திருவாய்மொழி நூற்றந்தாதி வியாக்கியானம்

திருவாய்மொழி நூற்றந்தாதி வியாக்கியானம் [1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இதன் ஆசிரியர் பிள்ளை லோகஞ்சீயர்

திருவாய்மொழியின் பதிகங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள முதல் சொல்லையும், இறுதிச் சொல்லையும் முறையே வெண்பாவின் முதல் சொல்லாகவும், இறுதிச் சொல்லாகவும் கொண்டு ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு வெண்பா என்ற முறையில் மணவாள மாமுனிகள் செய் நூல் திருவாய்மொழி நூற்றந்தாதி இந்த 100 பாடல்களும் நம்மாழ்வாரைப் புகழ்பவை. இந்த 100 பாடல்களுக்கும் பிள்ளை லோகஞ்சீயர் விரிவுரை எழுதியுள்ளார். இந்த விரிவுரையே திருவாய்மொழி நூற்றந்தாதி வியாக்கியானம்.

வியாக்கியான முன்னுரை தொகு

பிள்ளை லோகஞ்சீயர் தன் தம் வியாக்கியானத்துக்கு எழுதியுள்ள முன்னுரை [2]

"இப்பிரபந்தங்களுக்கு அனேக நிர்பந்தங்கள் உண்டாயிறே இருப்பது அதெங்ஙனே என்னில் வெண்பா என்னும் சந்தஸ் ஆகையும் இப்படியான இப் பாட்டில் முதற் பாதியிலே ஓரோர் திருவாய்மொழியின் தாத்பரியமும் தத்சங்கதிகளடைகையும்பாட்டுக்கள் தோறும் ஆழ்வார் திருநாமங்கள் வருகையும் அதில் தாத்பரியங்களைத் தாத்பரியத்துமாய்ப் பேசுகையும் அந்தாதியாய் நடக்கையுமாகிற ஐந்து நிர்பந்தம் உண்டாயிருக்குமாயிற்று".
வியாக்கியானத் தனியன்கள் தொகு

நூற்றந்தாதியில் உள்ள தனியன்கள் இரண்டு பாடல்களுக்கும் இந்த நூலில் விரிவுரை எழுதப்படவில்லை. ஆனல் இந்த வியாக்கியானத்துக்கென இரண்டு தனியன் பாடல்கள் எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளன. அவை

1

அல்லும் பகலும் அனுபவிப்பால் தங்களைக்கு
சொல்லும் பொருளும் தொகுத்துரைத்தான் - நல்ல
மணவாள மாமுனிகள் மாறன் மறைக்குத்
தணவா நூற் றந்தாதி தான்.

2

மன்னும் புகழ்சேர் மணவாள மாமுனிகள்
நன்னருளால் உட்பொருள்கள் தன்னுடனே - சொன்ன
திருவாய் மொழிநூற்றந் தாதியாம் தேனை
ஒருவா(து) அருந்துநெஞ்சே உற்று.

அடிக்குறிப்பு தொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 109. 
  2. அவதாரிகை