தீரேந்திர கிசோர் சக்கரவர்த்தி

இந்திய புவியியலாளர் மற்றும் தொல்லியல் நிபுணர்

தீரேந்திர கிசோர் சக்கரவர்த்தி (Dhirendra Kishore Chakravarti) ஓர் இந்திய புவியியலாளர் மற்றும் தொல்லியல் நிபுணராவார். 1902 ஆம் ஆன்டு இவர் பிறந்தார். பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் தற்போதைய அறிவியல் நிறுவனத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் புவியியல் அருங்காட்சியகத்தில் இவர் பணியாற்றினார்.

1934 ஆம் ஆண்டிலேயே பிராச்சிபோதோசரசு கிராவிசு டைனோசர் இனத்தை முதன் முதலில் இவர் விவரித்தார். இப்போது இது சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படுகிறது. [1]

1935 ஆம் ஆண்டில் இலாமெட்டாசரசு இண்டிகசு என்ற டைனோசர் ஒரு கவச டைனோசர் என்று விளக்குவதில் இவர் போட்டியிட்டார். மேலும் இது வெவ்வேறு மரபுத்திரி எண்ணிக்கை கொண்ட உடல் அணுக்கள் கொண்டது என்ற பொருள்படும் ஒரு சைமரா என்றும் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டில், இந்திய புவியியல் சமூகம் தீரேந்திர கிசோர் சக்கரவர்த்தி நினைவாக பல்வேறு கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டது. [2]

வெளியீடுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Moore, Randy (23 July 2014). Dinosaurs by the Decades: A Chronology of the Dinosaur in Science and Popular Culture. Greenwood. p. 193. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0313393648. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
  2. Chakravarti, D. K.; Bhattacharya, A. K.; Indian Geological Congress (1985). Proceedings of Indian Geological IVth Session Congress, Varanasi, 1982 : a volume in honour of Prof. D.K. Chakravarti. New Delhi : Today & Tomorrow's Printers and Publishers. இணையக் கணினி நூலக மைய எண் 14215358. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.