திறந்த சமூக அறக்கட்டளை

திறந்த சமூக அறக்கட்டளை (Open Society Foundations) முன்னர் திறந்த சமூக நிறுவனம் (Open Society Institute') அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஜார்ஜ் சொரெஸ் எனும் பெரும் செல்வந்தரால் 1993ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. [3] திறந்த சமூக அறக்கட்டளையானது உலகெங்கிலும் உள்ள சிவில் சமூகக் குழுக்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளிக்கிறது. மேலும் நீதி, கல்வி, பொது சுகாதாரம் மற்றும் சுதந்திரமான ஊடகங்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் நிதியுதவி வழங்குகிறது.[4][5]இதன் தலைமையிடம் அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியு யார்க் நகரத்தின் மன்ஹாட்டன் பகுதியில் இயங்குகிறது. தற்போது இதன் நிறுவனரான ஜார்ஜ் சொரோசின் மகன் அலெக்சாண்டர் செரோஸ் தலைவராக உள்ளார்.

திறந்த சமூக அறக்கட்டளைகள்
Open Society Foundations
சுருக்கம்OSF
உருவாக்கம்ஏப்ரல் 1993; 31 ஆண்டுகளுக்கு முன்னர் (1993-04)
நிறுவனர்ஜார்ஜ் சொரெஸ்
வகைஅறக்கட்டளை
தலைமையகம்
நிறுவனர்
அலெக்சாண்டர் செரோஸ் (ஜார்ஜ் சொரோசின் மகன்)
தலைவர்
பினய்பர் நவ்ரோஜி[1]
வருவாய் (2021)
$988 மில்லியன்[2]
அறக்கட்டளை (2021)$5.89 பில்லியன்[2]
வலைத்தளம்opensocietyfoundations.org இதை விக்கித்தரவில் தொகுக்கவும்
முன்னாள் பெயர்
திறந்த சமூக நிறுவனம்

2015ஆம் ஆண்டு முடிய இந்த அறக்கட்டளைக்கு உலகம் முழுவதும் 37 நாடுகளில் கிளைகள் கொண்டுள்ளது.[6] இந்த அறக்கட்டளையானது மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா பகுதிகளில் தனித்தனி அறக்கட்டளைகள் நிறுவியுள்ளது.

2018ஆம் ஆண்டில் இந்தஅறக்கட்டளையின் நடவடிக்கைகளுக்கு அங்கேரி நாடு எதிர்ப்பு தெரிவித்ததால், இது தனது கிளையை பெர்லின் நகரத்திற்கு மாற்றியது.[7] 2021ஆம் ஆண்டில் இந்த அறக்கட்டளை உலகம் முழுவதிலும் உள்ள அரசுசாரா தொண்டு நிறுவனங்களுக்கு $16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மானியமாக நிதி வழங்கியுள்ளது. [8]

மேற்கோள்கள்

தொகு
  1. Binaifer Nowrojee Appointed New President of Open Society Foundations
  2. 2.0 2.1 "Open Society Institute - Nonprofit Explorer". ProPublica (in ஆங்கிலம்). 9 May 2013. பார்க்கப்பட்ட நாள் 13 December 2023.
  3. Duszak, Alexandra (December 21, 2012). "Donor profile: George Soros". Center for Public Integrity. http://www.publicintegrity.org/2012/12/21/11975/donor-profile-george-soros. 
  4. Harvey, Kerric (2013). Encyclopedia of Social Media and Politics. SAGE Publications. p. 919. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781483389004.
  5. "Open Society Foundations mission and values", OSI, Soros, September 6, 2012.
  6. Callahan, David (September 14, 2015). "Philanthropy vs. Tyranny: Inside the Open Society Foundations' Biggest Battle Yet". Inside Philanthropy. http://www.insidephilanthropy.com/home/2015/9/14/philanthropy-vs-tyranny-inside-the-open-society-foundations.html. 
  7. "The Open Society Foundations to Close International Operations in Budapest". Open Society Foundations (in ஆங்கிலம்). May 15, 2018. பார்க்கப்பட்ட நாள் May 15, 2018.
  8. "Financials". Open Society Foundations. பார்க்கப்பட்ட நாள் 20 January 2021.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திறந்த_சமூக_அறக்கட்டளை&oldid=4091730" இலிருந்து மீள்விக்கப்பட்டது