தி கிளாஸ் பேலஸ்

2000 ஆண்டைய புதினம்

தி கிளாஸ் பேலஸ் என்பது அமிதவ் கோசு ன்ற எழுத்தாளர் 2000 த்தில் எழுதிய வரலாற்று புதினமாகும். இந்தப் புதினம் பர்மா, வங்காளம், இந்தியா மற்றும் மலாயில் நிகழ்வதாக அமைக்கப்பட்டுள்ளது, பர்மாவின் மீதான பிரித்தனின் படையெடுப்பு மற்றும் அதன் விளைவாக மண்டலேயில் உள்ள கோன்பவுங் வம்சத்தின் வீழ்ச்சி, இரண்டாம் உலகப் போர் என 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை நீள்கிறது. குறைந்த எண்ணிக்கையிலான சலுகை பெற்ற குடும்பங்களின் கதைகள் மூலம், பர்மா, இந்தியா மற்றும் மலாயாவை அவர்கள் இன்று இருக்கும் இடங்களுக்கு மாற்றியமைத்த போராட்டங்களை இது விளக்குகிறது.[1]

பர்மிய மன்னரின் அரண்மனை,ரத்னகிரி. நாவலின் சில உண்மையான கதாபாத்திரங்களில் ஒன்றாகும்.

பர்மாவின் பொருளாதார வீழ்ச்சி, மரம் மற்றும் ரப்பர் தோட்டங்களின் எழுச்சி, பிரித்தன் இராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்கள் எதிர்கொள்ளும் தார்மீக சங்கடங்கள் மற்றும் இரண்டாம் உலகப் போரின் பேரழிவு விளைவுகள் உள்ளிட்ட காலனித்துவ காலத்தின் பல்வேறு அம்சங்களை இது ஆராய்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முக்கியமாக கவனம் செலுத்துவதன் மூலம், பர்மா மற்றும் இந்தியாவின் மாறிவரும் பொருளாதார நிலப்பரப்பில் இருந்து, எப்படி ஒரு தேசத்தை உருவாக்குவது, சமூகத்தின் இந்த மாற்றங்கள் நவீனத்துவத்தின் அலைகளால் எவ்வாறு அடித்துச் செல்லப்படுகின்றன என்பது தொடர்பான பொருத்தமான கேள்விகள் வரை பரந்த அளவிலான சிக்கல்களை ஆராய்கிறது.[2] இந்த புதினத்தின் பெயர் கிளாஸ் பேலஸ் குரோனிகலில் இருந்து உருவானது, இது 1829 ஆம் ஆண்டில் பாகியடா மன்னரால் படைக்கப்பட்ட பழைய பர்மிய வரலாற்றுப் படைப்பாகும்.

சுருக்கம்தொகு

மா சோ என்ற பெண்ணைக் கண்டுபிடிப்பதற்காக மாண்டலே நகரம் வழியாக இராஜ்குமார் என்ற 11 வயது சிறுவன் பர்மாவுக்கு செல்வதிலிருந்து இப்புதினம் தொடங்குகிறது. அவன் தனது குடும்பத்தில் எஞ்சியிருக்கும் கடைசி உறுப்பினராக இருக்கிறான். மேலும் பிரகாசமான ஒரு தொழிலைத் தொடங்கும் மனப்பான்மையுடனும், வெற்றிக்கான பசியுடனும் இந்தியாவில் இருந்து பர்மாவுக்கு வருகிறான்.

மா சோவின் உணவுக் கடையில் உதவியாளராக ராஜ்குமாரின் பணி கண்ணாடி அரண்மனையின் ஆர்ம்பிக்கிறது, இதில் அரசன் திபாவும் அவரது மனைவியும் தங்கள் மகள்களான இளவரசிகளுடன் வசிக்கின்றனர். ஆட்சியைக் கவிழ்க்க பிரித்தன் படையெடுப்பு நிகழ்ந்தபோது, மண்டலேயின் அன்றாட குடிமக்கள் அரண்மனை வளாகத்திற்குள் நுழைய முடிகிறது, அதன்பிறகு இராஜ்குமார் இளவரசிகளின் உதவியாளர்களில் ஒருவரான தோலியை காதலிக்கிறார். இதற்கிடயில் முழு அரச குடும்பமும் அவர்களது பரிவாரங்களும் பிரித்தானியரால் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுகிறார்கள்.அங்கே அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு கதை செல்கிறது. பின்னர். மலாயாவில் ஒரு ரப்பர் தோட்டத்தில் இராஜ்குமாரின் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய வாழ்க்கை பற்றியும் மலாயா மற்றும் பர்மா மீதான ஜப்பானிய படையெடுப்பு மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட உயிர்கள் மற்றும் சொத்துக்களின் குடும்ப இழப்புகள் பற்றியும், இரண்டாம் உலகப் போருக்குப் பின் சிதறிய குடும்பங்களின் வாழ்க்கை பற்றியும் விவரிக்கிறது.

விருதுகள் மற்றும் மொழிபெயர்ப்புகள்தொகு

தி கிளாஸ் பேலஸ் 2001 காமன்வெல்த் எழுத்தாளர்கள் விருதான "சிறந்த புத்தகம்" பிரிவில் யூரேசிய பிராந்திய வெற்றியாளராக இருந்தது,[3] ஆனால் அமிதவ் கோசு தனது வெளியீட்டாளர்கள் இப்புத்தகத்தை சமர்ப்பித்ததை அறிந்திருக்கவில்லை, எனவே அவர் பிராந்திய சுற்றில் வென்றதை அறிந்து அதை திரும்பப் பெற்றார்.[4] இது புனைக் கதைக்கான பரிசு, பிராங்பர்ட் மின்புத்தக விருது, 2001 [5] மற்றும் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிடத்தக்க புத்தகங்கள் 2001 ஆகியவற்றையும் வென்றது .

தி கிளாஸ் பேலஸ் 25 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இது எழுத்தாளர் நெய் வின் மைன்ட் என்பவரால் பர்மிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பர்மாவின் முன்னணி இலக்கிய இதழ்களில் ஒன்றான ஸ்வே அமியுதேயில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது . நாவலின் கடைசி பகுதி ஆங் சான் சூகிக்கு இறங்கற்பாவாக இருப்பதால், பர்மிய பத்திரிகை ஆய்வு வாரியம் மொழிபெயர்ப்பில் பல வெட்டுக்களைக் ஏற்படுத்தியது.[6] பர்மிய மொழிபெயர்ப்பு 2012 இல் மியான்மர் தேசிய இலக்கிய விருதை வென்றது.[7]

குறிப்புகள்தொகு

  1. Ghosh, Amitav (2000). The Glass Palace. பக். Back cover. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0375758771. 
  2. There'll Always Be an England in India, www.nytimes.com, 2008-01-14 அன்று பார்க்கப்பட்டது
  3. "Wild West at the London Book Fair", The Guardian, guardian.co.uk = 24 March 2001, 2001-03-24, 2001-03-24 அன்று பார்க்கப்பட்டது
  4. Amitav Ghosh - The Writer of Truth, Kavita Chhibber
  5. Amitav Ghosh re-emerges with Sea of Poppies, The Hindu
  6. The Glass Palace - Now in Burmese, Amitav Ghosh, 14 May 2009, 2009-05-14 அன்று பார்க்கப்பட்டது
  7. http://www.amitavghosh.com/awards.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_கிளாஸ்_பேலஸ்&oldid=2908146" இருந்து மீள்விக்கப்பட்டது