திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் கோயில்
திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் கோயில் [1] தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 93ஆவது சிவத்தலமாகும்.
தேவாரம் பாடல் பெற்ற திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருத்தலையாலங்காடு, தலையாலங்காடு |
பெயர்: | திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | தலையாலங்காடு |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | நர்த்தனபுரீஸ்வரர் ,நடனேசுவரர், ஆடவல்லநாதர் |
தாயார்: | உமாதேவி, திருமடந்தையம்மை |
தல விருட்சம்: | ஆலமரம் |
தீர்த்தம்: | சங்கு தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர் |
அமைவிடம்
தொகுஅப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் 53.சிமிழி ஊராட்சி கும்பகோணம்-திருவாரூர் பேருந்து சாலையில் அமைந்துள்ளது.
சிறப்புகள்
தொகுஇத்தலத்தில் முயலகனை அடக்கி அவன் முதுகை நெரித்து இறைவன் நடனமாடினான் என்பது தொன்நம்பிக்கை.
வழிபட்டோர்
தொகுகபில முனிவர் வழிபட்ட திருத்தலம். இத்தலத்து தீர்த்தம் நோய் தீர்க்கும் சிறப்புடையது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 232