தில்லி பாரம்பரிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை நிறுவனம்

குரு கோபிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சிக் கல்லூரி

தில்லி பாரம்பரிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை நிறுவனம் (Delhi Institute of Heritage Research & Management) தில்லி அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சிக் கல்லூரியாகும். குரு கோபிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகத்துடன் இந்நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது. புது தில்லியில் உள்ள குதுப் நிறுவனப் பகுதியில் அமைந்துள்ளது.[1] குரு கோவிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு மூலம் தில்லி பாரம்பரிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் சேர்க்கை நடைபெறுகிறது. தொல்லியல் மற்றும் பாரம்பரிய மேலாண்மையில் முதுகலை மற்றும் முதுநிலை பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய மேலாண்மை படிப்புகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.[2]

தில்லி பாரம்பரிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை நிறுவனம்
Delhi Institute of Heritage Research & Management
வகைஅரசு நிறுவனம்
பணிப்பாளர்அம்சத் தாக்
அமைவிடம், ,
வளாகம்குதுப் நிறுவனப் பகுதி
சேர்ப்புகுரு கோபிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகம்
இணையதளம்dihrm.delhigovt.nic.in/

மேற்கோள்கள் தொகு

  1. "LIST OF GOVERNMENT INSTITUTES FOR THE ACADEMIC SESSION 2018-19". பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.
  2. "Admissions & Courses". Archived from the original on 30 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)