தூணொன்றில் ஆதிசேசனின் குடையின்கீழ் பள்ளிகொண்ட பெருமாளின் திருவுருவம் வடிக்கப்பட்டுள்ளது.

பாடல் தொகு

இக்கோயிலின் முதன்மைக் கடவுளான கைலாசநாதர் மீது திருஞானசம்பந்தர் ’திருக்கொடிமாடச் செங்குன்றூர் பதிகம்’ மற்றும் ’நீலகண்டப் பதிகம்’ பாடியுள்ளார். கொடிமாடச் செங்குன்றூர் என்ற பெயர் கொண்டிருந்த திருச்செங்கோட்டில் திருஞானசம்பந்தர் தன் அடியார்களுடன் தங்கியிருந்தபோது, அடியார்களை வாட்டிய கடுஞ்சுரத்திலிருந்து அவர்களைக் குணமடைவதற்காக பெருமானை வேண்டிப் பாடியது நீலகண்டப் பதிகம் என்பது மரபுவழி வரலாறாகும்.

”ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி
தாங்கிய கங்கையோடு மதியஞ் சடைக்கணிந்து
கோங்கண பும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
பாங்கென தாள்தொழுவார் வினையாய பற்றறுமே”
              -திருஞானசம்பந்தர், திருக்கொடிமாடச் செங்குன்றூர் பதிகம்

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு