தீவிரவாதியாய் இருந்த சீமோன்
தீவிரவாதியாய் இருந்த சீமோன் (Simon the Zealot) அல்லது புனித சீமோன் என்பவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவரைப் பற்றி விவிலியத்தில் லூக்கா நற்செய்தி 6:15 மற்றும் அப்போஸ்தலர் பணி 1:13 இல் காணக்கிடைக்கின்றது. இயேசு கிறித்துவின் திருத்தூதர்களிலேயே மிகவும் குறைவான செய்தி இருப்பது இவரைப்பற்றிதான். இவரின் பெயரைத் தவிற விவிலியத்தில் இவரைப்பற்றி வேறு எதுவும் இல்லை. புனித ஜெரோம் எழுதிய புனிதர்களின் வரலாற்று நூலிலும் கூட இவரைப்பற்றி குறிப்பிடவில்லை.
புனித சீமோன் | |
---|---|
புனித சீமோன், ஓவியர்: பீட்டர் பவுல் ரூபென்ஸ் (சுமார்: கி.பி 1611இல்) | |
திருத்தூதர், இரத்தசாட்சி | |
பிறப்பு | கானான் |
இறப்பு | ~65 அல்லது ~107[1] |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை; கிழக்கு மரபுவழி திருச்சபை; ஆங்கிலிக்க ஒன்றியம்; லூதரனியம்; |
முக்கிய திருத்தலங்கள் | துலூஸ்; புனித பேதுரு பேராலயம்[2] |
திருவிழா | அக்டோபர் 28 (கிழக்கு கிறித்தவம்); மே 10 (மரபு வழி திருச்சபைகள்) |
சித்தரிக்கப்படும் வகை | படகு; சிலுவை மற்றும் இரம்பம்; மீன் (அல்லது இரண்டு மீன்கள்); ஈட்டி; இரண்டாக அறுக்கப்படும் மனிதன்; படகு துடுப்பு[2] |
பாதுகாவல் | மரம் வெட்டுவோர், கரியர்கள்[2] |
இவர் இரம்பத்தால் இரண்டாக அறுக்கப்பட்டு மறைசாட்சியாய் மரித்தார் என்பர்.
இவரின் திருப்பண்டங்கள் புனித பேதுரு பேராலயத்தில் இடப்பக்கம் உள்ள புனித யோசேப்பு பீடத்தின் அடியில் புனித யூதா ததேயுவின் கல்லரையினோடு வைக்கப்பட்டிருக்கின்றது.
ஆதாரங்கள்
தொகு- ↑ "St. Simon the Apostle" (in Italian). Blessed Saints and Witnesses. 2005-03-15. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2010.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ 2.0 2.1 2.2 Jones, Terry H. "Saint Simon the Apostle". Saints.SQPN.com. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2010.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)