திருமருகல் நடேச பிள்ளை

திருமருகல் நடேச பிள்ளை (1874 – 1903) தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞராவார்.

பிறப்பும், இசைப் பயிற்சியும்

தொகு

நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருமருகல் எனும் ஊரில் பிறந்தவர் நடேச பிள்ளை. பெற்றோர்: சிவஞானம் பிள்ளை – அவயாம்பாள். முதலில் மருதமுத்துப் பிள்ளை, பின்னர் குழிக்கரை அய்யாசுவாமிப் பிள்ளை ஆகியோரிடம் நாதசுவரம் கற்றுக்கொண்டார் நடேச பிள்ளை.

இசை வாழ்க்கை

தொகு

புகழ்பெற்ற தவில் கலைஞர்களான அம்மாசத்திரம் கண்ணுசுவாமி பிள்ளை, அம்மாப்பேட்டை பக்கிரிப்பிள்ளை, நாச்சியார் கோவில் சக்திவேல் பிள்ளை, பந்தணைநல்லூர் மரகதம் பிள்ளை ஆகியோர் இவருடன் தவில் வாசித்துள்ளனர்.

தனக்கு குழந்தை இல்லாததால், தமக்கை கோவிந்தம்மாளின் குழந்தையான ராஜரத்தினத்தை நடேச பிள்ளை தத்தெடுத்துக் கொண்டார். இக்குழந்தையே பின்னாளில் புகழ்பெற்று விளங்கிய டி. என். ராஜரத்தினம் பிள்ளை.

மறைவு

தொகு

1903 ஆம் ஆண்டில் திருநெல்வேலி இசைக் கச்சேரி ஒன்றிற்கு புறப்படும்போது ஏற்பட்ட வயிற்றுப்போக்கு பிரச்சினையின் காரணமாக, தனது 28 ஆம் வயதில் காலமானார்.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமருகல்_நடேச_பிள்ளை&oldid=4120462" இலிருந்து மீள்விக்கப்பட்டது