திவிசீமா
திவிசீமா (Diviseema) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் கிருட்டிணா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மற்றும் ஆற்று முகத்துவாரத் தீவாகும். இது அவணிகட்டா, கொடுரு மற்றும் நாகயலங்கா ஆகிய மூன்று மண்டலங்களை உள்ளடக்கியுள்ளது.
சொற்பிறப்பு
தொகுதிவிசீமா என்ற சொல் தெய்வத்தின் தங்குமிடம் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. [1] [ சரிபார்ப்பு தோல்வியுற்றது ] திவிசீவி என்ற பெயரிலிலுள்ள என்ற இரண்டு சொற்களில் திவி என்றால் 'தீவு' எனவும், சீமா என்றால் தெலுங்கில் 'பகுதி' அல்லது 'நாடு' என்றும் பொருள்படும். திவிசீமா (தீவிசீமா எனவும் உச்சரிக்கப்படுகிறது) என்றால் 'தீவின் பகுதி' என்பதாகும்)
நிலவியல்
தொகுதிவிசீமா புலிகடாவில் (அவணிகட்டா) உருவாக்கப்பட்ட ஆற்று முகத்துவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கிருட்டிணா ஆறு வங்காள விரிகுடாவில் இணைவதற்கு முன்பு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று வங்காள விரிகுடாவின் கம்சலாதீவி (கொதுரு மண்டலம்) மற்றும் மற்றொன்று குல்லாலமோடா (நாகயலங்க மண்டலம்) அருகே இணைகிறது.
இது கிருட்டிணா ஆறு மற்றும் அதன் நீர் வழங்கும் பகுதிகளுடன் இணைந்த ஒரு வளமான தாழ்வான சமவெளியாகும். விசயவாடாவில் உள்ள பிரகாசம் தடுப்பணையிலிருந்து எடுக்கப்பட்ட கால்வாய் பாசனத்தின் மூலம் இது பாசனம் செய்யப்படுகிறது. பாலகாயத்திப்பாவில் கிருட்டிணா ஆறு மற்றும் வங்காள விரிகுடாவின் சங்கமம் ஒரு வார இறுதியில் சுற்றுலாப் பயணமாகவும், ஒரு யாத்திரை மையமாகவும் உள்ளது. கடலை நோக்கி, திவிசீமா செழிப்பான சதுப்பு நிலங்களைக் கொண்டுள்ளது. மேலும், இது கிருட்டிணா வனவிலங்கு சரணாலயம் என்றும் அறிவிக்கப்படுகிறது.
சூறாவளி
தொகு1977 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி இந்த பிராந்தியத்தில் ஏற்பட்ட ஆந்திரா சூறாவளியின் போது எதிபாராதவகையில் மனித உயிர்களின் இழப்பு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரழிவின் விளைவாக 10,000 பேரும் 10,00,000 விலங்குகளும் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. தப்பிப்பிழைத்தவர்கள் பெரும்பாலும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரசாங்க முயற்சிகள் காரணமாக மீட்கப்பட்டனர். [2]
குறிப்புகள்
தொகு- ↑ Ravikumar, Aruna (14 August 2016). "A river of talent". www.thehansindia.com. பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
- ↑ Diviseema Social Service Society