தீரேந்திர பால் சிங்
தீரேந்திர பால் சிங் (Dhirendra Pal Singh) என்று அழைக்கப்படும் தீ. பா. சிங் (D. P. Singh)ஓர் இந்தியக் கல்வி நிர்வாகி ஆவார். இவர் 22 ஆகத்து 2022 அன்று உத்தரப் பிரதேச அரசு இவரை முதலமைச்சரின் கல்வி ஆலோசகராக நியமித்தது. மேலும் 2024 ஏப்ரல் 28 அன்று டாட்டா சமூக அறிவியல் நிறுவனத்தின் வேந்தராக இந்திய அரசின் மத்தியக் கல்வி அமைச்சகத்தால் 2029 ஏப்ரல் 30 வரை ஐந்து ஆண்டு காலத்திற்கு சிங் நியமிக்கப்பட்டார்.[1]
தீரேந்திர பால் சிங் | |
---|---|
சிங் 2018-இல் | |
தலைவர்-பல்கலைக்கழக மானியக் குழு | |
பதவியில் 2018–2021 | |
முன்னையவர் | வேத பிரகாசு |
பின்னவர் | எம் ஜகதீசு குமார் |
இயக்குநர்-தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை | |
பதவியில் 2015–2017 | |
முன்னையவர் | ஏ. என். ராய் |
பின்னவர் | எசு. சி. சர்மா |
துணைவேந்தர்-தேவி அகில்யா வித்யாலயா | |
பதவியில் 2012–2015 | |
24வது துணைவேந்தர்-பனாரசு இந்து பல்கலைக்கழகம்]] | |
பதவியில் 8 மே 2008 – 21 ஆகத்து 2011 | |
நியமிப்பு | பிரதிபா பாட்டில் |
முன்னையவர் | பஞ்சாப் சிங் |
பின்னவர் | லால்ஜி சிங் |
துணைவேந்தர்-டாக்டர். ஹரி சிங் கவுர் பல்கலைக்கழகம் (மத்தியப் பல்கலைக்கழகம்) | |
பதவியில் 7 அக்டோபர் 2004 – 7 மே 2008 | |
முன்னையவர் | சந்தோஷ் குமார் |
பின்னவர் | நம்தியோ கஜ்பியே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 7 திசம்பர் 1956 |
தேசியம் | இந்தியர் |
டாக்டர் ஹரி சிங் கவுர் பல்கலைக்கழகம், பனாரசு இந்து பல்கலைக்கழகம் மற்றும் தேவி அகல்யா விசுவவித்யாலயா ஆகிய மூன்று வெவ்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார். இவர் பெங்களூரில் உள்ள தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார அவையின் இயக்குநராகவும் புது தில்லியிலுள்ள பல்கலைக்கழக மானியக் குழு தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
கல்விப் பணி
தொகுசிங் மூன்று வெவ்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார். 2004 முதல் 2008 வரை மத்தியப் பிரதேசத்தின் சாகரில் அமைந்துள்ள மத்தியப் பல்கலைக்கழகமான டாக்டர் ஹரி சிங் கவுர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.[2] 2008 முதல் 2011 வரை உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி உள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார். இறுதியாக 2012 முதல் 2015 வரை மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள தேவி அகல்யா விசுவவித்யாலயாவின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.[2] ஆகத்து 2015இல் இவர் தேசிய பெங்களூரில் உள்ள தேசியத் தர மதிப்பீடு மற்றும் அங்கீகார அவையின் இயக்குநராக ஐந்து ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டார். இருப்பினும், திசம்பர் 2017இல் புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார். ஏப்ரல் 28, 2024 அன்று, இவர் இந்திய அரசின் மத்தியக் கல்வி அமைச்சகத்தால் ஐந்து ஆண்டு காலத்திற்கு டாட்டா சமூக அறிவியல் நிறுவனத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Former UGC chairman Dhirendra Pal appointed education adviser to CM Yogi Adityanath". The Indian Express (in ஆங்கிலம்). 2022-08-22. பார்க்கப்பட்ட நாள் 2022-08-22.
- ↑ 2.0 2.1 "Prof. D. P. Singh Profile" (PDF). NAAC. Archived from the original (PDF) on 27 January 2018. பார்க்கப்பட்ட நாள் 25 December 2017.