திரைப்படத்துறையில் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம்

இது 2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்று நோய் காரணமாக திரைப்படத்துறையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இதனால் திரைப்படத்துறையில் பணிபுரிந்த அணைத்து கலைத் துறையினர்களும் அதன் தாக்கத்தை எதிர்கொண்டனர். இந்த தோற்று நோய் காரணமாக உலகம் முழுவதும் திரையரங்குகள் மற்றும் படப்பிடிப்புத் தளங்கள் மூடப்பட்டுள்ளன, விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன, மேலும் திரைப்பட வெளியீடு திகதிகள் மாற்றப்பட்டன அல்லது காலவரையின்றி தாமதப்படுத்தப்பட்டுள்ளன.

திரையரங்குகள் மூடப்பட்டதால் உலகளாவிய ரீதியாக திரைபபட வசூல் பில்லியன் டாலர்கள் குறைந்துவிட்டது, ஆனால் ஓடிடி தளங்களின் புகழ் கணிசமாக அதிகரித்துள்ளது மற்றும் திரைப்பட கண்காட்சியாளர்களின் பங்குகளும் குறிப்பிட்ட அளவில் குறைந்துள்ளன. மார்ச் 2020 நடுப்பகுதியில் இருந்து வெளியிட திட்டமிடப்பட்ட பல திரைப்படங்கள் உலகம் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன அல்லது ரத்து செய்யப்பட்டு மற்றும் திரைப்பட தயாரிப்புகளும் நிறுத்தப்பட்டன.[1]

தமிழகத் திரைப்படத்துறையில் 2020 ஆம் ஆண்டில் வெளியான தர்பார் என்ற படம் 250 கோடி ரூபாவை வசூல் செய்தது.[2] இந்த படம் 9 சனவரி 2020 இல் வெளியானது. அதாவது கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக திரையரங்குகள் மூடுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த ஆண்டில் 'எயிட் ஹுன்ட்ரேட்' என்ற சீனத் திரைப்படம் உலகளவில் $468 மில்லியன் வசூல் செய்தது.[3] இது ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களில் ஹாலிவுட் திரைப்படம் அல்லாத படம் ஆகும். மார்ச் 2020 ஆரம்பத்தில் தொற்றுநோயின் விளைவாக உலகளாவிய வசூல் ரீதியாக 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு