திருப்பதி முனியப்பசுவாமி திருக்கோவில்
திருப்பதி முனியப்பசுவாமி திருக்கோவில் என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம் சேளூர் சாணார்பாளையத்தில் உள்ளது இந்த முனியப்பசுவாமி இவ்வூரின் காவல் தெய்வமாகப் போற்றப் படுகிறார். இந்த முனியப்பசாமியின் சிலை 40 அடி உயரத்துடன், ஒரு டன் எடையுள்ள வாளுடன் அமைக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் முதல் சனி, ஞாயிறு நாட்களும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்வது வழக்கம்.[1]
வரலாறு
தொகுஇவ்வூரைச் சேர்ந்த பெரியோர் முன்னொரு காலத்தில் திருப்பதிக்குச் சென்று திரும்பிய பொழுது அவர்கள் கூடையில் பொருட்களைக் கொண்டு வந்தனர். அந்தக் கூடையில் திடீரென ஒரு கல் வந்து இருந்ததாகவும். அதை எடுத்து எரிந்த போதும் மீண்டும் மீண்டும் வந்து கூடையில் இருந்ததாகவும் கடைசியாக தற்போது அந்தக் கோவில் இருக்கும் இடத்தில் வைத்த பொழுது அங்கேயே இருந்து கொண்டதாகவும் வாய் வழி வரலாறு கூறப்படுகிறது. [சான்று தேவை]பின்னர் அதை காவல் தெய்வமாக வழிபட ஆரம்பித்தனர். இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் இரண்டாவது ஞாயிறு ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. கடந்த மாசி மாதம் நடை பெற்ற விழாவில் 195 கிடாக்கள் வெட்டப்பட்டு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இதுபோல விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் அளிக்கப்படும் அனைத்துக் கிடாக்களும் மக்கள் வேண்டுதல் நிறைவேறி நேர்த்திக்கடனாக அளிக்கப்படுபவை ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "திருப்பதி முனியப்பசாமி கோவில் விநோத அசைவ அன்னதான விழா". செய்திக்கட்டுரை. தினமலர். 20 பெப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)