திருவங்காடு இராமசாமி கோயில்

கேரளத்தில் உள்ள இராமர் கோயில்

திருவங்காடு இராமசாமி கோயில் ( மலையாளம்: തിരുവങ്ങാട് ശ്രീരാമസ്വാമി ക്ഷേത്രം ) என்பது கேரளத்தின் தலச்சேரியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு இராமர் கோயில் ஆகும். [1] [2] இத்த கோயிலின் கூரை செப்புத் தகடுகளினால் வேயபட்டுளதால் பொதுவாக இது பித்தளை பகோடா என்று அழைக்கப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தானின் படைகளினால் கோயிலின் ஒரு பகுதி சேதமடைந்தது. இது பதினெட்டாம் நூற்றாண்டில் தலைச்சேரிக் கோட்டையின் புறக்காவல் நிலையங்களில் ஒன்றாக இருந்தது. இதன் எல்லைப் பகுதிக்குள் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகளுக்கும் உள்ளூர் தலைவர்களுக்கும் இடையே பல ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் பல அரசியல் ஒப்பந்தங்களும், உடன்படிக்கைகளும் கையெழுத்திடப்பட்டன. இந்த கோவிலில் சில சுவாரஸ்யமான செதுக்கு சிற்பங்கள் உள்ளன. கோயிலின் ஆண்டு விழா மேடத்தில் (ஏப்ரல்-மே) விஷூ நாளில் தொடங்கி ஏழு நாட்கள் நடக்கும். [3]

திருவங்காடு இராமசாமி கோயில்
கோயிலின் முன்புறத் தோற்றம்
திருவங்காடு இராமசாமி கோயில் is located in கேரளம்
திருவங்காடு இராமசாமி கோயில்
கேரளத்தில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
அமைவு:தலைசேரி
ஆள்கூறுகள்:11°44′43″N 75°30′12″E / 11.74528°N 75.50333°E / 11.74528; 75.50333
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரள கோயில் கட்டடக்கலை

கேரளத்தில் இராமனுக்கு கட்டபட்ட முதன்மையான ஐந்து கோயில்களில் இதுவும் ஒன்றாகும். மற்ற நான்கு கோயில்கள் திரிநாராயணக்கூடம் (வைக்கம்), திருப்பரையார், திருவில்லுமலை, கடலூர் ஆகும். ஒரு எக்டேர் பரப்பளவில் பரவியிருக்கும் சிரா என்று அழைக்கப்படும் கோயில் குளத்துடன் சேர்த்து 2.75 ஹெக்டேர் பரப்பில் இக்கோயில் அமைந்துள்ளது, நன்கு பராமரிக்கப்படும் இந்த கோவிலில் சிறந்த மர வேலைப்பாடுகள், சுடுமண் கலை வேலைகள், கூரைகளில் மர பலகைகளில் வரையபட்ட சுவரோவியங்கள் போன்ற கலை புதையலின் களஞ்சியமாக உள்ளது. கோயிலின் பெரிய குளமானது பக்தர்களுக்கு பயனுள்ளதாகும். சத்திரம், விருந்தினர் மாளிகை, கல்யாண மண்டபம் ஆகியவை நன்கு பராமரிக்கப்படுகின்றன.

கோயிலின் பழமை

தொகு

இந்த ஆலயத்தின் தோற்றம் குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை. கேரளோல்பத்தி மற்றும் மலபார் கையேடு போன்றவற்றில் உள்ள சில குறிப்புகளைத் தவிர இந்த கோயிலின் பழமையை நிர்ணயிக்க எந்த பதிவுகளும் கிடைக்கவில்லை. கேரள மகாத்மியத்தின் கூற்றுப்படி, இந்த கோயில் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான பரசுராமரால் பிரதிட்டடை செய்யபட்டுது என்று குறிப்பிடபட்டுள்ள. இந்த கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது என் செவிவழிசெய்திகள் குறிப்பிடுகின்றன.

முக்கிய திருவிழாக்கள்

தொகு

இக்கோயிலின் மிக முக்கியமான திருவிழா விஷு மஹோத்சவம் ஆகும். இந்த திருவிழாவானது கொடிமரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாநாட்களில் நாள்தோறும் யானை ஊர்வலங்கள், சிறப்பு பூசைகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளாக ஏழு நாட்கள் நீடிக்கும். கடைசி நாளில் கோயில் குளத்தில் ஆறாட்டு விழா அதாவது கோயில் குளத்தில் தெய்வத்தை குளிப்பாட்டுவது நடக்கும். கோயிலிலன் வழிபாட்டு சடங்குகளில் கதகளி, சாக்கைக் கூத்து போன்றவை எல்லா நாட்களிலும் கோயிலில் செய்யப்படுகிறது.

கோயில் சடங்குகளின் ஒரு பகுதியாக இந்த கோயிலில் சாக்கைக் கூத்து நடத்தப்படுகிறது. மணி சக்யார் குடும்பம் பாரம்பரியமாக இதை நிகழ்த்தும் உரிமையைக் கொண்டுள்ளது. மிகச் சிறந்த சாக்கைக் கூத்து, கூடியாட்ட கலைஞரும், மேதையுமான குரு மணி மாதவ சாக்கியர் இங்கு பல தசாப்தங்கள் சாக்கைக் கூத்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். [4] [5]

 
சாக்கைக் கூத்து நிகழ்த்தும் குரு மணி மாதவ சாக்கியர்

மலையாள நாட்காட்டி மாதமான மகரத்தில் திருவோணம் நாளில் கொண்டாடப்படும் மற்றொரு முக்கியமான நிகழ்வு பட்டதனம் ஆகும்.

இங்கு மேற்கொள்ளப்படும் முக்கியமான, பிரபலமான வழிபாடு என்பது கலாபம் சார்த்தல் என்பவை ஆகும். வலியவத்தல பாயாசம், அவல் நைவேத்யம் ஆகியவையும் முக்கியமாகும்.

படக்காட்சியகம்

தொகு

மேலும் காண்க

தொகு


குறிப்புகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-11. பார்க்கப்பட்ட நாள் 2020-07-30.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-20. பார்க்கப்பட்ட நாள் 2020-07-30.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2020-07-30.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-18. பார்க்கப்பட்ட நாள் 2020-07-30.
  5. http://www.thalassery.info/religious/sreeramaswamy_temple.htm

வெளி இணைப்புகள்

தொகு