திருவரங்கம் வருவாய் கோட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டம்

திருவரங்கம் வருவாய் கோட்டம் என்பது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட புதிய வருவாய் கோட்டமாகும். இது திருவரங்கத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.

திருச்சி, லால்குடி, முசிறிக்கு அடுத்தபடியாக மாவட்டத்தில் நான்காவது வருவாய் கோட்டமாக இது அமையும். புதிய கோட்டமானது திருவரங்கம் வட்டம், மணப்பாறை வட்டம், மருங்காபுரி வட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது. திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நகரின் புறநகர் பகுதியான நாவலூர்கோட்டப்பட்டில் வருவாய் கோட்ட அலுவலகம் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு