தி மெட்ராஸ் டைம்ஸ்
தி மெட்ராஸ் டைம்ஸ் (The Madras Times) என்பது 1835 முதல் 1921 வரை அப்போதைய சென்னை மாகாணத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆங்கில மொழிப் பத்திரிகை ஆகும்.
வகை | நாளிதழ் |
---|---|
மொழி | ஆங்கிலம் |
தலைமையகம் | சென்னை |
நாடு | இந்தியா |
வரலாறு
தொகு1835-36 ஆம் ஆண்டுகளில் வார இதழாக சென்னை மெட்ராஸ் டைம்ஸ் நிறுவப்பட்டது என்று சென்னை வரலாற்றாளர் சு. முத்தையா கூறுகிறார். பெரும்பாலான ஆதாரங்கள் 1859 ஆம் ஆண்டில், கண்ட்ஸ் அண்ட் சன்சால் கையகப்படுத்தப்பட்ட ஆண்டையே, செய்தித்தாள் நிறுவப்பட்ட நாளாக குறிப்பிடுகின்றன. தென்னிந்தியாவின் முதன்மையான செய்தித்தாளான த ஸ்பெக்டேட்டரை கண்ட்ஸ் அண்ட் சன்ஸ் வாங்கியது. இந்த செய்தித்தாளானது 1860இல் நாளிதழாக மாற்றப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தி சென்னை டைம்ஸ் செழித்தோங்கியது. 1870கள் மற்றும் 1880களில், இந்த இதழாசிரியராக வில்லியம் டிஜ்பீ சீமோர் இருந்தார். 1921 ஆம் ஆண்டில், தி மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிகையை தொழிலதிபர் ஜோன் ஓக்ஷோட் ராபின்சன் வாங்கினார். இந்த நாளிதழ் பின்னர் தி மெயிலுடன் இணைக்கப்பட்டது.
சார்புநிலை
தொகுஇந்த செய்தித்தாளானது தன் கருத்துக்களில் தாராளவாதத்தைக் கடைபிரித்தது, இந்திய சுதேச மக்களிடமும் பிரித்தானியர்களிடையேயும் இணக்கமான உறவு கொண்டிருந்தது. இந்த இதழுக்கு 1860 களில் சார்லஸ் கார்னிஷ் மற்றும் ஹென்றி கார்னிஷ் ஆகியோர் ஆசிரியராக இருந்தனர். பத்திரிக்கை நிர்வாகத்துடன் இந்த இருவருக்கும் ஏற்பட்ட மோதலையடுத்து பத்திரிக்கையில் இருந்து வெளியறி, தி மெட்ராஸ் மெயில் பத்திரிக்கையைத் துவக்கினர். இவர்கள் துவக்கிய இந்தப் பத்திரிக்கை 1800 களின் பிற்பகுதி முழுவதும் தி மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிகையின் மிகப் பிரபலமானதாகவும், போட்டியாளராக இருந்தது.
மேற்கோள்கள்
தொகு- Muthiah, S. (2004). Madras Rediscovered. East West Books (Madras) Pvt Ltd. pp. 51–53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88661-24-4.