திரெசுகியோர்னிசு

திரெசுகியோர்னிசு
ஆத்திரேலிய வெள்ளை அரிவாள் மூக்கன் (டார்லிங் துறைமுகம், சிட்னி)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
திரெசுகியோரனிதிடே
பேரினம்:
திரெசுகியோர்னிசு

ஜோ. இரா. கிரே, 1842
மாதிரி இனம்
தி. எத்தியோபிகசு
லாத்தம், 1790
சிற்றினங்கள்

அட்டவணையில்

திரெசுகியோர்னிசு (Threskiornis) என்பது திரெசுகியோரனிதிடே குடும்பத்தைச் சேர்ந்த அரிவாள்மூக்கன், கரையோரப் பறவைகளின் ஒரு பேரினமாகும். இவை தெற்காசியா, ஆத்திரேலிய, சகாரா கீழமை ஆப்பிரிக்கா உள்ளிட்ட பழைய உலகின் வெப்பமான பகுதிகளில் காணப்படுகின்றன. இவை காலனித்துவப் பறவைகளாக உள்ளன. இவை மரம் அல்லது புதரில் குச்சிகளைக் கொண்டு கூடு கட்டி இரண்டு முதல் நான்கு முட்டைகளை இடும். இவை சதுப்பு நிலங்களில் காணப்படும் பல்வேறு மீன், தவளை, ஓட்டுமீன்கள் மற்றும் பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன. ஆங்கிலத்தில், இவை sacred ibises (புனித அரிவாள்மூக்கன்) என்று அழைக்கப்படுகின்றன. ஆத்திரேலியாவில், நகர்ப்புறத்தில் வசிக்கும் அரிவாள் மூக்கன் பேச்சுவழக்கில் "குப்பைக் கோழிகள்" என்று அழைக்கப்படுகின்றன.

விளக்கம்

தொகு

முதிர்ச்சியடைந்த திரெசுகியோர்னிசு அரிவாள் மூக்கன்கள் பொதுவாக 75 செ. மீ. நீளமும், வெள்ளை நிற உடல் இறகுகளைக் கொண்டுள்ளன. இறக்கைகளற்ற தலையுடன், கழுத்தும் கால்களும் கருப்பு நிறத்தில் உள்ளன. அலகு தடிமனாகவும் வளைந்ததாகவும் உள்ளது. பாலினங்கள் ஒத்தவை, ஆனால் இளம் வயதுப் பறவைகள் வெண்மையான கழுத்துடன் மந்தமான இறகுகளைக் கொண்டுள்ளன. வைக்கோல்-கழுத்து அரிவாள் மூக்கன் மற்ற இனங்களிலிருந்து இருண்ட மேல் பகுதிகளைக் கொண்டிருப்பதிலிருந்து வேறுபடுகிறது. மேலும் சில நேரங்களில் கார்பிபிசு இசுபின்கோலிசு என கார்பிபிசு (ஜேம்சன், 1835) தனிப் பேரினத்தில் வைக்கப்படுகிறது. பறக்க இயலாத ரீயூனியன் அரிவாள் மூக்கன் 18ஆம் நூற்றாண்டில் அழிந்தது.

சிற்றினங்கள்

தொகு
படம் விலங்கியல் பெயர் பொதுவான பெயர் விநியோகம்
  தி. எத்தியோபிகசு[1] ஆப்பிரிக்க புனித அரிவாள் மூக்கன் துணை-சஹாரா ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஈராக், மற்றும் முன்பு எகிப்து
  தி. பெர்னேரி மலகசி புனித அரிவாள் மூக்கன் மடகாசுகர்
  தி. மெலனோசெபாலசு[2] இந்திய வெள்ளை அரிவாள் மூக்கன் வட இந்தியா, வங்காளதேசம், நேபாளம், இலங்கை, சப்பான் வரை
  தி. மொலூக்கசு ஆத்திரேலிய வெள்ளை அரிவாள் மூக்கன் கிழக்கு, வடக்கு மற்றும் தென்மேற்கு ஆத்திரேலியா
  தி. இசுபின்கோலிசு வைக்கோல் கழுத்து அரிவாள் மூக்கன் ஆஸ்திரேலியா (மேற்கு ஆஸ்திரேலியா, தெற்கு ஆத்திரேலியா, தென்மேற்கு தாசுமேனியாவின் பகுதிகள் தவிர)
  தி. சாலிட்டேரியசு ரீயூனியன் அரிவாள் மூக்கன் அழிந்துபோனது, ரீயூனியன் தீவு

மேற்கோள்கள்

தொகு
  1. Lowe, Kim W.; Richards, Geraldine C. (1991). "Morphological variation in the Sacred Ibis Threskiornis aethiopicus superspecies complex". Emu 91 (1): 41–45. doi:10.1071/MU9910041. Bibcode: 1991EmuAO..91...41L. 
  2. Black-Headed Ibis". IUCN Red List. 3 June 2024. Retrieved 14 November 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரெசுகியோர்னிசு&oldid=4150588" இலிருந்து மீள்விக்கப்பட்டது