திருமுருகன் (நடிகர்)

திருமுருகன் (Thirumurugan, பிறப்பு:24 டிசம்பர் 1978 ) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.[1]

திருமுருகன்
பிறப்பு24 திசம்பர் 1978 (1978-12-24) (அகவை 45)
அம்பளபட்டு, தஞ்சாவூர், தமிழ்நாடு
பணிநடிகர்

பிறப்பு

தொகு

இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆம்பலாபட்டு என்னும் கிராமத்தில் சதாசிவம்-ராமலெட்சுமி தம்பதியரின் மகனாகப் பிறந்தார். 2000இன் தொடக்கத்தில் தனது திரைப்பட இயக்குநர் ஆகும் கனவை நனவாக்க சென்னை நோக்கிப் புறப்பட்டார். இதற்கு அவருடைய தந்தையும் தமக்கையாரும் உதவி செய்தனர்.

தொழில்

தொகு

அதன் பின்னர் அவர் இயக்குநர் சற்குணத்தின் நண்பரானார். சற்குணம் அவரை இயக்குநர் ஏ.எல்.வி.ஐயிடம் அறிமுகப்படுத்தினார். அவருடன் சேர்ந்து 50க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்தார். சில திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். சற்குணம், களவாணி திரைப்படத்தை 2010இல் இயக்கும் வாய்ப்பு கிடைத்தபோது திருமுருகன் இயக்குநராகப் பணியாற்றினார். இதற்கு முன்னரே அவரை இந்த படத்தில் வில்லனாக நடிக்கக் கேட்டுக்கொண்டபடி வில்லனாகவும் நடித்தார். 2011இல் [2][3] விமல் நடிக்கும் படத்தில் இயக்குநராக அறிமுகமாகத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த திட்டம் பிறகு கிடப்பில் போடப்பட்டது.[4] 2012இல் அரவாண் திரைப்படத்திலும் 2015இல் ஈட்டி திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். 2017இல் இயக்குநர் சென்னாள் பாலசெறியின் ஓணான் படத்தில் முன்னணி நடிகராக நடித்துள்ளார்.[5][6]

திரைப்படங்கள்

தொகு
  1. களவாணி (2010)
  2. முதல் இடம் (2011)
  3. அரவான் (2012)
  4. என்னமோ நடக்குது (2013)
  5. ஆப்பிள் பெண்னே(2013)
  6. பரங்கிமலை (2013)
  7. நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் (2015)
  8. 49ஒ (2015)
  9. ஈட்டி (2016)
  10. பென்சில் (2016)
  11. கட்டப்பாவ காணோம் (2017)
  12. திருநாள் (2018)
  13. அட்டு (2018)
  14. புயலாகிளம்பிவரோம்(2018)
  15. ஓணான் (2019)
  16. பெட்டிக்கடை(2019)
  17. அடங்காதே(2019)

18 . சள்ளியர்கள் (2022)

மேற்கோள்கள்

தொகு
  1. Tamil Supporting Actor Kalavani Thirumurugan, Nettv4u". nettv4u.com.
  2. Kumar, S. R. Ashok, My First Break: Thirumurugan, thehindu.com.
  3. தமிழ் சினிமா சரியான ரூட்டில் செல்கிறது! -களவாணி திருமுருகன், dinamalar.com. தினமலர், 9 பிப்ரவரி 2017
  4. விமலின் அடுத்தடுத்த படங்கள், Tamil Movie News, indiaglitz.com.
  5. Two thrillers for Kaali Venkat, Times of India, indiatimes.com.
  6. nniyan fame Sada is the heroine in Torchlight by Majith, behindwoods.com. 18 மார்ச் 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமுருகன்_(நடிகர்)&oldid=4161322" இலிருந்து மீள்விக்கப்பட்டது