திருவரம்பு

திருவரம்பு (Thiruvarambu) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராகும். குலசேகரத்திலிருந்து அருமனை செல்லும் சாலையில் திருவரம்பு நகரம் உள்ளது.[1][2]திருவட்டாறு நகர பஞ்சாயத்தில் இடம்பெற்றுள்ள நகரில் ஒன்றாகும். இந்த நகரத்தில் பல மத சபைகளும் கோயில்களும் உள்ளன. திற்பரப்பு அருவியிலிருந்து திருவரம்பு 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கிராமத்திற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கோதையாறு போன்ற அணைகளிலிருந்து பல ஓடைகள், கால்வாய்கள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகின்றன. தென்னை, வாழை, ரப்பர், மரவள்ளிக்கிழங்கு, மிளகு மற்றும் இதர பருப்பு வகைகள் இங்கு விளைகின்றன.

திருவரம்பு
நகரம்
திற்பரப்பு அருவி
திற்பரப்பு அருவி
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
பின்கோடு
629161
வாகனப் பதிவுTN 75

அமைவிடம்

தொகு

5 கி.மீ. தொலைவில் கிழக்கில் குலசேகரம், 10 கி.மீ. தொலைவில் மேற்கில் மார்த்தாண்டம், வடக்கில் 3 கிலோ மீட்டர் தொலைவில் திற்பரப்பு அருவி, தெற்கில் 20 கிலோ மீட்டர் தொலைவில் தக்கலை ஆகிய பகுதிகள் திருவரம்புக்கு அருகில் அமைந்துள்ளன. 15 கி.மீ. தொலைவில் குழித்துறை உள்ளது.

நிர்வாகம்

தொகு

திருவரம்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு நகர பஞ்சாயத்துக்கு உட்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வடிகால் வசதி, உள்ளூர் சாலைகள் மற்றும் நீர் வசதி ஆகியவற்றை பராமரிக்கின்றனா்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவரம்பு&oldid=4091226" இலிருந்து மீள்விக்கப்பட்டது