சேளூர் சாணார்பாளையம்
சேளூர் சாணார்பாளையம் (Selur Sanarpalayam) என்ற ஊர் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் சேளூர் ஊராட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[1] இவ்வூர் பரமத்தி வேலூரிலிருந்து ஜேடப்பாளையம் செல்லும் வழியில் உள்ளது. பரமத்தி வேலூரிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு சேளூர் சாணார்பாளையம் திருப்பதி முனியப்பசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.[2]
பெயரியல்
தொகுஇந்த ஊரில் சாணார் (நாடார்) வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிப்பதால் இவ்வூர் இப்பெயர் பெற்றது.[சான்று தேவை]
பொருளாதாரம்
தொகுஇவ்வூரில் மிகுதியாக கரும்பு பயிரிடப்படுகிறது. இவ்வூரின் அருகில் கரும்பு வெல்லச் சந்தை உள்ளது. இங்கு நீர்ப்பாசனம் ராஜ வாய்க்கால் வழியாக நடக்கிறது. இந்த ஊருக்கு 1 கி.மீ தொலைவின் காவிரி ஆறு பாய்கிறது.
அருகில் உள்ள இடங்கள்
தொகுமிகப் புகழ் பெற்ற புண்ணியத் தலமான கொடுமுடி இந்த ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரில் பெரும்பாலான மக்கள் விவசாயிகள். சிலர் அதைச் சார்ந்த தொழில்களையும் செய்கின்றனர். தேங்காய் தொழில் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. படித்த இளைஞர்கள் வெளியூரிலும் வெளிநாட்டிலும் வேலை செய்கின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை.
- ↑ [m.dinamalar.com/temple_detail.php?id=65392 "ப.வேலூர்: சேளூர் சாணார்பாளையம் திருப்பதி முனியப்பசாமி கோவிலில், விநோத அசைவ அன்னதான விழா நடந்தது. ப.வேலூர் ..."] 20 பெப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 20 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check|url=
value (help); Check date values in:|accessdate=
and|date=
(help)