திருவுள்ளக்காவு தர்ம சாஸ்தா கோயில்
திருவுள்ளக்காவு தர்ம சாஸ்தா கோயில் இந்தியாவில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் செர்பு என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும்.
மூலவர்
தொகுஇக்கோயிலின் மூலவர் தர்ம சாஸ்தா ஆவார். அவர் வில், அம்புடன் நின்ற கோலத்தில் உள்ளார். அடர்ந்த காடுகளுக்கு நடுவில் இக்கோயில் உள்ளது.
விஜயதசமி
தொகுஇக்கோயிலில் ஆன்மிகச் செயல்பாடுகள் தொடர்ந்து நடக்கின்றன. சிறப்பான கட்டுமானம் கொண்ட இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கானோர் அறிவின் விருத்திற்காக தங்கள் குழந்தைகளை அழைத்து வருகிறார்கள். காவு எழுத்தில் அகரம் வாசிக்கத் தொடங்கும் குழந்தையானது நிச்சயம் பண்டிதனாக மாறும் என்று பக்தர்களின் நம்பிக்கையாகும். குறிப்பாக சிறந்த கல்வியறிவைப் பெற விரும்புவோர் விஜயதசமி நாளில் அதிக எண்ணிக்கையில் இங்கு வருகின்றார்.
சிறப்பு
தொகுகாவு தனித்துவத்தன்மை வாய்ந்ததாகும். இங்குள்ள மூலவரான சாஸ்தா, பாவிகளை அழித்து, நல்லொழுக்கங்களைக் காக்கின்றார். அவர் கடுமையான, அதே சமயத்தில் பாதுகாப்பான அன்பின் உருவம் ஆவார். ஆனால், இவ்விடத்தில் அவர் தனது பிள்ளைகளுக்கு அவர்கள் திருப்தி அடையும் அளவுக்கு செழிப்பைப் பெற போதுமான புத்திசாலித்தனத்தை வழங்கி அருள்கிறார்..உண்மையில் திருவுள்ளக்காவு ஞானத்தின் உறைவிடமாகும். [1] [2] [3]