திர்கந்தரா மண்டலா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா
திர்கந்தரா மண்டலா அருங்காட்சியகம் (Dirgantara Mandala Museum), அதிகாரப்பூர்வமாக இந்தோனேஷியன் விமானப்படையின் அருங்காட்சியகம் என்று அழைக்கப்படுகின்ற, இந்தோனேசிய விமானப் படைகளுக்கான மத்திய அருங்காட்சியகம் ஆகும்.
Museum Pusat TNI AU Dirgantara Mandala | |
The Official Logo of Museum Pusat TNI AU Dirgantara Mandala | |
நிறுவப்பட்டது | ஏப்ரல் 4, 1969 |
---|---|
அமைவிடம் | கோம்பிளக் டிஎன்ஐ ஏயுஅடி ச்ட்சிப்டோ, ஜெஎல் ராயா சோலோ,யோக்யகர்த்தா, இந்தோனேசியா |
ஆள்கூற்று | 7°47′24″S 110°24′56″E / 7.789935°S 110.415675°E |
வகை | இராணவ அருங்காட்சியகம் |
சேகரிப்பு அளவு | 1,159 |
உரிமையாளர் | இந்தோனேசிய விமானப்படை |
இந்தோனேஷியன் விமானப்படையின் வரலாறு தொடர்பான காட்சிப் பொருள்கள் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் இந்தோனேஷியவில் யோகியாகர்த்தா என்னும் இடத்தில் உள்ள அடிசுட்ஜிபிட்டோ சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது. திர்கந்தரா மண்டலா அருங்காட்சியகத்தில் இந்தோனேசியாவின் ஆகாய விமானங்கள் உள்ளிட்ட அவை தொடர்பான பல பொருள்கள் காட்சியில் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் இந்தோனேசியாவில் ஆரம்பகால பைப்ளேன் எனப்படுகின்ற இருமுனை விமானங்கள் முதல் முதல் நவீன வகையைச் சேர்ந்த ஜெட் என்ஜின் கொண்ட விமானங்கள் வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வரலாறு
தொகுஇந்தோனேசிய விமானப்படைக்கான இந்த அருங்காட்சியகம் முதன்முதலில் ஏப்ரல் 4, 1969 ஆம் நாளன்று நிறுவப்பட்டது ஆகும். முதன் முதலில் இந்த இந்தோனேசிய விமானப்படையின் அருங்காட்சியகம் ஜகார்த்தாவில் உள்ள ஜலான் தனா அபாங் புக்கிட் என்னும் இடத்தில் அமைந்திருந்தது. முதலில் அமைந்திருந்த அருங்காட்சியகத்தை இந்தோனேசிய விமானப்படையின் தலைமைப் பணியாளராக இருந்த மார்சல் ரோஸ்மின் நொர்ஜாடின் என்பவர் திறந்து வைத்தார். ஜூலை 29, 1978 ஆம் நாளன்று, அருங்காட்சியகம் கேசட்ரியன் அகாபாரி பாகியன் உதாரா என்ற இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது யோகியாகர்த்தா இந்தோனேசிய விமானப்படை துவக்கம் பெற்ற இடமாகவும், இந்தோனேசிய விமானப்படை தொடர்பான நடவடிக்கைகளுக்கான மையமாகவும் யோககர்த்தா இருந்து வந்ததால், இந்த அருங்காட்சியகம் இந்த இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர், இராணுவ விமானங்களின் வளர்ச்சி காரணமாகவும், சேகரிப்புகள் அதிகமாக ஆரம்பிக்கவும் அருங்காட்சியகத்தின் படிப்படியாக விரிவாக்கம் பெற ஆரம்பித்தது. ஆதலால் அருங்காட்சியகத்தை மீண்டும் இடமாற்றம் செய்ய திட்டம் மேற்கொள்ளப்பட்டது.[1]
அருங்காட்சியகத்தின் புதிய இடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக, இந்தோனேசிய விமானப்படை அதிகாரிகள் அடிசுட்ஜிபிட்டோ சர்வதேச விமான நிலைய வளாகத்தில் முன்பு ஒரு சர்க்கரை ஆலை அமைந்திருந்த கட்டிடத்தைத் தேர்வு செய்தனர். ஜப்பானிய ஆக்கிரமிப்பு காலகட்டத்தின் சமயத்தில், இந்த கட்டிடம் தளவாடங்களை வைக்கின்ற கிடங்காக பயன்படுத்தப்பட்டது. டிசம்பர் 17, 1982 ஆம் நாளன்று, இந்தோனேசிய விமானப்படையின் தலைமைத் தளபதி மார்ஷல் ஆஷாடி தஜ்ஜாடி ஒரு புதிய இந்தோனேசிய விமானப்படை அருங்காட்சியகத்தை நிறுவுவதற்கான தகட்டில் தன் கையொப்பத்தை இட்டார். ஏப்ரல் 11, 1984 ஆம் நாளன்று, முன்னாள் சர்க்கரை கிடங்காக இருந்த இடத்தை ஒரு அருங்காட்சியகமாக மாற்றி புனரமைப்பு செய்வதற்கான வழிமுறைகள் திட்டமிடப்பட்டன. திர்கந்தரா மண்டலா அருங்காட்சியகத்தின் கட்டடத்திற்கான கட்டுமானப் பணியானது அதே ஆண்டில் நிறைவு பெற்றது. ஜூலை 29, 1984 ஆம் நாளன்று, புதிய திர்கந்தரா மண்டலா அருங்காட்சியகம் மார்ஷல் சுகார்டி என்வரால் திறந்து வைக்கப்பட்டது.[1]
அருங்காட்சியகம் மற்றும் சேகரிப்பு
தொகுஇந்தோனேசிய விமானப்படையின் மத்திய அருங்காட்சியகமான "திர்கந்தரா மண்டலா" சுமார் 4.2 எக்டேர்கள் (10 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் மொத்த கட்டிட பரப்பளவு சுமார் 8,765 சதுர மீட்டர்கள் (94,350 sq ft) ஆகும்.[1] இந்த அருங்காட்சியகம் பல அறைகளைக் கொண்டு அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் விமான போக்குவரத்து தொடர்பான 1,159 பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[2]
இந்தோனேசிய விமானப்படையின் வளர்ச்சி தொடர்பான வரலாற்று புகைப்படங்களின் தொகுப்பினை இந்த அருங்காட்சியகத்தில் காணலாம். அருங்காட்சியகத்தில் ஏராளமான இராணுவ விமானங்களும் அவற்றின் பிரதிகளும் காட்சிக்கு உள்ளன, பெரும்பாலும் இரண்டாம் உலகப் போர் மற்றும் இந்தோனேசிய சுதந்திரப் போரைச் சேர்ந்த. குறிப்பிடத்தக்க சேகரிப்புகளில் ஒற்றை இன்ஜினைக் கொண்ட நகாஜிமா கி -43 விமானம், ஒருங்கிணைந்த பிபிஒய் கேடலினா எனப்படுகின்ற பறக்கும் படகு வகையைச் சார்ந்த விமானம் ஆகியவையும் தொலைதூர போர் விமானமான வெல்-ஐ ஆர்ஐ-எக்ஸ் (முதலில் தயாரிக்கப்பட்ட இந்தோனேசிய விண்வெளிசார் விமானம்) விமானத்தின் மாதிரியும் உள்ளது. மேலும் ஜப்பானிய ஏ6 எம்5 ஜீரோ சென், மற்றும் சில குண்டுவீசும் விமான வகைகள் (எ.கா. பி -25 மிட்செல், பி -26 இன்வேடர், டி.யு-16 பேட்ஜர் ), தொலைதூர ஒற்றை இருக்கைகொண்ட வட அமெரிக்க பி -51 முஸ்டாங் விமானம் (இந்தோனேசியாவில் பிரபலமாக எஸ்.ஐ. கோகோர் மேரா என்றழைக்கப்படுகிறது), பல கிளைடர்கள், ஹெலிகாப்டர் ஹில்லர் மாடல் 360 (ஜனாதிபதி சுகர்னோப அவர்களால் பயன்படுத்தப்பட்ட முதல் ஹெலிகாப்டர் ஹெலிகாப்டராக ) மற்றும் ஏவுகணைகள்.[1] காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டில், இந்தோனேசிய விமானப்படை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களான பிண்டாட் மற்றும் சாரி பஹாரி ஆகியவற்றுடன் இணைந்து கண்டுபிடித்த ஒன்பது குண்டுகளின் முன்மாதிரிகள் காட்சியில் உள்ளன. இந்நிறுவனங்கள் இராணுவ மற்றும் வணிகம் தொடர்பான தயாரிப்புகளில் அனுபவம் பெற்ற நிறுவனங்கள் ஆகும். இந்த குண்டுகள் நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்ற குண்டுகள் ஆகும். மேலும் அவை மற்றும் அதிக வெடிக்கும் தன்மையினைக் கொண்ட குண்டுகள் ஆகும். அவை இந்தோனேசிய விமானப்படையின் சுகோய் சு -30, எஃப் -16, எஃப் -5, ஸ்கை ஹாக், சூப்பர் டுகானோ போன்ற விமானங்களில் பயன்படுத்தும் அளவில் அவை இருந்தன.[3]
மேலும் பார்க்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Museum Pusat TNI AU Dirgantara Mandala". Museum Indonesia. Museum Indonesia. 2009. பார்க்கப்பட்ட நாள் November 18, 2017.
- ↑ "Museum Pusat TNI AU Dirgantara Mandala Yogyakarta | Jogja Budaya". navigasi-budaya.jogjaprov.go.id. Archived from the original on நவம்பர் 8, 2017. பார்க்கப்பட்ட நாள் November 18, 2017.
- ↑ "Museum Pusat TNI-AU Dirgantara Mandala Tambah Koleksi Alutsista 9 Buah Prototype Bom Buatan Dislitbangau". TNI Angkatan Udara. Dinas Penerangan - Tentara Nasional Indonesia Angkatan Udara. February 14, 2015. Archived from the original on November 18, 2017. பார்க்கப்பட்ட நாள் November 17, 2017.