தி கேரளா ஸ்டோரி
தி கேரளா ஸ்டோரி[4] என்பது 2023ஆம் ஆண்டு வெளியான இந்திய மொழி நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் மற்றும் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா ஆவார்.[5] இதில் அதா சர்மா, யோகிதா பிகானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்கள் குழு இசுலாம் சமயத்திற்கு மாற்றப்பட்டு இசுலாமிய போராளிக் குழுவில் சேரும் கதையில் தொடர்கிறது. இந்தத் திரைப்படம் லவ் ஜிகாத் என்ற சதி கோட்பாட்டை[6] முன்வைத்து, கேரளாவைச் சேர்ந்த பல இந்து மற்றும் கிறித்துவப் பெண்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டு இசுலாமிய போராளிக் குழுவில் சேர்க்கப்படுவதாக கூறுகிறது.[7]
தி கேரளா ஸ்டோரி | |
---|---|
இயக்கம் | சுதிப்தோ சென் |
தயாரிப்பு | விபுல் அம்ருத்லால் ஷா |
கதை | சுதிப்தோ சென் விபுல் அம்ருத்லால் ஷா சூர்யபால் சிங் |
இசை | வீரேஷ் சிறீவல்சா |
நடிப்பு | ஆதா சர்மா, யோகிதா பிகானி, சோனியா பாலானி, சித்தி இட்னானி |
ஒளிப்பதிவு | பிரசாந்த்தானு மகாபாத்ரா |
படத்தொகுப்பு | சஞ்சய் சர்மா |
கலையகம் | சன்சைன் பிக்சர்ஸ் |
வெளியீடு | 5 மே 2023 |
ஓட்டம் | 138 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம் |
ஆக்கச்செலவு | ரூபாய் 15–20 கோடி[2] |
மொத்த வருவாய் | மதிப்பீடு: 81.36 கோடி[3] |
இத்திரைப்படம் 5 மே 2023 அன்று வெளியானது. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்னரும், பின்னரும் ஆதரவும், எதிர்ப்பும் இருந்தது. இத்திரைப்படம் ₹81.36 கோடி (US$10 மில்லியன்) வசூலித்து. 2023ஆம் ஆண்டில் ஐந்தாவது-அதிக வசூல் செய்த இந்தித் திரைப்படமாக மாறியுள்ளது. இத்திரைப்படம் உலகின் 37 நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது.[8]
விமர்சனம்
தொகுபல சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் இடையே வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில், ஆப்கானிஸ்தான்-ஈராக்-துருக்கி-சிரியா உள்ளிட்ட நாடுகளில் எல்லைப் பகுதிகளில் ஆயுத தாக்குதல் நடத்தும் இசுலாமியப் போராளிக் குழுக்களிடம் சிக்கிக் கொள்ளும் 3 கேரளாப் பெண்களின் வலிகளை வெளிப்படுத்தும் துயரமிக்க கதை ஆகும். கேரளாவில் உள்ள கிறிஸ்தவ, இந்துப் பெண்கள் இஸ்லாமிய ஆண்களால் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்ற கருத்தை சொல்ல இத்திரைப்பபடம் முனைகிறது.
திரைப்படத்தின் கதாநாயகியான மூன்று பெண்களும் தன் சக இஸ்லாமிய தோழி ஒருவரால் மூளைச் சலவை செய்யப்படுகிறார். பெண்கள் தங்கள் முகத்தை புர்காவுக்குள் ஒளித்துக் கொள்ள வேண்டும். அப்போது தீய ஆண்களின் பார்வை நம்மீது படாது. இந்த உலகை காக்க வந்த ஏக இறைவன் அல்லா மட்டுமே எனக் கூறி அந்தப் பெண் இந்து, கிறிஸ்தவ பெண்ணை மூளைச் சலவை செய்கிறார்கள். சில இடங்களில் லவ் ஜிகாத் பற்றி படம் பேசுகிறது. இஸ்லாமிய ஆண்கள் தங்களின் கருவை அப்பாவி பெண்களின் வயிற்றில் வளரச் செய்கிறார்கள் என்று திரைப்படம் கூறுகிறது. மேலும் இந்தப் பெண்கள் பாலியல் அடிமைகளாக, தற்கொலைப் படையினராக மாற்றப்படுகின்றனர் எனவும் படம் கூறுகிறது. சமூக வலைதளத்தில் இத்திரைபடத்திற்கு நேர்மறையான விமர்சனம் வழங்கிய ஜோத்பூர் நபர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது.[9]
வழக்கு
தொகுஇத்திரைப்படத்தை மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாட்டில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டதால், இப்படத்தயாரிப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 12 மே 2023 அன்று உச்ச நீதிமன்றம் மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.[10][11][12][13][14] 18 மே 2023 அன்று இந்த வழக்கில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கான தடையை நீக்கி உத்தரவிட்டது. தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்காள அரசு விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்த இந்திய உச்ச நீதிமன்றம், இத்திரைப்படம் திரையிடும் திரையரங்குகளில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மேற்கு வங்கம் மற்றும் தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.[15] [16] [17]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Change City". m.inoxmovies.com. Archived from the original on 8 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-05-08.
- ↑ "'Will rock box office': The Kerala Story destined to earn Rs 100 crore despite Bengal ban". Business Today (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-05-11.
- ↑ Hungama, Bollywood. "The Kerala Story Box Office Collection | India | Day Wise | Box Office - Bollywood Hungama". Bollywood Hungama (in ஆங்கிலம்). Archived from the original on 7 May 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-05-07.
- ↑ The Kerala Story
- ↑ "'The Kerala Story', starring Adah Sharma, gets release date" (in en-IN). The Hindu. PTI. 2023-04-24 இம் மூலத்தில் இருந்து 26 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230426101932/https://www.thehindu.com/entertainment/movies/the-kerala-story-starring-adah-sharma-gets-release-date/article66772994.ece.
- ↑ Love jihad conspiracy theory
- ↑ "Kerala Story: Film on alleged Indian ISIL recruits gets pushback" இம் மூலத்தில் இருந்து 6 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230506192343/https://www.aljazeera.com/news/2023/5/4/kerala-story-film-on-alleged-indian-isil-recruits-gets-pushback.
- ↑ எதிர்ப்புகளுக்கு மத்தியில் 37 நாடுகளில் வெளியாகும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம்
- ↑ ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம் செய்த நபர் மீது சரமாரி தாக்குதல் - போலீஸார் வழக்குப் பதிவு
- ↑ The Kerala Story row | Supreme Court questions West Bengal ban, TN alert on The Kerala Story
- ↑ The Supreme Court issued notices to West Bengal and Tamil Nadu over their ban on ‘The Kerala Story’
- ↑ 'தி கேரளா ஸ்டோரி' திரைப்பட விவகாரம் - மேற்கு வங்காளம் அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
- ↑ SC issues notice to Bengal over 'The Kerala Story' ban, questions Tamil Nadu on security for theatre
- ↑ SC notice to West Bengal over 'Kerala Story' ban
- ↑ தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கான தடை நீக்கம் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- ↑ Supreme Court directs West Bengal government to lift ban on ‘The Kerala Story’, ensure safety of moviegoers
- ↑ Supreme Court lifts ban on film The Kerala Story in West Bengal