தி கப்

1999 பூட்டானியத் திரைப்படம்

தி கப் (The Cup, திபெத்தியம்: ཕོར་པ། அல்லது Phörpa) என்பது ஒரு 1999 ஆண்டைய திபெத்திய மொழித் திரைப்படமாகும். இப்படத்தை அறிமுக இயக்குநரான கைண்ட்சே நோர்பு எழுதி இயக்கியுள்ளார். இதன் கதையானது 1998 பிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண ஆர்வம் கொண்ட இரண்டு இளம் திபெத்திய அகதி துறவிகள், இமயமலையில் தொலைதூரத்தில் உள்ள மடாலயத்திற்கு ஒரு தொலைக்காட்சிப் பெட்டியைப் பெற தீவிரமாக முயற்சிப்பதை அடிப்படையாக கொண்டது.

தி கப்
குறுவட்டு அட்டை
இயக்கம்கைண்ட்சே நோர்பு
தயாரிப்புஜெர்மி தாமஸ்
ரேமண்ட் ஸ்டெய்னர்
மால்கம் வாட்சன்
கதைகைண்ட்சே நோர்பு
நடிப்புஓர்கியன் டோப்கியால், நெட்டன் சொக்லிங்
விநியோகம்பாம் பிக்சர்ஸ்
ஃபைன் லைன் பியூச்சர்ஸ் (அமெரிக்கா)
வெளியீடு29 ஆகத்து 1999 (1999-08-29)
ஓட்டம்93 நிமிடங்கள்
நாடுபூட்டான்
மொழி
  • Hindi
  • Tibetan

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்கு பூடானின் சார்பில் சென்ற படம் தி கப் ஆகும். ஆனால் இப்படம் விருதுக்குப் பரிந்துரைக்கப்படவில்லை.

இரண்டு இளம் திபெத்திய அகதிகள் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துவந்துள்ள ஒரு மடத்திற்கு வருகிறார்கள். அதன் அமைதியான சூழ்நிலை கால்பந்து காய்ச்சலால் பாதிக்கப்படுகிறது, அதற்கு முக்கியத் தூண்டுதலாக ஒரு இளம் மாணவர், கால்பந்து ஆர்வலர் ஆர்கியன் ஆவார். பிரான்சுக்கும் பிரேசிலுக்கும் இடையிலான 1998 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியைக் காணத் தீர்மானித்த அவர், மடத்திற்கு ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை வாடகைக்கு ஏற்பாடு செய்யத் தொடங்கினார். இது மாணவர்கள், துறவிகள் ஆகியோரின் ஒற்றுமை, வளம், நட்பு ஆகியவற்றுக்குச் சோதனையாக மாறுகிறது.

தயாரிப்பு

தொகு
 
எழுத்தாளர்-இயக்குனர் கைண்ட்சே நோர்பு 2006 இல்

தி கப் இந்தியாவில் (இமாச்சலப் பிரதேசம்) உள்ள திபெத்திய அகதிகள் கிராமமான பிரில் (கிட்டத்தட்ட முழுக்க சோக்லிங் கோம்பா மற்றும் எலு சாலைக்கு இடையில்) படமாக்கப்பட்டது.[1]

தயாரிப்பாளர் ஜெர்மி தாமஸ் பெர்டோலூசியின் லிட்டில் புத்தா படத்தின் ஆலோசகராக இருந்தபோது நோர்புவுடன் உறவை வளர்த்துக் கொண்டார்.

வெளியீடு

தொகு

தி கப் 2007, நவம்பர், 13 அன்று வட அமெரிக்காவில் ஃபெஸ்டிவல் மீடியா (ஐபிஎஃப்எஃப்) மூலம் குறுவட்டாக வெளியிடப்பட்டது. குறுவட்டானது அசல் படத்தின் ஒரு புதிய நேரடி-டிஜிட்டல் பரிமாற்றமாக இருந்தது. மேலும் கூடுதலாக அந்தக் குறுவட்டில் இன்சைட் தி கப் என்ற ஆவணப்படமும் அடங்கி இருந்தது. அதில் இயக்குநர் திரைப்படம், பௌத்த தத்துவம் போன்றவை குறித்து கலந்துரையாடுகிறார்.[சான்று தேவை]

வரவேற்பு

தொகு

விமர்சனத் திரட்டியான அழுகிய தக்காளிகள் இப் படத்திற்கு 85% மதிப்பீட்டை அளித்தது.[2]

பிபிசியிலிருந்து எழுதிய டாம், " உண்மையான நகைச்சுவை மிக்க மிகுந்த விரும்பக்கூடியதான, ஈடுபாட்டுடன் பார்க்கதக்க படைப்பு. இதில் உலகளாவிய கருப்பொருள்கள் - பண்டைய மரபுகளுக்கும் நவீனமயமாக்கலுக்கும் இடையிலான மோதல் போன்றவை நேரடியான கதைக்களத்திலிருந்து இயற்கையாகவே வெளிப்படுகின்றன" என்றார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Susan Jakes (January 27, 2003). "The God of Small Films". Time Magazine இம் மூலத்தில் இருந்து May 9, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070509052137/http://www.time.com/time/magazine/article/0,9171,411452,00.html. பார்த்த நாள்: 2009-06-13. 
  2. "The Cup - Rotten Tomatoes". www.rottentomatoes.com (in ஆங்கிலம்). 2000-01-28. பார்க்கப்பட்ட நாள் 2023-08-01.
  3. "BBC - Films - review - The Cup (Phörpa)". www.bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2023-08-01.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_கப்&oldid=4046191" இலிருந்து மீள்விக்கப்பட்டது