திருவாடானை ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
திருவாடானை பஞ்சாயத்து ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இது திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வொன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவாடானையில் இயங்குகிறது. திருவாடானை பஞ்சாயத்து ஒன்றியம் 47 கிராம ஊராட்சிகளைக் கொண்டது.[2]
மக்கள் தொகை
தொகுதிருவாடானை பஞ்சாயத்து ஒன்றியத்தில் மொத்த மக்கள் தொகை 1,08,219 ஆகும். அதில் ஆண்கள் 54,503 பேரும், பெண்கள் 53,716 பேரும் உள்ளனர். அதில் பட்டியல் பிரிவு மக்கள் தொகை 18,307ஆக உள்ளது. பட்டியல் பிரிவு ஆண்கள் 9,244 பேரும், பெண்கள் 9,063 பேரும் உள்ளனர். பழங்குடி மக்கள் 184 பேர் உள்ளனர். அதில் ஆண்கள் 86 பேரும், பெண்கள் 98 பேரும் அடங்குவர். [3]
ஊராட்சிகள்
தொகுவெள்ளையாபுரம் • வட்டானம் • கல்லூர் திருவாடானை • துத்தாகுடி • திருவெற்றியூர் • டி. நாகனி • சுந்தரபாண்டியன்பட்டிணம் • சிறுமலைக்கோட்டை • சிறுகம்பையூர் • புல்லக்கடம்பன் • பெரியகீரமங்களம் • பதனகுடி • பாண்டுகுடி • பனஞ்சாயல் • ஒரிக்கோட்டை • நிலமழகியமங்களம் • நெய்வயல் • நம்புதாளை • நகரிகாத்தான் • முள்ளிமுனை • முகிழ்தகம் • மாவூர் • மங்களக்குடி • குஞ்சங்குளம் • கூகுடி • கொடிப்பாங்கு • கோடனூர் • கட்டிவயல் • கட்டவிளாகம் • கருமொழி • காரங்காடு • கலியநகரி • அரும்பூர் • அரசத்தூர் • அஞ்சுக்கோட்டை • ஆண்டாவூரணி • அச்சங்குடி
இதனையும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்