திவ்யா மதர்னா
திவ்யா மதர்னா (Divya Maderna) என்பவர் இராசத்தானைச் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு உறுப்பினராக உள்ளார். மதர்னா 2018ஆம் ஆண்டு தேர்தலில் ஓசியன் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
திவ்யா மதர்னாDivya Maderna | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், இராசத்தான் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 திசம்பர் 2018 | |
முன்னையவர் | பைரராம் சவுத்ரி |
தொகுதி | ஓசியன் |
உறுப்பினர், மாவட்டக்குழ், சோத்பூர் | |
பதவியில் 2010 to 2018 | |
தொகுதி | பகுதி எண்.11 |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 அக்டோபர் 1984 செய்பூர், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | குரு ஜம்பகேசுவர் நகர், காந்தி பாத், செய்பூர் |
கல்வி | இளங்கலை பொருளியல் |
முன்னாள் கல்லூரி | புனே பல்கலைக்கழகம் |
வேலை | விவசாயம் |
வாழ்க்கை
தொகுமதர்னா அரசாங்க அமைச்சர் மகிபால் மதர்னா மற்றும் லீலா மதர்னாவின் மகள் ஆவார்.[2] இவரது தாத்தா பரசுராம் மதேர்னாவும் அரசியல்வாதி ஆவார். இராசத்தான் சட்டமன்றத்தில் அமைச்சராக பணியாற்றினார்.
மதர்னா இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2010-ல், தனது 26 வயதில், சோத்பூரில் உள்ள ஒசியனில் நடந்த மாவட்ட குழுத் தேர்தலில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] இவர் 2018ஆம் ஆண்டு இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசின் சார்பில் சோத்பூரின் ஓசியனில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Return To The Raj". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-14.
- ↑ "Divya Maderna reposes faith in Congress and Ashok Gehlot - Times of India". https://timesofindia.indiatimes.com/city/jaipur/Divya-Maderna-reposes-faith-in-Congress-and-Ashok-Gehlot/articleshow/21287056.cms.