முதலாம் கிரகோரி (திருத்தந்தை)

(திருத்தந்தை முதலாம் கிரகோரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருத்தந்தை முதலாம் கிரகோரி (இலத்தீன்: Gregorius I) (சுமார். 540 – 12 மார்ச் 604), அல்லது பெரியா கிரகோரி, என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 3 செப்டம்பர் 590 முதல் தன் இறப்பு வரை இருந்தவர் ஆவார். இவர் தனது எழுத்துகளுக்காக மிகவும் அறியப்படுகின்றார்[1]

திருத்தந்தை புனித

முதலாம் கிரகோரி
ஆட்சி துவக்கம்3 செப்டம்பர் 590
ஆட்சி முடிவு12 மார்ச் 604
முன்னிருந்தவர்இரண்டாம் பெலாஜியுஸ்
பின்வந்தவர்சபீனியன்
திருப்பட்டங்கள்
ஆயர்நிலை திருப்பொழிவு3 செப்டம்பர் 590
பிற தகவல்கள்
இயற்பெயர்கிரகோரியுஸ்
பிறப்புc. 540
உரோமை நகரம்
இறப்பு(604-03-12)12 மார்ச்சு 604 (aged 64)
உரோமை நகரம், பைசாந்தியப் பேரரசு
கல்லறைபுனித பேதுரு பேராலயம் (1606)
இல்லம்உரோமை நகரம்
பெற்றோர்கோர்தியானுஸ், சில்வியா
புனிதர் பட்டமளிப்பு
திருவிழா3 செப்டம்பர், 12 மார்ச்
கிரகோரி என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

இவர் கிறித்தவ வழிபாட்டினை சீறமைத்து ஒழுங்குபடுத்தியதால் நடுக் காலம் முழுவதும் இவர் கிறித்தவ வழிபாட்டின் தந்தை என அழைக்கப்பட்டார்.[2]

இவரே கத்தோலிக்க மடங்களில் வாழ்ந்த அனுபவமுடைய முதல் திருத்தந்தை. இவர் மறைவல்லுநராகவும், திருச்சபைத் தந்தையர்களுல் ஒருவராகவும் கருதப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் சில லூதரனிய திருச்சபைகளில் இவர் புனிதர் என ஏற்கப்படுகின்றார். இவர் இறந்த உடனேயே மக்களின் பலத்த ஆதரவால் புனிதர் பட்டம் பெற்றார்.[3] சீர்திருத்தத் திருச்சபையினைச் சேர்ந்த ஜான் கால்வின் இவரைப்பற்றிக்கூறும் போது, இவரே கடைசியாக இருந்த நல்ல திருத்தந்தை எனக்கூறுகின்றார்.[4] இசையமைப்பாளர்கள், பாடகர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இவர் பாதுகாவலராகக் கருதப்படுகின்றார்.[5]

ஆதாரங்கள்

தொகு
  1. Ekonomou, 2007, p. 22.
  2. Christian Life and Worship (Dissertations in European Economic History), 1948, 1979, Gerald Ellard (1894–1963), Arno Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-405-10819-2 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780405108198, p. 125. [1]
  3. "Gregory I". The Oxford Dictionary of the Christian Church. (2005). Ed. F.L. Cross. New York: Oxford University Press. 
  4. "Institutes of the Christian Religion Book IV". Institutes of the Christian Religion Book IV. (1515). Ed. F.L. Cross. New York: Oxford University Press. 
  5. "St. Gregory the Great". Web site of Saint Charles Borromeo Catholic Church. பார்க்கப்பட்ட நாள் 2009-11-14.
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் திருத்தந்தை
590–604
பின்னர்