தீவிரவாத எதிர்ப்புத் தினம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மறைந்த தினம் தீவிரவாத எதிர்ப்பு தினம் என அனுசரிக்கப்படுகிறது.
நோக்கம்
தொகுதீவிரவாதம் என்னும் சவாலை அரசியலுக்கு அப்பாற்பட்டு கடுமையாகவும் உறுதியாகவும் எதிர்கொள்வதையும், நாகரிக மற்றும் ஜனநாயக வாழ்க்கை முறைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற கோட்பாட்டில் உறுதியாக இருக்கவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
தீவிரவாதம்
தொகுஒப்புக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிகளுக்கு புறம்பாக ஒரு தனிப்பட்ட மனிதன் அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உயிர், உடைமைகள், கண்ணியம் அல்லது நம்பிக்கைகள், கொள்கைகள் ஆகியவற்றை பறிக்கும் எந்த ஒரு செயலும் பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் ஆகும். ஒரு அரசினை எதிப்பவர்களை ராணுவம், காவல் துறை மற்றும் உளவுத்துறை மூலமாக கொல்லுவது, சித்திரவதை செய்வது, நாடு கடத்துவது போன்றவையும் பயங்கரவாதத்தின் ஒரு அங்கமே.இவை அரச பயங்கரவாதம் என்று அழைக்கப்படும்.
தீவிரவாதம் உருவாக காரணங்கள்
தொகு- வேலைவாய்ப்பின்மை
- வளர்ச்சியடையாத விவசாயம்
- குறைந்த சம்பளம்
- பூகோள ரீதியாக தனிமைபடுத்தப்படுதல்
- நிலச்சீர்திருத்தங்கள்
- நிர்வாகக் குறைபாடு - ஆகியவை தீவிரவாதம் வளர முக்கிய காரணிகளாக விளங்குகிறது.
கட்டுப்படுத்துதல்
தொகு- மோதிக்கொள்ளும் இரு தரப்பிற்கும் இடையில் சமாதான முயற்சிகளை மேற்கொள்ளுதல்
- தகுந்த பொருளாதார மற்றும் சமுதாய வளர்ச்சியை ஏற்படுத்துதல்
- பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்தல்
- தீவிரவாதிகளை கடுமையாக தண்டித்தல் போன்றவற்றின் மூலம் தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்தலாம்.