திவ்யா கக்ரன்

திவ்யா கக்ரன்(Divya Kakran) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மல்யுத்த வீராங்கனையாவார். இவர் 1998ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ஆம் தேதி பிறந்தார். கட்டற்ற முறை மல்யுத்தப் போட்டிகளில் இவர் இந்தியாவுக்காகப் போட்டியிட்டு வருகிறார். நொய்டா உடற்கல்வி கல்லூரியில்,  உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியல் இளங்கலை மாணவரான கக்ரன் இந்திய ரயில்வேயில் பணிபுரிகிறார்.

திவ்யா கக்ரான்
தனிநபர் தகவல்
குடியுரிமைஇந்தியா
பிறப்புபுர்பலியன், முசாபர்நகர், உத்தர பிரதேசம்
ஆண்டுகள் செயலில்2008 முதல்
Employerஇந்திய இரயில்வே
விளையாட்டு
விளையாட்டுமல்யுத்தம்
பயிற்றுவித்ததுவிக்ரம் குமார் சோன்கர்
பிரேம் நாத்
பதக்கத் தகவல்கள்
மகளிர் மற்போர்
நாடு  இந்தியா
பொதுநலவாய விளையாட்டுக்கள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 கோல்ட் கோஸ்ட் 68 கிலோ
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2022 பிர்மிங்காம் 68 கிலோ
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 ஜகார்த்தா 68 கிலோ
ஆசிய மல்யுத்த விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2021 அலமாத்தி 72 கிலோ
தங்கப் பதக்கம் – முதலிடம் 2020 புது டெல்லி 68 கிலோ
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2017 புது டெல்லி 69 கிலோ
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2019 சியன் 68 கிலோ
பொதுநலவாய மல்யுத்த விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2017 ஜோகனஸ்பேர்க் 69 கிலோ

2017ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் யோகனேசுபேர்க்கில் நடைபெற்ற பொதுநலவாய மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 2018ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொதுநலவாய மல்யுத்தப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.[1] 2020ஆம் ஆண்டு மதிப்புமிக்க அருச்சுனா விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி

தொகு

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள பூர்பலியன் கிராமத்தை சேர்ந்த மல்யுத்த வீரரான சூரஜ்வீர் சைன் மற்றும் சன்யோகிதா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் கிராம அளவில் விளையாடுவதைத் தவிர வேறு அடையாளத்தை மல்யுத்தத்தில் உருவாக்க சைனால் முடியவில்லை. ஆனால் தனது குழந்தைகளை சிறந்த மல்யுத்த வீரர்களாக மாற்றும் லட்சியத்தை வளர்த்தார்.

குழந்தையாக இருந்த போது திவ்யா தனது தந்தையுடன் கிராம அகாதா (மல்யுத்த குழி) செல்வார். அங்கு, இவரது தந்தை, மூத்த சகோதரரான தேவிற்கு பயிற்சி அளித்தார். கிராமத்தில் போதிய வசதிகள் இல்லாதது மற்றும் மல்யுத்தம் என்பது ஆண்களுக்கான விளையாட்டு என கருதும் சமூகத் தடைகள் தன் மகளுக்கும் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக சைன், தில்லிக்கு குடிபெயர முடிவு செய்தார்.

இந்நிலையில் தில்லியிலும் பயிற்சியாளர் அஜய் கோஸ்வாமி,  ஒரு பெண் மல்யுத்தம் செய்வதை மறுத்த மற்ற வீரர்களையும் பயிற்சியாளரையும் ஒப்புக்கொள்ள செய்ய வற்புறுத்த வேண்டியிருந்தது.  இளம் வீரராக தில்லி, அரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிராமப்புறங்களில் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார் திவ்யா. அவருக்கு எதிராக போட்டியிட பெண்கள் இல்லாததால் ஆண் போட்டியாளர்களை எதிர்த்து மல்யுத்தம் செய்தார். 2010ஆம் ஆண்டு, வெறும் 12 வயதில், திவ்யா ஒரு ஆண் போட்டியாளரை தோற்கடித்தார்.

இந்த எல்லாக் காலங்களிலும் வசதி பற்றாக்குறை ஒரு சவாலாகவே இருந்தது. [2] தனது மனைவி சன்யோகிதாவால் தைக்கப்பட்ட மல்யுத்த போட்டிகளில் லாங் கோட் (இந்திய மல்யுத்த வீரர்கள் அணியும் ஆடை) விற்கப் பழகினார்  சுரஜ்சைன்.

தேசிய விளையாட்டுகளில் கிராப்பிலர்ஸ் வகை விளையாட்டில் பங்கேற்பதற்காக ரூ.1,00,000 [ 1,335 $ தோராயமாக ] கட்டணமாக கொடுக்க தேவைப்பட்டதால் திவ்யாவின் தாயார் தனது நகைகளை அடமானம் வைக்க வேண்டியிருந்தது. திவ்யா 15 ரூபாய் [ 0.20$ தோராயமாக] மதிப்புள்ள குளுக்கோசை குடித்துவிட்டு போட்டிகளில் சண்டையிட்டதாக ஒரு நேர்காணலில் அவர் கூற, அதற்குப்பிறகு, அவருக்கு உதவிகள் வந்து குவியத்தொடங்கின.

22 வயதாகும் திவ்யா, தனது வெற்றிக்காக, தனது சகோதரர் அவரின் கல்வியையும் மல்யுத்தத்தையும் தியாகம் செய்ததை புரிந்து கொள்கிறார். தனது சகோதரியின் பயிற்சிக்கு உதவுவதோடு மற்ற நகரங்களில் நடக்கும் பயிற்சி முகாம்களுக்கு அவருடன் செல்கிறார் தேவ்.[2]

திவ்யா ஒருபோதும் தனது கருத்துகளை வெளிப்படுத்த தயங்கியதில்லை. தன்னிடம் தோல்வியுற்ற்ற வீரர், சாதியில் உயர்ந்தவர் என்பதால், தன்னிடம் தோல்வியுற்றதற்காக கேலி செய்யப்பட்டபோதும், ஏழை விளையாட்டு வீரருக்கு தேவைப்படும் காலங்களில் அரசாங்கத்தின் உதவியை பெற இயலாது என முதலமைச்சரிடம் கூறியபோதும், இவர் தயங்கியது இல்லை.[5]

நவம்பர் 29 அன்று திவ்யாவிற்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

வெற்றிகள்

தொகு
  • 2011ல் பள்ளி அளவில் ஹரியானாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் முதன் முறையாக பதக்கம் வென்றார். அன்று அவர் வென்றது வெண்கலம். குரு பிரேம்நாத் அகாதாவில் பயிற்சியாளர் விக்ரம் குமாரின் கீழ் பயிற்சியைத் தொடங்கிய போது இவரின் விளையாட்டு மேம்பட்டது.
  • 2013ல் இந்தியாவிற்காக கக்ரன் மங்கோலியாவில் நடந்த சர்வதேச போட்டியில் முதல்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • 2017 திவ்யா காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம், ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்று, தேசிய சாம்பியன்ஷிப் மற்றும் அகில இந்திய பல்கலைக்கழக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார்.[3]
  • 2018-ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[4]
  • 2020ல் 68 கிலோ பிரிவில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார்.
  • சிறந்த விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தியதற்காக, இந்திய அரசு, 2020ஆம் ஆண்டு, அவருக்கு அர்ஜூனா விருது அளித்தது.

பதக்கங்கள்

தொகு
  • 2020 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 68 கிலோ தங்கம்
  • 2018 காமன்வெல்த் விளையாட்டு 68 கிலோ வெண்கலம்
  • 2018 ஆசிய விளையாட்டு 68 கிலோ வெண்கலம்
  • 2017 காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் 68 கிலோ தங்கம்
  • 2017 மூத்த தேசிய சாம்பியன்ஷிப் 68 கிலோ தங்கம்
  • 2017 அகில இந்திய பல்கலைக்கழக சாம்பியன்ஷிப் 68 கிலோ தங்கம்
  • 2017 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 68 கிலோ வெள்ளி.

மேற்கோள்கள்

தொகு
  1. "பிபிசி இந்தி".
  2. "Wrestling down stereotypes, Divya Kakran now targets Asian Games". The Sunday Guardian Live (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-07-28. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
  3. "Commonwealth Games 2018: With talent on her side, Divya Kakran will aim to wrestle her way to gold". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
  4. "Asian Games 2018, Day 3, Highlights: As It Happened". News18 (in ஆங்கிலம்). 2018-08-21. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவ்யா_கக்ரன்&oldid=3905060" இலிருந்து மீள்விக்கப்பட்டது