தீரஜ் பிரசாத் சாகு
இந்திய அரசியல்வாதி
தீரஜ் பிரசாத் சாகு (Dhiraj Prasad Sahu) (பிறப்பு:23 நவம்பர் 1959), இந்தியாவின் ஜார்க்கண்டு மாநில இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியும், மாநிலங்களவை உறுப்பினரும்[1], தொழிலபதிபரும் ஆவார். இவர் தற்போது மூன்று முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியில் உள்ளார்.[2]
தீரஜ் பிரசாத் சாகு | |
---|---|
மாநிலங்களவை உறுப்பினர், ஜார்க்கண்டு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 மே 2018 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 நவம்பர் 1959 லோகர்தகா, ஜார்க்கண்டு, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் |
|
உறவினர் | சிவபிரசாத் சாகு (சகோதரர்) |
முன்னாள் கல்லூரி | மார்வாரி கல்லூரி, ராஞ்சி |
2023 வருமான வரி சோதனைகள்
தொகுமதுபான உற்பத்தி தொழிற்சாலைகள் நடத்தி வரும் தீரஜ் பிரசாத் சாகுவிற்கு சொந்தமான ஒடிசா மற்றும் ஜார்க்கண்டு மாநிலங்களில் டிசம்பர் 2023ல் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடததியதில், தற்போது வரை ரூபாய் 350 கோடிக்கு மேல் ரொக்கப் பணம் கைப்பற்றியுள்ளனர்.[3]ஐந்து நாட்களைத் தாண்டி சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விமர்சனங்கள்
தொகுஇந்திய தேசிய காங்கிரசு கட்சியை குறி வைத்து தாக்குவதற்காக இது போன்ற நடவடிக்கைகள் பாரதிய ஜனதா கட்சி மேற்கொள்கிறது என காங்கிரசு கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.[4]