திறந்தவெளி சிறைச்சாலை
திறந்தவெளி சிறைச்சாலை என்பது நல்ல உடல் மற்றும் மனநலத்துடன் இருக்கும் சிறைக் கைதிகளை நம்பிக்கையின் அடிப்படையில் குறைந்த மேற்பார்வை மற்றும் காவலுடன் அறைகளில் அடைத்துப் பூட்டாமல் குறிப்பிட்ட சுதந்திரத்துடன் வைத்திருக்கும் ஒரு முறைசாராச் சிறைச்சாலை ஆகும். இவ்வகைச் சிறைச்சாலைகளில் குற்றவாளிகளுக்கு தொழிற் பயிற்சிகள் தருதல், விவசாயம் போன்ற ஏதேனும் தொழில்களை மேற்கொள்ள அனுமதித்தல் போன்றவை சிறப்பம்சம் ஆகும். இதன் மூலம் அவர்களின் தண்டனைக் காலம் பயனுள்ளதாக்கப்படுவதோடு தண்டனைக் காலத்திற்குப் பிறகான அவர்கள் வாழ்க்கைக்கும் உத்தரவாதம் அளிக்கிறது.
சில திறந்தவெளி சிறைகள்
தொகு- எர்வாடா திறவெளி சிறைச்சாலை, புனே, மகாராஷ்டிரா.
- சிங்காநல்லூர் திறந்தவெளி சிறைச்சாலை, கோயம்புத்தூர் மாவட்டம்
- புருசடை உடைப்பு திறந்தவெளி சிறைச்சாலை, சிவகங்கை மாவட்டம்[1]
- பொன்னலறுவை திறவெளி சிறைச்சாலை (முன்மொழியப்பட்டுள்ளது)
மேற்கோள்கள்
தொகு- ↑ "புருசடை திறந்தவெளி சிறைச்சாலை". தினத் தந்தி நாளிதழ். பார்க்கப்பட்ட நாள் 10 திசம்பர் 2013.