தி. சா. ராஜு
தி. சா. ராஜு (பிறப்பு: 15 ஆகத்து 1926) தமிழக எழுத்தாளரும், பொறியாளரும் , இராணுவ அதிகாரியும், ஓமியோபதி மருத்துவரும் ஆவார். தி. சா. ராஜு, சிவகுமாரன் ஆகிய பெயர்களில் இவர் எழுதியுள்ளார்.[1] 1996 இல் இவருக்கு தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.
தி. சா. ராஜு | |
---|---|
பிறப்பு | தில்லைஸ்தானம் சாம்பசிவ ஐயர் ராஜு 15 ஆகத்து 1926 தில்லைஸ்தானம், தஞ்சாவூர் |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | சிவகுமாரன் |
பணி | பொறியாளர், இராணுவ மேஜர் ஜெனரல், ஓமியோபதி மருத்துவர் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
விருதுகள் | தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது (1996) |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுதில்லைஸ்தானம் சாம்பசிவ ஐயர் ராஜு என்ற இயற்பெயர் கொண்ட தி. சா. ராஜு திருவையாற்றை அடுத்துள்ள தில்லைஸ்தானம் என்ற ஊரில் பிறந்தவர். இவரது தந்தை சாம்பசிவ ஐயர் விடுதலைப் போராட்ட வீரர், தமிழ், சமற்கிருத மொழிகளில் புலமை கொண்டவர். இயந்திரவியலில் பொறியியல் பட்டம் பெற்ற ராஜு இந்திய இராணுவத்தில் மேஜராகச் சேர்ந்தார். பல ஆண்டுகள் பஞ்சாபில் பணியாற்றினார்.[1]
எழுத்துப் பணி
தொகுதான் பணியாற்றிய இடங்களின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் பற்றி அவர் பல கட்டுரைகளை கல்கியில் எழுதினார். இவற்றில் 'பட்னாவைப் பார்த்தேன்', 'பனி மலர்கள்' என்ற தொடர்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும். இவரது சிறுகதைகள் கல்கி, கலைமகள், தினமணி கதிர், ஆனந்த விகடன், மஞ்சரி ஆகிய இதழ்களில் வெளிவந்தன. பஞ்சாபியரான மேஜர் ஜெனரல் ஆகுலுவாலியா எழுதிய தன்வரலாற்று நூலை தமிழில் 'மன்னும் இமயமலை' என்ற தலைப்பில் எழுதி நூலாக வெளியிட்டார். இவரது 'அட, மண்ணில் தெரியுதோர் வானம்' என்ற மொழிபெயர்ப்புத் தொடர் தினமணி கதிரில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.[1]
ஓமியோபதி மருத்துவம்
தொகுராஜு ஐதராபாதில் பணியாற்றிய சேசாச்சாரி என்ற ஓமியோபதி மருத்துவரிடம் முறையாக ஓமியோபதியைக் கற்றுத் தேர்ந்து மருத்துவரானார். தனது ஓமியோபதி அனுபவங்களைத் தொகுத்து 'ஹோமியோபதி மருத்துவம்' என்ற தலைப்பில் நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.[1]
விருதுகள்
தொகு- 1996 இல் மங்கியதோர் நிலவினிலே என்ற நூலுக்காக மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதமி விருது.[2]
- சிறுகதைகளுக்காக தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தங்கப் பதக்கம்[1]
எழுதிய நூல்கள்
தொகுசிறுகதைத் தொகுப்புகள்
தொகு- காட்டுநிலா
- பட்டாளக்காரன்
- ஒளிவிளக்கு
- அட மண்ணில் தெரியுது வானம்
- நாத அலைகள்
புதினங்கள்
தொகு- லெஃப்டினண்ட் கோவிந்தன்
- காட்டாறு
- காளியின் கருணை
- விண்மட்டும் தெய்வமன்று
- பாப்ஜி
- ஒரு நாற்காலியின் கதை
- இசைக்க மறைந்த பாடல்
- எங்கிருந்தோ வந்தான்
மொழிபெயர்ப்பு நூல்கள்
தொகு- இதுதான் நம் வாழ்க்கை
- மங்கியதோர் நிலவினிலே (சாகித்திய அகாதமி விருது பெற்றது)
- மன்னும் இமௌஅமலை
- பெண்ணொன்று பூமிதனில் பிறந்து விட்டால்
- நமது தரைப்படை
- நமது வான்படை
கட்டுரை நூல்கள்
தொகு- மகாகவி பாரதியார் கவிதையும் வாழ்கையும்
- பாரதி ஒரு வாழ்நெறி
- பாரதி போற்றிய மன்னரும் உபநிடதங்களும்
- பாவேந்தரின் பாரதி
- உலகம் உவப்ப
- துப்பாக்கி உமது தோழன்
- மருத்துவம் சில சிந்தனைகள்
- நம்பிக்கைக்குரிய நம் வீரர்
- நாமிருக்கும் நாடு
- நிகழ்ச்சிகள் நினைவுகள்
- ஹோமியோபதி மருத்துவம்
- ஹோமியோபதி கனிமங்கள்
- ஹோமியோபதி அற்புதங்கள்
- ஹோமியோபதி என்றால் என்ன?
- பலமுனை நிவாரணிகள் பன்னிரண்டு
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 தி. சா. ராஜு, அர்விந்த், தென்றல், சூலை 2022
- ↑ எனக்குப் பிடித்த கதைகள், பாவண்ணன், திண்ணை, அக்டோபர் 30, 2003