திருவள்ளுவர் பேரவை

அறிமுகம் தொகு

திருவள்ளுவர் பேரவை (Thiruvalluvar Peravai) உலக மக்கள் அனைவரையும் ஒன்றென மதித்து உலகப் பொதுமறையான திருக்குறளை இயற்றிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் நினைவாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள நடுவிக்கோட்டை என்னும் கிராமத்தில் வாழ்ந்து வரும் வள்ளுவர் சமுதாய மக்களை அடிப்படையாகக் கொண்டு 1932 ஆம் ஆண்டு திரு. சக்திவேல் சகோதரர்களால் உருவாக்கப்பட்டு 1972 ஆம் ஆண்டு சக்தி. நடராஜன்[1] அவர்களால் செயல் வடிவம் பெற்று நிறுவப்பட்ட ஒரு சமூக அமைப்பாகும்.

திருவள்ளுவர் பேரவை Thiruvalluvar Peravai
தலைவர்சக்தி. நடராஜன்
நிறுவனர்சக்தி. நடராஜன்
தொடக்கம்1972
தலைமையகம்திருவள்ளுவர் தெரு, நடுவிக்கோட்டை, 614 602
கொள்கைசுய சிந்தனையும், சமூக ஒற்றுமையும்.
இணையதளம்
http://www.valluvarperavai.forumvi.com
இந்தியா அரசியல்

நோக்கம் தொகு

உலகெங்கும் உள்ள வள்ளுவர் சமுதாய மக்களை கண்டறிந்து ஒன்றிணைப்பதன் மூலம் சமுதாயத்தை வலிமைப்படுத்துவதோடு, திருவள்ளுவர் போதித்த எல்லா உயிர்களும் சமம் என்ற கொள்கையை வலியுறுத்தி உலக மக்களிடம் உள்ள வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையை நிலைநாட்டுவதுமாகும்.

வள்ளுவர் சமுதாயம் தொகு

வள்ளுவர் சமுதாயம் என்பது பழமையான தமிழ் குடிகளில் ஒன்றாகும். தமிழ் மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றான சோதிடக் கலை இவர்களுடைய பாரம்பரிய தொழில். தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு சமூகத்தினருக்கும் மந்திரங்களை சொல்லி திருமணம் செய்து வைப்பதும் இவர்களின் கடமைகளில் ஒன்றாகும். மேலும் வள்ளுவன், வள்ளுவர், திருவள்ளுவர் என்ற பெயர்களில் தமிழ்நாட்டில் சில ஜாதிப்பிரிவுகள் உள்ளன. இவர்கள் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை தங்கள் முன்னோராக பாவித்து காலம் காலமாக வழிபட்டு வருகிறார்கள். எனவே இவர்கள் திருவள்ளுவரின் மரபு வழியில் வாழ்ந்து வருபவர்களாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களிடம் ஒரு கருத்து நிலவுகிறது. தமிழர்களின் திருமண முறைகளில் மணப்பந்தல் வாசலில் வாழை மரத்தினை முன்னிறுத்தியவர்கள் வள்ளுவர் குல சோதிடர்கள். இதன் மூலம் வாழை என்பது ஒரு முறை குலை ஈன்ற பின்பு மீண்டும் தார் அனுமதிக்காத சிறப்புத் தன்மை உடையது என்பதால், மண வாழ்க்கையில் இணையும் தம்பதிகள் வாழையைப் போன்று ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ வேண்டும் என்ற திருவள்ளுவரின் வாழ்வியல் கோட்பாட்டை மக்களுக்கு உணர்த்தினார்கள்.

கலை காட்சி கூடம் தொகு

  1. சக்தி. நடராஜன் அவர்கள் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் மிகவும் பிரபலமான பாரம்பரிய ஜோதிடர் ஆவார். இவர் சிறந்த மேடைப் பேச்சாளர் மற்றும் வள்ளுவர் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கும், நடுவிக்கோட்டை கிராமத்தின் ஒற்றுமைக்கும் பெரிதும் பாடுபட்டவர். வேறுபாடுகளால் பிளவுபட்டுக் கிடந்த கிராம மக்களை ஒன்றிணைத்து உறவு முறை சொல்லி பழகும் ஒற்றுமையை நடுவிக்கோட்டை கிராமத்தில் நிலை நாட்டிய பெருமை இவரையே சாரும். இன்றைய நிலையிலும் இவருடைய பெயருக்கு கிராம மக்கள் மதிப்பளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது.

வெளி இணைப்புகள் தொகு

  1. திருவள்ளுவர் பேரவை இணையதளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவள்ளுவர்_பேரவை&oldid=3639185" இலிருந்து மீள்விக்கப்பட்டது