தீவிர பெண்ணிடைப் பாலுறவு

தீவிரப் பெண்ணிடைப் பாலுறவு (Radical lesbianism) அல்லது மரபுகடப்பு பெண்தற்பாலின உறவு என்பது ஓர் அகனள் இயக்கம் ஆகும், இந்தப் பெண் தற்பால்சேர்க்கை முதன்மைப் பெண்ணியத்தின் கலப்புப் பாலின உறவைக் கேள்விக்குள்ளாக்கியது. ஏனெனில் முதன்மைப் பெண்ணியம் முனைப்பாக அகனள் உரிமைகளைப் பெண்ணியப் போராட்டங்களில் சேர்க்கவில்லை அல்லது அதற்காகப் போராடவில்லை. 1950 மற்றும் 1960 களில் அமெரிக்காவில் அகனள் பெண்ணியக் குழுக்களால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. ஒரு கனடிய இயக்கம் 1970 களில்தொடர்ந்து இதனைச் செயல்படுத்தி வந்தது. [1] இது தொடர்ந்து பரவலாகி வருவதால், தீவிர பெண்ணிடைப் பாலுறவு வாதம் கனடா, அமெரிக்கா பிரான்சு ஆகிய நாடுகள் முழுவதிலும் பரவியது. பிரஞ்சு அகனள் மரபெதிர்ப்பாளர் முன்னணி 1981 ஆம் ஆண்டில் ஃபிரண்ட் டெசு லெஸ்பியனசு ரேடிகல்சு எனும் பெயரில் அந்த இயக்கத்தினை நடத்தியது. [2] மரபுகடப்புஅகனள் போன்ற பிற இயக்கங்களும் தீவிரப் பெண்ணிடைப் பாலுறவுப் பேரியக்கத்திலிருந்து பிரிந்து வெளியேறின. பிற சமூக இயக்கங்களுடன் தொடர்பு கொள்வதோடு மட்டுமல்லாமல் தீவிர பெண்ணிடைப் பாலுறவு, அதன் சொந்தக் கருத்தியலையும் வழங்குகிறது; இது பெண்ணியம் இரண்டு பாலுறவு நிலைகளிலும் செயல்படுவது போன்றது தான்.

வரலாறு

தொகு

தீவிரமான அல்லது "பிரிவினைவாத" பெண்ணிடைப் பாலுறவும் பிற ஒத்த இயக்கங்களும் பரந்த பெண்ணிய இயக்கத்துடன் பிளவுபட்டு நிற்கின்றன. அவர்களில் சில பெண்ணியவாதிகள், அகனள் பெண்ணியத்தின் குறிக்கோள்களுடன் உள்ளார்ந்த மோதல்கள் கொண்டுள்ளதைச் சமரசம் செய்ய முயற்சி செய்கிறார்கள். இந்த மோதல்களும் விரிசல்களும் பெண்களைச் சுற்றிப் பரவியுள்ள தேசிய அளவில் குறிப்பாக பண்பாட்டுக் கதைகளிலிருந்து எழும் சிக்கல்களின் விளைவாகும். அவர்களில் சிலர் இந்த தேவைகளுக்கு ஏற்ப தன்னியல்பாக உருவாக்கப்படுகிறார்கள், மற்றவர்கள் அயல்நாடுகளில் உள்ள தீவிர இயக்கங்களிலிருந்து ஊக்கம் பெறுகிறார்கள். தீவிரப் பெண்ணிடைப் பாலுறவின் இயக்கத்தின் தொடக்க வரலாறு, இது தான் எனத் தெளிவான வரலாறு இல்லை என்றாலும், தேசிய அளவில் நடந்த பல தனித்தனிப் போராட்டங்களின் விளைவாக எழுந்ததே ஆகும். .[3]

பன்னாட்டளவில் நெருங்கிவரும் பெண்ணிய இயக்கத்தைப் பயன்படுத்தி, தீவிர அகனள் இயக்கம் பெரும்பாலும் பெண்ணிடைப் பாலுறவின் வெளிப்படுத்தலை அதிகரிக்க, அவற்றில் தங்கள் சொந்த நிகழ்வுகளை உருவாக்கிட முயல்கின்றனர். ஸ்டோன்வாலின் 25 வது ஆண்டுவிழாவில், நியூயார்க்கில் நடைபெற்ற 1994 அகனள் அணிவகுப்பு இதற்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு ஆகும். மற்றொரு எடுத்துகாட்டு 1995 பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக மகளிர் மாநாடு ஆகும். மூன்றாவது எடுத்துகாட்டு 1997 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற கே கேம்ஸ் ஆகும். .[4]

ஆசியா

தொகு

ஆசியாவில், தீவிர பெண்ணிடைப் பாலுறவு ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவை விட ஒரு பத்தாண்டு பின்தங்கியிருந்தது, 1980 களில் இந்த இயக்கம் தொடங்கவில்லை. இந்த காலகட்டத்தில்தான் ஆர்வலர்கள் தங்கள் சொந்த குழுக்களை உருவாக்கி தங்கள் சொந்த வெளியீடுகளை உருவாக்கத் தொடங்கினர். .[5]

ஐரோப்பா

தொகு

பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் நிலவிய சூழ்நிலைகளுக்கு எதிர்வினையாக, 1970 களில் ஐரோப்பிய தீவிர அகனள் வாதம் வளர்ச்சி பெற்றது. பன்னாட்டு அகனள் முன்னணி எனும் இயக்கம் 1974 இல் ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் உருவாக்கப்பட்டது. .[5] பன்னாட்டு பெண்ணிடைப் பாலுறவு தகவல் தொகுப்பு(ILIS) 1977 இல் நெதர்லாந்து, ஆம்சுட்டர்டாமில் உருவாக்கப்பட்டது.[5]

பிரான்சு

தொகு

ஒரு கனடிய இயக்கம் 1970 களில்தொடர்ந்து இதனைச் செயல்படுத்தி வந்தது. [1] இது தொடர்ந்து பரவலாகி வருவதால், தீவிர பெண்ணிடைப் பாலுறவு வாதம் கனடா, அமெரிக்கா பிரான்சு ஆகிய நாடுகள் முழுவதிலும் பரவியது. பிரஞ்சு அகனள் மரபெதிர்ப்பாளர் முன்னணி 1981 ஆம் ஆண்டில் ஃபிரண்ட் டெசு லெஸ்பியனசு ரேடிகல்சு எனும் பெயரில் அந்த இயக்கத்தினை நடத்தியது. [6] அமெரிக்க, கனடிய இயக்கங்களைப் போலவே, பிரெஞ்சு தீவிரப் பெண்ணிடைப் பாலுறவு இயக்கமும் பெண்ணிய, பொது அரசியல் இயக்கத்தில் இருந்தே தமக்குரிய வெளியை உருவாக்கிக் கொண்டன. இவர்கள் கலப்புப் பாலுறவுப் பெண்களை விலக்கி, தீவிரப் பெண்ணிடப் பாலுறவினரைச் சேர்ப்பதில் கவனம் செலுத்தினர். மேலும் அதே வேளையில், தம்மைப் பிரிவினைவாத பெண்ணிடைப் பாலுறவினராகவும் அடையாளப்படுத்திகொண்டனர். [7]

மோனிக் விட்டிகுவின் தாக்கம்
தொகு

பிரஞ்சு மரபெதிர்ப்பு அகனள் முன்னணி பிரெஞ்சு மெய்யியலாளர் மோனிக் விட்டிகுவின் எழுத்துகளால் ஊக்கம் பெற்றது;[8] இவர்களின் மெய்யியல் உசாவல் சீமோன் தெ பொவார், மோனிக் விட்டிகு உளடங்கிய பாரிசு சார்ந்த குழுவால் தொடங்கியது. அப்போது சீமொன் தெ பொவார் "பெண்ணிய கேள்விகள்" எனும் இதழை நடத்திக் கொண்டிருந்தார்.[9] மோனிக் விட்டிகு 1981 இல் யாரும் பெண்ணாகப் பிறப்பதில்லை எனும் கட்டுரையை பொவாரின் நோக்கிட்டைச் சார்ந்து எழுதியிருந்தார்.அக்கட்டுரையில் அவர் " அகனள் யாரும் பெண்ணன்று" எனக் குறியுள்ளார். ஏனெனில், " பெண் என்பது ஆணுடன் உள்ள குறிப்பிட்ட உறவு முறையே; இதை முன்பு நாம் பணிவு என்றோம்; இது சொந்த, புறநிலை, பொருளியல் கடப்பாடு; .. இந்த உறவை அகனள் எதிர்த்து கலப்புப் பாலுறவில் ஈடுபடுவதில்லை.எனவே, பெண்ணன்று".[10] " ஓர் அகனள் மற்றோர் அகனளுடன் கட்டற்ற உறவில் விடுதலையாக வாழும் வெளியை உருவாக்கிக் கொள்வதை விட்டிகு ஏற்று நம்புகிறார் " .[10]

அகனள், அகனர் எழுத்தில் யார் எவர் எனும் களஞ்சியத்தில் அதன் பதிப்பாசிரியர் காபிரியேல் கிரிஃபித், விட்டிகு எழுத்து, " கலப்புத் தந்தைவழி மரபும் அதில் மகளிர் ஒடுக்குமுறையை எதிர்ப்பதும் பற்றிய பெரிய விவாதப் பகுதியாக" அமைந்துள்ளது என்கிறார்.[10]

இலத்தீன அமெரிக்கா

தொகு

இலத்தீன அமெரிக்க மரபுகடப்பு அகனள் பெண்ணியம் 1970 களில், பிற நாடுகளில் ஏற்பட்டதைப் போலவே, சிறப்பு தேசிய நிலமைகளுக்குத் தகவமைந்து உருவானது. மரபுகடப்பு அகனள் இயக்கம் மெக்சிகோவில் 1977 இல் ஓயிகபெத் குழுத்தலைமையில் உருவாகத் தொடங்கியது. மரபுகடப்பு அகனள் பெண்ணியம் சிலியில் 1984 இல் களத் தேசியத் தனிவல்லாண்மை நிலைமைகளுக்கேற்ப தகவுற்றுத் தோன்றியது. கோசுட்டா இரிகாவிலும் மரகடப்பு அகனள் இயக்கம் 1986 இல் உருவாகியது.[5]

இலத்தீன அமெரிக்க அகனள் இயக்க வாழ்க்கை, 1980 களிலும் 1990 களிலும் அகனள் அச்ச ஒடுக்குமுறையால் பெரிதும் கடுமையாகத் தக்கப்பட்டது. இதனால், மெக்சிகோ, கோசுட்டா இரிகோ, பியூயெர்ட்டோ இரிகோ, அர்ஜென்ட்டீனா, பிரேசில் அகனள் குழுக்கள் பொது இலக்குகளை நோக்கி மிக நெருக்கமாக ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கின.[4]

வட அமெரிக்கா

தொகு

கனடா

தொகு

ஐக்கிய அமெரிக்காவில் வேகமாக வளர்ந்ததும், மரபுகடப்பு அகனள் இயக்கம் 1970 களில் கனடாவில் கால்பதிக்கலானது. கனடிய இயக்கம் கியூபெக்கிலும் டொரன்ட்டோவிலும் ஏற்பட்டது. [1]கனடிய அகனள் நிறுவனங்கள் அகனள் பண்பாட்டைக் கட்டமைப்பதில் கவனம் காட்டின. இவை கனடிய அகனள் குழுக்களுக்கு பேரளவில் துணைபுரிந்தன.[1] டொரன்ட்டோ அகனள் நிறுவனம்மோர் அமெதிசுட்டு அமைப்பை நிறுவி, குடிக்கிறக்கத்தில் மல்லாடும் அகனள் உறுப்பினருக்கு துணைபுரிந்தன.[1]

ஐக்கிய அமெரிக்கா

தொகு

ஐக்கிய அமெரிக்காவில், இரண்டாம் அலைப் பெண்ணியம் மரபுகடப்பு அகனள் இயக்கத்தை உருவாக்கும் காரணியானது; 1960 கள் முதல் 1980 கள் வரையில் பல மரபுகடப்பு அகனள் நிறுவனங்கள் உருவாகின. மேலும், இவை புதிய இடது இயக்கத்திலும் போர் எதிர்ப்பு இயக்கத்திலும் அமெரிக்கக் குடிமை உரிமை இயக்கத்திலும் உறவு பூண்டிருந்தன.[11]

கருத்தியல்

தொகு

மரபுகடப்பு, தாராளநெறி இயக்கங்கள்

தொகு

மரபுகடப்பு, தாராளநெறி இயக்கங்கள் சமூக மாற்றத்தை விரும்பினாலும்,சைரண்டுக்கும் இடையில் தெள்வான வேறுபாடு உல்ளது. மரபுகடப்பு இயக்கங்கள் நிலவும் மரபைத் தகர்க்க விரும்ப, தாராளமய இயக்கங்கள் அதைச் சீர்திருத்த விரும்புகின்றன. கூடுதலாக, முன்னவை கட்டர்ற விடுதலையைக் கோர, பின்னவை சமூகச் சமநிலையை மட்டுமே கோருகின்றன. மரபுகடப்பு அகனள் இயக்கம் குறிப்பாக ஆண் ஆதிக்கத்துக்கு அறைகூவல் விடுத்து, பாலினம், பாலுணர்வு சார்ந்த ஆண்மைய வரையறைகளை கடந்துசெல்ல விரும்புகின்றன.[11]

அகனள் பிரிவினைவாதம்

தொகு

மரபுகடப்பு அகனள் இயக்க நெறிமுறைகள் அகனள் பிரிவினை வாதத்தை ஒத்ததே என்றாலும் அவற்றுக்கு இடையே சில முதன்மையான வேறுபாடுகளும் உள்ளன.[8][12]மோனிக் விட்டிகுவின் [[நேரடி மனமும் பிற கட்டுரைகளும் எனும் கட்டுரையின் முகவுரையில் கியூபெக் மரபுகடப்பு அகனள் உலூயிசி தற்கோட்டி "மரபுகடப்பு அகனள் குழு அடிப்படை பொதுக் கருத்தேற்பின்படி, கலப்புப் பாலினர் பாலுணர்வு அரசியல் பிரிவுபடுத்தப்பட்டு அதை அகற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது" என விளக்குகிறார்.[8] மேலும், தற்கோட்டி அகனள் பிரிவினர் தனி வகைமையினர் ஆவர்( அதாவது, ஆண்களிடம் மட்டுமன்று, கலப்புப் பாலுறவுப் பெண்களிடம் இருந்தும் தனித்த பிரிவினர்)" எனவும்[8] அகனள் இயக்க நோக்கமே, "நிலவும் கலப்புப் பாலின அரசியல் சட்டகத்தைத் தகர்ப்பதே எனவும் குறிப்பிடுகிறார்".[8]மேலும், தற்கோட்டி, கட்டாயக் கலப்பினப் பாலுறவும் அகனள் பிரிவின் நிலவலும் எனும் அதிரியன்னி இரிச்சின் கட்டுரையைப் பற்றி விவாதித்து, கலப்பினப் பாலுறவு வன்முறையான அரசியல்நிறுவனமாகும் எனவும் அதை வன்முறையால் தான் ஒழுங்குபடுத்தி கட்டுக்குள் வைக்கமுடியும் எனவும் அதற்காக அணிதிரண்டு பரப்புரை செய்து போராடவேண்டும் எனவும் இரிச் கூறுவதாகக் குறிப்பிடுகிறார்.[13]எனவே, இந்த நிறுவனத்தை எதிர்த்தலே அகனள் பிரிவின் நிலவலாக அமைகிறது என இரிச் பார்க்கிறார். ஆனால், ஒரு தனியரின் தேர்வாக, அகனள் இருப்புநிலை கட்டாயம் தேவையென, மரபுகடப்பு அகனள் நெறிமுறைகளின்படி கருதுவதால் இதன் நிலவலும் கலப்பினப் பாலுறவு அரசியலுக்கு வெளியே தான் அமையவேண்டும் எனவும் இரிச் வாதிடுகிறார்.[8]

பெண்ணியம்

தொகு

மரபுகடப்பு அகணள் இயக்கம் பிற பெண்ணிய இயக்கங்களில் இருந்து தனியாகப் பிரித்துக் கொள்கிறது; ஏனெனில், இது அகனள் குழு மகளிரை முதன்மைப் பெண்ணிய மகளிரில் இருந்து வேறுபடுத்திக் காண்கிறது. எடுத்துகாட்டாக, பெட்டி பிரீடுமன் ஆணைப்படி, இலாவந்தர் மேனசு அகனள் பிரிவினர், பெண்ணிய இயக்கத்தில் ஈடுபடக்கூடாது என்கிறார்.[11]

உட்சிக்கல்கள்

தொகு

டொரன்ட்டோவில் உள்ள ஓர் அகனள் குழு இருபலினரை விலக்கிவைத்து தம்மைப் பெயர்பாலினராகக் கருதுகின்றனர்.[1]:80

பண்பாட்டு உருவாக்கம்

தொகு

மேலும் காண்க

தொகு
  • ஒலிவியா பதிவுகள்

கோட்பாட்டாளர்கள்

தொகு
  • இரீட்டா மே பிரவுன்
  • மிழ்சல் காசே
  • கார்லா ஜே
  • பார்பாரா இலவு
  • தெல் மார்ட்டின் பில்லிசு இலையோன்
  • மார்த்தா செல்லி
  • எல்லென் சும்சுகி

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Ross, Becki (Summer 1990). "The House That Jill Built: Lesbian Feminist Organizing in Toronto, 1976-1980". Feminist Review (35): 75–91. doi:10.2307/1395402. இணையக் கணினி நூலக மையம்:60772339. 
  2. Martel, Frederic. The Pink and the Black: Homosexuals in France Since 1968, Stanford University Press, 2000, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8047-3274-4, p119
  3. Falquet, Jules (2004). Breve reseña de Algunas teorías lésbicas [Brief review of Some lesbian theories] (in ஸ்பானிஷ்). Mexico: fem-e-libros. p. 30.
  4. 4.0 4.1 Falquet, Jules (2004). Breve reseña de ALGUNAS TEORÍAS LÉSBICAS [Brief review of some lesbian theories] (in ஸ்பானிஷ்). Mexico. p. 39.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  5. 5.0 5.1 5.2 5.3 Falquet, Jules (2004). Breve reseña de ALGUNAS TEORÍAS LÉSBICAS [Brief review of some lesbian theories] (in ஸ்பானிஷ்). Mexico. pp. 32–33.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  6. Martel, Frederic. The Pink and the Black: Homosexuals in France Since 1968, Stanford University Press, 2000, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8047-3274-4, p119
  7. "La Scission Du "Front des Lesbiennes Radicales"". Nouvelles Questions Féministes 1 (2): 124–126. June 1981. 
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 Turcotte, Louise. (foreword) The Straight Mind and Other Essays, Monique Wittig, Beacon Press, 1992, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8070-7917-0, p ix-x
  9. Duchen, Claire. Feminism in France: From May '68 to Mitterrand, Routledge, 1986, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7102-0455-8, p24
  10. 10.0 10.1 10.2 Wittig, Monique (1992). The Straight Mind and Other Essays. Beacon Press. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8070-7917-1. இணையக் கணினி நூலக மைய எண் 748998545.
  11. 11.0 11.1 11.2 Poirot, Kristan (2009). "Domesticating the Liberated Woman: Containment Rhetorics of Second Wave Radical/Lesbian Feminism". Women's Studies in Communication 32 (3): 263–292. doi:10.1080/07491409.2009.10162391. 
  12. Kramarae & Spender. Routledge International Encyclopedia of Women: Global Women's Issues, Routledge, 2000, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-92089-2, p785
  13. Rich, Adrienne. Compulsory Heterosexuality and Lesbian Existence, Signs 5, no.4, Summer 1980