தொல்காப்பியம் செய்யுளியல் செய்திகள்

தொல்காப்பியம் பொருள் அதிகாரம் வாழ்க்கைப் பாங்கினையும், அதனை வெளிப்படுத்தும் நூலின் பாங்கினையும் உணர்த்துகிறது. முதல் ஆறு இயல்கள் வாழ்க்கைப் பாங்கை உணர்த்துகின்றன. இறுதி மூன்று இயல்கள் தமிழ்நூல் நெறியை உணர்த்துகின்றன. கருத்துகள் உவமத்தால் கூறப்படும்; செய்யுளில் கூறப்படும்; மரபுநெறியைப் பின்பற்றிக் கூறப்படும் என இம் மூன்றும் கூறுகின்றன. இவற்றுள் தொல்காப்பியம் செய்யுளியல் வாழ்க்கைப் பாங்கை உணர்த்தும் செய்யுளின் இலக்கணத்தை 235 நூற்பாக்களில் விளக்குகிறது. யாப்பியல் வகை என 26 பாங்குகளும், வனப்பு என 8 வகைப் பாங்குகளும் இந்த இயலில் கூறப்படுகின்றன. [1]

செய்யுள் உறுப்பு [2]

தொகு
  • யாப்பியல் வகை 26
  1. மாத்திரை,
  2. எழுத்து-இயல்,
  3. அசைவகை
  4. யாத்த சீர்,
  5. அடி,
  6. யாப்பு
  7. மரபு,
  8. தூக்கு,
  9. தொடை
  10. நோக்கு,
  11. பா, அளவு-இயல்
  12. திணை,
  13. கைகோள்,
  14. கூற்று
  15. கேட்போர்,
  16. களன்,
  17. காலவகை
  18. பயன்,
  19. மெய்ப்பாடு,
  20. எச்சம்
  21. முன்னம்,
  22. பொருள்,
  23. துறை
  24. மாட்டு,
  25. வண்ணம்,
  26. வனப்பு
அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு

குறிப்பு விளக்கம்

தொகு
யாப்புக் குறியீடு குறிப்பு
மாத்திரை கண்ணின் திரை மா [3] அளவுக் கால-நொடி நொடிக்கும் கால அலகு
எழுத்து மொழியில் எழும் சிறு ஒலி அலகு
அசை எழுத்துக்கள் இணைந்து அசையும் செய்யுள் அலகு
சீர் அசைகள் இணைந்து சீராக (ஒழுங்காக [4] ) நடக்கும் செய்யுள் அலகு.
(தளை) சீர்கள் தளையப்படுவது. [5] [6]
அடி
யாப்பு
மரபு இவற்றில் முன்னோர் நெறியைப் பின்பற்றுதல்
தூக்கு
தொடை
நோக்கு ஓசை முதலியவற்றால் கேட்டாரை மீட்டுந் தன்னை நோக்கச் செய்யும் செய்யுளுறுப்பு (உரையாசிரியர்கள் விளக்கம்)
பா ஆடை நெய்வோர் நூலைப் பாவாக ஓட்டுவது போல வரிசை வரிசையாகப் பாடலடிகளை இணைத்து ஓட்டிய முறைமை. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா. வஞ்சிப்பா, மருட்பா [7], முதலான யாப்பு நோக்குப் பாகுபாடுகளும், அங்கதம் [8] முதலான பொருள் நோக்குப் பாகுபாடுகளும்
அளவு-இயல் ஆசிரியப்பா 3-1000 அடி, குறள் வெண்பா 7 சீர், பஃறொடை வெண்பா 5-12 அடி, பரிபாடல் 5-400 அடி, பிறவற்றிற்கு வரையறை இல்லை
திணை அகத்திணை 7, புறத்திணை 7
கைகோள் களவு, கற்பு என 2
கூற்று, கேட்போர், களம், காலவகை அகத்திணை மாந்தர் [9]
பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை அகப்பொருள் பாடல்களுக்குப் பாட்டால் விளையும் பயன், பாட்டினது பொருளால் தோன்றும் நகை முதலான மெய்ப்பாடு, பாட்டின் பயன், பாட்டில் வரும் இறைச்சி முதலானவை, அகப்பொருளா புறப்பொருளா என அறிதல், அவற்றின் துறைகள் ஆகியவற்றை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று இந்த இயல் கூறுகிறது.
மாட்டு "அகன்று கிடப்பினும் அணுகிய நிலையிற் கிடப்பினும் பொருள்முடியுமாற்றாற் கொண்டு கூட்டிச் சொல் முடிபு கொள்ளும் முறை" (தொல். பொ. 522): வாக்கியத்தை முடிக்கச் சொற்கள் விலகிக் கிடந்தாலும் நெருங்கிக் கிடந்தாலும் பொருள்பொருந்தும்படி ஏற்றுக்கோத்துச் சொல்முடிவுகொள்ளும்முறை"
வண்ணம் 20
வனப்பு 8

அடிக்குறிப்பு

தொகு
  1. இங்குத் தரப்பட்டுள்ள எண்கள் இந்த இயலின் நூற்பாக்களுக்குத் தரப்பட்டுள்ள வரிசை எண்களைக் குளிக்கும்.
  2. 1
  3. 1/20
  4. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
    நீர்மை உடையார் சொலின். (திருக்குறள் 195)
    இதில் சீர்மை என்பது ஒழுக்கம்

  5. மேய்ப்பவன் மாட்டைத் தொடுக்கும் கயிறு தளைக்கயிறு.
  6. சமய நோக்கில் பதியும், பசுவும் இணையும் பாசக் கயிறு.
  7. தொல்காப்பியம் 3-390
  8. தொல்காப்பியம் 3-429 முதலை 431
  9. புலம்பும்போது ஞாயிறு, திங்கள், அறிவு, நாண், கடல், கானல், விலங்கு, மரம், புள், நெஞ்சு முதலானவை பெசுவது பாலவும் கேட்பது போலவும் பாடப்படும். (தொல்காப்பியம் 3-192)