திருப்பிரவாசிரியர் தூக்கியல்

திருப்பிரவாசிரியர் தூக்கியல் [1] என்னும் நூல் ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கண நூல். தொல்காப்பியம் காட்டும் 26 செய்யுள் உறுப்புகளில் ஒன்று தூக்கு. இந்த உறுப்பினை விளக்கும் தனி நூல் இது ஆகையால் தூக்கியல் என்னும் பெயரினைப் பெற்றுள்ளது. இதன் ஆசிரியர் பெயரைத் 'திருப்பிரவாசிரியர்' என இந்த நூலைக் குறிப்பிடும் உரைநூல்கள் குறிப்பிடுகின்றன. இந்தப் பெயரின் பொருள் விளங்கவில்லை. திருப்பெயர் ஆசிரியர் என்பதன் பிறழ்ச்சியாக இருக்கலாம் என மு. அருணாசலம் கருதுகிறார். தன் கருத்துக்கு உறுதுணையாகச் சில சான்றுகளையும் காட்டுகிறார். [2]. இந்த நூல் கல்லாடரின் பாட்டியல் நூலுக்குக் காலத்தால் முந்தியது.

இந்த நூல் கூறுவன
தொகு

1

பாடிய செய்யுள் பலநாள் கிடப்பின்
கேடு என மொழிப கேட்போர் தமக்கே [3]

2

இளைய மகளிரது இயம்பின என்பது
திருவிளவாசிரியர் தூக்கிய ஆகலின் [4]

3

திருவின் ஆசிரியர் தூக்கியல் உரைத்தன
பாவையும் இயற்பெயர்க்கு அல்லது
பொருத்தம் வேண்டார் புலமையோரே [5]


அடிக்குறிப்பு

தொகு
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 231. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. திருவீரவாசிரியன் (தொல்காப்பியம், சொல்லதிகாரம் நூற்பா 41 சேனாவரையர் உரை)
  3. நவநீதப் பாட்டியல் உரையில் பரிசில் நீட்டித்தானைக் கூறுமிடத்து இந்த மேற்கோள் வருகிறது
  4. நவநீதப்பாட்டியல் 52 உரை
  5. இது திருப்பிரவாளவாசிரியர் பாடல் என ஓரிடத்திலும் கல்லாடனார் பாட்டியல் என மற்றோரிடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கல்லாடர் மேற்கோளாக எடுத்தாண்ட கல்லாடர் பாட்டியலுக்கு முந்தைய நூல் என அறியமுடிகிறது.