இரண்டாம் அலைப் பெண்ணியம்

இரண்டாம் அலைப் பெண்ணியம் (second-wave feminism) என்பது மறைவாக இருக்கும் பெண் ஒடுக்குமுறைகளை, குறிப்பாக பாலியல், குடும்பம், வேலை போன்ற தளங்களில் பெண்களுக்கு இருக்கும் தடைகளைத் தகர்ப்பதற்காக 1960 களில் தொடங்கி 1970 களின் இறுதிவரை ஐக்கிய அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைச் சுட்டுகிறது.[1] இது பின்னர் உலகளாவிய அளவில் ஐரோப்பிய நாடுகள் மட்டுமன்றி, துருக்கி[2] இசுரேல் போன்ற நாடுகளுக்கும் பரவியது.[3]

முதல் அலைப் பெண்ணியம் பெண்களுக்கான சம உரிமை, வாக்குரிமை, சொத்துரிமை ஆகியவற்றில் கவனம் செலுத்த, இரண்டாம் அலைப் பெண்ணியம் தன் நிகழ்ச்சிநிரலை அகன்ற பல சிக்கல்களை உள்ளடக்கி விரிவாக்கியது: பாலுணர்வு, குடும்பம், வேலையிடம், இனப்பெருக்க உரிமைகள், இயல்பான சம உரிமைகளோடு அலுவல்சார் சட்ட உரிமைகள் போன்றவற்றைப் போராட்டக் களமாக மாற்றியது.[4] இரண்டாம் அலைப் பெண்ணியம் வீட்டு வன்முறை, திருமணவழிக் கற்பழிப்பு, கற்பழிப்பு நெருக்கடி, அடிபட்ட பெண்களுக்கான காப்பிடம், பொறுப்பு மாற்றம். மணவிலக்குச் சட்டம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தியது. இப்பெண்ணியவாதிகள் வணிக முயற்சிகளில் இறங்கி, புத்தகக் கடைகள், கடன் ஒன்றியங்கள், உணவகங்கள் ஆகியவற்றை நடத்தி அவற்றைத் தாம் கூடுமிடங்களகவும் பொருளியல் வளர்ச்சிப் பொறிகளாகவும் பயன்படுத்தினர்.[5]

பல வரலாற்றாசிரியர்கள் அமெரிக்காவில் இரண்டாம் அலைப் பெண்ணியம் 1980 களில் நடந்த பாலியல் போராட்டங்களோடு முடிந்ததாகக் கருதுகின்றனர். இந்தப் போராட்டங்கள் பாலியல் தன்மை குறித்த கண்ணோட்டங்கள், அம்மணக்காட்சி குறித்த பாய்வைகள் ஆகியன பற்றிப் பல்வேறு பெண்ணியக் குழுக்களிடையே நிகழ்ந்தன. இவையே 1990 களில் மூன்றால் அலைப் பெண்ணியக் காலத்தை விரைவுபடுத்தி நிறுவின.[6]

பருந்துப் பார்வை தொகு

இரண்டாம் உலகப்போருக்குப் பின் பெண்களின் புதிய கூடுதலான வீட்டிருப்புக்கு எதிர்வினையாக இரண்டாம் அலைப் பெண்ணியம் வட அமெரிக்காவில் சற்று காலந்தாழ்த்தியே எழுந்ததுI: போருக்குப் பிந்தைய 1940 களின் முன்னெப்போதும் இல்லாத பொருளியல் பெருவளர்ச்சியும் குழந்தைகள் பெருக்கமும், குடும்பம் சார்ந்த புறநகர் வளர்ச்சியைத் தோற்றுவித்த்து. கருத்தியலான இணையர் மணங்களை உருவக்கி கருநிலைக் கௌடும்பங்களை உருவாக்கியது. இந்தப் புறநகர் வாழ்க்கை அக்கால ஊடகங்களில் விரிவாகப் பதிவாகியுள்ளது; தொலைக்காட்சிப் படங்களாகிய தந்தை அறிவார் சிறந்ததை (Father Knows Best), பீவருக்கு இட்டுவிடுங்கள் (Leave It to Beaver) ஆகியவை பெண்களின் வீட்டிருப்பைக் கருத்தியலானதாக காட்டின.[7]

இரண்டாம் அலைப் பெண்ணியத்துக்குச் சில முதன்மையான நிகழ்ச்சிகள் அடிகோலின. பிரெஞ்சு எழுத்தாளர் சைமன் தெ பொவாயிர், 1940 களில் தந்தைவழிச் சமூகத்தில் பெண்கள் பிறத்தியாராகக் கருதப்படுவதைச் சுட்டிக் காட்டினார். இவர் 1949 ஆம் ஆண்டு வெளியிட்ட இரண்டாம் பாலினம் (The Second Sex) எனும் நூலில் ஆண்மையக் கருத்தியலே இயல்பான வரன்முறையாக ஏற்று நடைமுறைப்படுத்தப்படுவதைச் சமகால வளர்ச்சித் தொன்மங்கள் காடுவதாகவும் பெணகள் மாத விலக்குக்கும் கருத்தரிக்கவும் பாலூட்டவும் ஏற்றவர்கள் என்பதே அவர்களை "இரண்டாம் பாலினமாக" ஒதுக்க போதிய காரணமாகாது என வாதிட்டார் "second sex".[8]

இந்த நூல் பிரெஞ்சு மொழியில் இருந்து அதில் உள்ள சில பகுதிகளை வெட்டிவிட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டு அமெரிக்காவில் 1953 இல் வெளியிடப்பட்டது.[9]

வணிக முயற்சிகள் தொகு

பெண்ணிய முனைவாளர்கள் பெண்ணிய வணிகங்களைத் தொடங்கினர்; இவற்றில், பெண்கள் புத்தகக் கடைகள், பெண்களுக்கான கடன்தரும் ஒன்றியங்கள், பெண்ணிய ஊடகங்கள், பெண்ணிய அஞ்சல் வரிசை அட்டவணைகள், மகளிர் உணவகங்கள் feminist record labels. இந்த வணிகங்கள் இரண்டாம், மூன்றாம் அலைப் பெண்ணியக் காலகட்டங்களில் அதாவது, 1970 களிலும் 1980 களிலும் 1990 களிலும் பெருவளர்ச்சி கண்டன.[10][11]

இசையும் பொதுப் பண்பாடும் தொகு

இரண்டாம் அலைப் பெண்ணியம் வழக்கில் உள்ள பாப் இசைப்பண்பாடு பாலியல் கவர்ச்சியுள்ளதாக மதிப்பிட்டு, இதை எதிர்க்க, புதிய தமக்கே உரிய பாப் இசையை உருவாக்கியது. ஆத்திரேலியக் கலைஞரான எலென் ரெட்டி உருவாக்கிய "நானொரு பெண்]]" தனிப்பாடல் மக்கல் இசையில் புதிய பங்களித்தது; இது மெல்ல பெண்ணிய வாழ்த்துப் பாடலாகவும் மலர்ந்தது; இவர் பெண்ணிய விளம்பரப் பெண் அல்லது படிமம் ஆனார்.[12]சில வாரங்களுக்குப் பிறகு, வானொலி நிலையங்கள் நானொரு பெண் பாடலை ஒலிபரப்ப மறுத்தன. பிறகு, எலென் ரெட்டி இதைப் பல அரங்குகளில் மேடையேற்றினார். பாடல் மக்களிடம் பரவலான வரவேற்பு பெற்றது; மகளிர் வானொலி நிலையங்களை அழைத்து பாடலை ஒலிபரப்பும்படி வேண்டினர். இந்த அழைப்புகளுக்குப் பிறகு, வானொலி நிலையங்கள் பாடலை ஒலிபரப்பின. "நானொரு பெண்" பாடல் மிக விரைவாக உச்ச 100 இல் இருந்து 1972 திசம்பரில் முதலிடத்தைப் பிடித்தது.[13][12][14][15][16][17][18][19][20][21]

"இரண்டாம் அலைப் பெண்ணியத்தின் ஒரு திட்டம், பெண்கள் பற்றிய நேர்முக ஆளுமையை உருவாக்குவதே; இதற்காக, பொது பண்பாட்டு வெளியில் உலவுமமோங்கலான படிமங்களைக் கட்டுடைத்து, நிலவும் ஒடுக்குமுறைகல் சார்ந்த மகளிரின் உணர்திறத்தை எழுச்சிபெறச் செய்வதே."[12]

"நானொரு பெண்" தொகு

எலென் ரெட்டி 1972 இல் "நானொரு பெண்" எனும் தனிப்பாட்டை வெளியிட்டார். இவர் நேர்காணல் எடுத்தவரிடம் இந்தப் பாட்டு "ஒரு பெண்னின் தற்பெருமையைப் பாடும் பாடல்"என்று கூறினார்.[22] பாடல் விபரப் பலகையில் உச்ச 100 ஐ எட்டியதும், அட்டவனையில் இருந்து இந்தப் பாடல் நீக்கப்பட்டது. ஏனெனில் வானொலி நிலையங்கள் இதை ஒலிபரப்ப மறுத்தன. இசை விமர்சகரும் வானொலி நிலையங்களும் இந்தப் பாடல் " பெண் விடுதலை இயக்கத்தின் மிகமட்டமானவற்றைக்" கொண்டுள்ளது என நம்பினர். [23] ரெட்டி இதைப் பல அரங்குகளில் மேடையேற்றினார். பாடல் மக்களிட பரவலான வரவேற்பு பெற்றது; மகளிர் வானொலி நிலையங்களை அழைத்து பாடலை ஒலிபரப்பும்படி வேண்டினர். இந்த அழைப்புகளுக்குப் பிறகு, வானொலி நிலையங்கள் பாடலை ஒலிபரப்பின. "நானொரு பெண்" பாடல் மிக விரைவாக உச்ச 100 இல் இருந்து முதலிடத்தைப் பிடித்தது.[22] "நானொரு பெண் பாடல்" எதிர்ப்புப் பாடல் ஆக மாறியது. மகளிர் சம உரிமைக்காக நடத்திய பேரணிகளிலும் எதிர்ப்பு கூட்டங்களிலும் பாடப்பட்டது.[24]

ஒலிவியா பதிவுகள் தொகு

ஐந்து பெண்கள் ஒரு குழுவாக ஒன்று சேர்ந்து 1973 இல் ஒலிவியா பதிவுகள் எனும் அடையாளப் பெயரில் பெண்கள் மட்டும் உரிமை வகித்து இயக்கிய இசையமைப்பை உருவாக்கினர்.[25] இதற்கு அடிப்படையான காரணமாக விளங்கியது எந்தவொரு இசைக்குழுவும் பெண்கலைஞர்களை மிகக் குறைவாகவே சேர்த்துக் கொண்டிருந்த புறக்கணிப்பான நடைமுறைதான். ஒலிவியா அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான யூதி திலுகாசுச், " நாங்கள் தொடங்கியபோது பொதுவெளி அமைப்புகளில் பெண்களுக்கான வாய்ப்புகள் மிக அருகியே இருந்ததால் தான், இந்தத் தொழிலில் பெண்கலைஞர்களுக்குச் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கவே நாங்கள் இதைத் தொடங்கினோம்" என்கிறார்.[26]> தொடக்கத்தில், அவர்களிடம் 4,000 டாலர்களே முதலீடாக இருந்திருக்கிறது; ஒலிவியா பதிவுகள் அமைப்பை நடத்த கொடைகளை நம்பியே இயங்கியது. ஈந்தக் கொடைகளைக் கொண்டு, ஒலிவியா பதிவுகள் தம் முதல் பெண்ணியர் பதிவுகள் அமைந்த பாடல்களின் தொகுப்பை நீயறிவாய் என நானறிவேன் எனும் தலைப்பில் உருவாக்கினர்.[27] இப்பதிவு தன்னார்வர்கள் வழியாகவும் பெண்கள் நடத்திய நூலங்காடிகள் வழியாகவும் விற்கபட்டது; நாளடைவில், சில ஆண்ட்களுக்குப் பிறகு, பொது இசைப்பதிவுக் கடைகளிலும் விற்றன.[26]

ஒலிவியா பதிவுகள் குழுமம் வெற்றிநடை போடவே, இக்குழுமம் 1975 இல் வாழ்சிங்டனில் இருந்து இலாசு ஏஞ்சலீசுக்கு இடம் மாற்றப்பட்டது.[27] இந்தக் குழுமம் பல இசைத்தட்டுகளையும் பாடல் தொகுப்புகளையும் வெளியிட்டது. இவை மக்களிடையே பரவிப் பெயர்பெற்றன.[25]னைதன் வளர்ச்சி இதைத் தழுவியதொரு இசைத்தொழில் துறையே வளர்ந்தது. தொடக்கத்தில் இது பெண் ஓரினக் கவர்ச்சிப் பாடல்களாகக் கருதப்பட்டாலும், நாளடைவில் "மகளிர் இசையாக மலர்ந்தது".[25] இது முதலில் மகளிருக்காக இயங்கினாலும், 1985 இல் ஆண்களையும் ஈர்க்கும் இசையாக விரிவடைந்தது.[26]

மகளிர் இசை தொகு

மகளிர் இசையைப் பெண்கள் மட்டும் இணைந்து பெண்ணிய அரசியலுக்கான கருத்தியல்களை வெளிப்படுத்தும்பாடல்களைப் பாடி இசைத்தனர்.[28] ஐக்கிய அமெரிக்க நாட்டு நகரங்கள் எங்கிலும் மகளிர் இசை விழாக்கள் நடத்தப்பட்டன; இவற்றில் பெண்கலைஞர்கள் மட்டுமே இணைந்து தம் பட்டறிவைப் பறைசாற்றும் பாடல்களைப் பாடி இசைத்தனர்.[29] The first Women's Music Festival was held in 1974 at the University of Illinois.[29] மிச்சிகன் மகளிர் இசை விழாவில் 1979 இல் அமெரிக்க நாடு முழுவதிலும் இருந்து 10,000 மகளிர் கலந்துகொண்டனர்.[29] இந்த விழாக்கள் ஏற்கெனவே பெயர்பெற்ற பாடகிகளாகிய இலவுரா நைரோ, எல்லன் மெக்கில்வைன் ஆகியோர் தம் சொந்தமான புதிய பாடல்களை இயற்றிப் பாட ஊக்கம் அளித்தது.[29]பல மகளிர் நிகழ்த்தற்கரிய ராக் இசையைப் பாடினர்; இந்தவகை ராக் இசை ஆடவரால் மட்டுமே நிகழ்த்த முடிந்ததாகும், ஆன், நான்சி வில்சன் உடன்பிறப்புகள் இதை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினர். இவர்கள் நெஞ்சம் எனும் அரியதொரு ராக் இசைக் குழுவையும் உருவாக்கினர்.[30]

தொடக்கமும் தன்னுணர்வான எழுச்சியும் தொகு

இரண்டாம் அலைப் பெண்ணியத்தில் உருவாகிய தாராளப் பெண்ணியம், முனைப்பான பெண்ணியம் ஆகிய இரண்டு கிளைப் பிரிவுகளைக் கருதினால் இந்த இயக்கத்தின் தோற்றம் நன்கு விளங்கும். பெட்டி பிரீதன், குளோரியா சுட்டைனிம் ஆகிய தாராளப் பெண்ணியர்கள் கூட்டரசு சட்டமியற்றல் வழியாக மகளிரின் சொந்த, தொழில்முறை வாழ்க்கையை மேம்படுத்தலாம் என வாதிட்டனர்.[31] இதற்கு மாறாக, சாந்திரா காசெய் ஐதன், மேரி கிங் போன்ற முனைப்பான பெண்ணியர்கள் குடிமை உரிமை அமைப்புகளில் பணிபுரியும்போது பெற்ற திறமைகலையும் பாடங்களையும் தகவமைத்து இயக்கத்தை வழிநடத்தலாம் என வாதிட்டனர்; இந்த இயக்கங்களில் மாணவருக்கான மக்களாட்சிக்(ஜனநாயகக்) கழகம், மாணவர் ஒத்துழையாமை ஒருங்கிணைப்புக் குழு போன்றவை அடங்கும்; இவற்றைப் போன்ற பாரிய குடிமை உரிமைசார் இயக்கத்தில் பணிபுரியும்போத் மகளிர் சந்தித்த வன்முறை, பாலியல் சிக்கல்கள் ஒரு புரிதல் தளத்தைப் பயன்படுத்தி இயக்கத்தைக் கட்டலாம் எனத் தெளிவான முடிவுக்கு வந்தனர்.[32]

தாராளப் பெண்ணிய இயக்கம் தொகு

போருக்குப் பிந்தைய அமெரிக்காவில் சொந்த அல்லது சமூக அழுத்தங்களால் வேலையை விட்டு விலகிய மகளிர்வீட்டுக்குத் திரும்பினர் அல்லது பெண்கள் வழக்கமாக செய்யும் வேலைகலில் அமர்த்தப்பட்டனர்.[33] பிரீதன் 1963 இல் பெண்ணிய மருட்சி நூலை வெளியிட்ட பிறகு, நூலில் விவரித்திருந்தபடி பல மகளிர் தனிமைநிலைக்கும் நிறைவின்மைக்கும் ஆட்பட்டனர். இந்த நூல் செயலுக்கு அழைப்பதன்று; மாறாக, அமெரிக்க நடுத்தர வகுப்பினரிடையே மனச்சாட்சியை எழுப்பி, தம் நிலையை உணரும்படி, அழைப்பு விடுத்தது.[34] இவர்களை பலர் 1966 இல் தேசிய மகளிர் நிறுவனத்தை உருவாக்கி, அதில் சேர்ந்தனர். இவர்களது "நோக்க உரை" 1960 களில் ஏற்பட்ட தேசிய குடிக்கை உரிமைப் ப்ரட்சியோடு ஒப்பிடும்போது, மகளிருக்கான சமவுரிமை அவ்வளவுளைன்றியமையாதது அன்று என விளம்பியது.[35]

முனைப்பான பெண்ணிய இயக்கம் தொகு

முனைவான பெண்ணிய இயக்கத்தில் விரும்பி சேர்ந்த அனைவரும் ஒன்றாக புத்திடதுசாரி இயக்க ஆண்களால் அமைதியாகவும் பணிவாகவும் இருக்கும்படி கட்டாயப்படுத்தியதாகக் கூறுகின்றனர். மேலும், அவர்கள் மகளிரை எழுத்துப்பணியிலும் தட்டச்சுப் பணியிலும் ஈடுபடுத்தியதையும் உடன் பணிபுரிந்த ஆண்கள் அவர்களோடு படுத்துக்கொள்ளவும் கூட எதிர்பார்த்ததையும் குறிப்பிடுகின்றனர்.[36] இவற்றைப் போன்ற பாலியல் தாக்குதல்கள் நடந்துள்ளதோடு இளம்பெண்களின் தேவைகளையும் உணர்வுகளையும் ஆண்களின் விருப்பங்களை நிறைவேற்ற புறக்கணித்துள்ளனர்.[36] பல முனைப்பான பெண்ணியர்கள் இந்த நிறுவனங்களில் இருந்து தம் சொந்தத் திறமைகலையும் முதன்மையையும் தற்காத்துக்கொள்ள சிந்திக்கும் வழிவகைகலைப் பற்றிப் பாடம் கற்றுள்ளனர். இந்தப் பாடங்களைத் தம் தனியரிடையேயான உறவுகளில் பயன்படுத்தவும் செய்தனர்.[37]

சமூக மாற்றங்கள் தொகு

மகப்பேறு கட்டுபாட்டைப் பயன்படுத்தல் தொகு

வீட்டு வன்முறையும் பாலியல் நெருக்கடிகளும் தொகு

கல்வி தொகு

இருபாலார் கூட்டுக்கல்வி தொகு

இந்தக் காலத்தில் ஐக்கிய அமெரிக்க நாட்டில் உருவாகிய விவாதம் கூட்டுக்கல்வி பற்றி எழுந்தது. பெரும்பாலான ஆண்கள் கல்லூரிகளும் பெண்கள் கல்லூரிகளும் இணைந்து இருபாலாருக்குமான கூட்டுக்கல்வி நிறுவனங்களாக மாறின. அதோடு சில பெண்கள் கல்லூரிகள் கூட்டுக்கல்வி நிறுவனங்கலாக மாற, பிற தனி பாலின மாணவரை மட்டும் கொண்ட கல்லூரிகளாக இயங்கின.

ஏழு செவிலியர் கல்லூரி தொகு

ஏழு செவிலியர் கல்லூரிகளில் இரண்டு 1960 களிலும் பிறகும் தம்மை மாற்றிக் கொண்டன. முதலில் இராடுகிளிப் கல்லூரி, ஆர்வார்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்தது. இக்கல்லூரியின் மாணவர்கள் 1963 இல் தொடங்கி ஆர்வார்டு பட்டயங்களை இராடுகிளிப் முதல்வர்கலின் ஒப்பத்துடன் பெற்றனர். ஆர்வார்டு இணைப்பு உருவாக்க்க செயற்பாடுகல் 1970 இல் தொடங்கின.னாதே ஆண்டில், பல ஆர்வார்டு, இராடுகிளிப் மாண்வரை தம் கூட்டு உறைவிடங்களில் சேர்த்தன; 1972 இல் முழுமையான இணைவுறைவிடங்கள் நிறுவபட்டுவிட்டன. பிறகு மிகக் குறுகிய இடைவெளிக்குள் தடகளத் துறைகளும் இனைக்கப்பட்டன. 1977 இல் ஆர்வார்டும் இராடுகிளிப்பும் ஓர் இசைவுப் பத்திரத்தில் கையெழுத்திட்டன; இது பட்டப்படிப்பு மகளிரை முழுமையாக ஆர்வார்டு கல்லூரிக்குள் இணைத்தது. 1999 இல் இராடுகிளிப் கல்லூரி மூடப்பட்டு, முழுப் பொறுப்பையும் ஆர்வார்டு பல்கலைக்கழகம் பட்டப்படிப்பு மகளிருக்கான விவகாரங்களையும் ஏற்றது. இராடுகிளிப் இப்போது ஆர்வார்டு பல்கலைக்கழக மகளிருக்கான உயராய்வு நிறுவனமாகச் செயல்படுகிறது.

இரண்டாவதான வாசர் கல்லூரி யேல் பல்கலைக்கழகத்தில் இணைய மறுத்தது; மாறாக, 1969 இல் இருபாலாருக்கான கூட்டுக்கல்வி நிறவனமானது.

ஏழு செவிலியர் கல்லூரிகளில் எஞ்சிய ஐந்து கல்லூரிகளும் கூட்டுக்கல்வியை நடத்த மறுத்துவிட்டன. மவுன்ட் கோலியோக் கல்லூரி டேவிடு டுரூமன் தலைமையில் கூட்டுக்கல்விப் பயில்வுக்கான நீண்டநெடிய விவாதத்தை நடத்தியது. "கூட்டுக்கல்வி பற்றிய விரிவான ஆய்வுக்குப் பிறகு, இதன் அறக்கட்டளை உறுப்பினர் வாரியம் ஒருமனதாக மகளிர் கல்லூரியாகவே இருக்க 1971 நவம்பர் 6 இல் முடிவெடுத்தது; இந்த முடிவை ஆதரிக்க, புல உறுப்பினர் குழுவுக்கு உரிய பாடத் திட்டத்தைப் பரிந்துரைக்க வேண்டியது."[38] சுமித் கல்லுரியும் இதே போன்ற முடிவை 1971 இல் எடுத்தது.[39]

பிரின் மாவர் கல்லூரியும் கேவெர்போர்டு கல்லூரியும் 1969 இல் (முழுக்க முழுக்க ஆண்களுக்கானவை) உறைவிடக் கல்வியகங்களாக உருவாக்கப்பட்டன. 1980 இல் கேவெர்போர்டு கல்லூரி கூட்டுக்கல்வி பயில்வுக்கு மாறியபோது, பிரின் மாவர் கல்லூரி கூட்டுக்கல்வி பயைல்வைப் பர்ரி விவாதித்தாலும் அதற்கு எதிராகவே முடிவெடுத்தது.[40] 1983 இல் பர்னார்டு கல்லூரியோடு, ஆர்வார்டு இராடுகிளிப்பைப் போல இணைய, பத்தாண்டு விவாதத் தோல்விக்குப் பிறகு கொலம்பியா பல்கலைக்கழகம் மகளிரை சேர்க்கத் தொடங்கியது(பர்னார்டு கல்லூரி 1900 இல் இருந்தே இணைந்தே இருந்துவந்தாலும், அது தொடர்ந்து தற்சார்பானதாகவே இயங்கியுள்ளது). இதே காலத்தில் வெல்லெசுலி கல்லூரியும் கூட்டுக்கல்வி முறைக்கு எதிராக முடிவெடுத்தது.

மிசிசிபி மகளிர் பல்கலைக்கழகம் தொகு

மிசிசிப்பி மகளிர் பல்கலைக்கழகத்துக்கு எதிராக கோகன் தொடுத்த வழக்கில் ஐக்கிய அமெரிக்க உச்சநீதிமன்றம் 1982 இல் ஐவரில் நால்வர் முடிவுப்படி, இப்பல்கலைக்கழகம் செவிலியர் திட்டத்தில் பாலின அடிப்படையில் மாணவரைச் சேர்ப்பது ஐக்கிய அமெரிக்க அரசியல் அமைப்பின் 14 ஆம் திருத்தத்தின் சம பாதுகாப்பு விதிப் பிரிவை மீறுவதாகும் என்ன தீர்ப்பு வழங்கியது. ஐக்கிய அமெரிக்காவில் முதல் மகளிர் நிறுவனமான மிசிசிப்பி மகளிர் பல்கலைக்கழகம் தனது மாணவர் சேர்க்கைக் கொள்கையை மாற்றிக்கொண்டு, இருபாலாரும் பயிலும் கூட்டுக்கல்வி நிறுவனமானது.[41]

ஐக்கிய அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அளித்த தம் முதல் எழுத்துவழி அறிக்கையில், நீதிபதி சாந்திரா தே ஓ கானர், " சில வரம்புள்ள சூழலில்லொரு பாலினத்துக்குச் சலுகையளிக்கும் பாலின அடிப்படை பாகுபாடு, விகிதமுறைப்படி பாதிப்புற்ற அந்தப் பாலின உறுப்பினருக்கு உள்நோக்கத்துடன் நேரடியாக உதவுவதாக அமைந்தால் சரியானதே." இதை தொடர்ந்து அவர் மேலும் குறிப்பிட்டுக் கூறுகிற கூற்று, நடப்பில் பாதிப்புற்றநிலையில் செவிலியராக ஏற்கெனவே பலர் உள்ளமையால், ஆண்களுக்குச் சேர்க்கை மறுப்பது " பெண்கள் மட்டுமே, ஆண்களின்றி, செவிலியராகவேண்டும் என்ற பழைய பார்வையைத் திணித்து செவிலியர் தொழிலே பெண்களுக்கு மட்டுமேயான தன்னிறைவானபுலமாகக் கருதும் கற்பிதமாக்கி விடுகிறது" என்பதேயாகும்.[42]

இதை மறுத்த கருத்துரைகளில், நீதிபதிகள் காரி ஏ. பிளாக்மன், வாரன் ஈ. பர்கர், இளவல் இலெவிசு எஃப். பாவெல், வில்லியம் எச். இரெகினிகுவிசுட்டு ஆகியோர் இந்தத் தீர்ப்புப்படி, அரசு ஆதரவு தனிப் பாலினக் கல்வி வாய்ப்புகளை நீக்குவதாக அமையும் எனவும் மேலும் இப்போது நடப்பில் ஐக்கிய அமெரிக்காவில் அரசு மகளிர் கல்லூரிகள் ஏதும் இல்லை என்பதால் இந்தப் பரிந்துரை சரியானதே எனவும் இதனால், ஐக்கிய அமெரிக்காவை எதிர்த்து வர்ஜீனியா படைத்துறை நிறுவனம் தொடுத்த வழக்கின் தீர்ப்புப்படி,, வர்ஜீனியா படைத்துறை நிறுவனம் பெண்களுக்கும் சேர்க்கை வழங்கவேண்டும் எனவும் இதற்காகப் பல்கலைக்கழகப் பெயரை மாற்ற தேவையில்லை எனவும் இது வழக்கத்தில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக தாராளக் கல்வியையைக் கலைகளிலும் தொழில்துறைகளிலும் வழங்கும் மரபுக்கு இயைந்ததே எனவும் பரிந்துரைத்தனர்.[43]

மில்சு கல்லூரி தொகு

மில்சு கல்லூரியின் அறக்கட்டளை உறுப்பினர்கள் 1990, மே, 3 இல், ஆண்சிறுவரை மட்டும் சேர்ப்பதற்கு வாக்களித்துள்ளதாக அறிவித்தனர்.[44] இந்த முடிவு மாணவர்களின் இருவார ஒத்துழையாமை தட்டிப் போராட்டத்துக்கு வழிவகுத்தது.[45][46] At one point, nearly 300 students blockaded the administrative offices and boycotted classes.[47] மீண்டும் அறக்கட்டளை உறுப்பினர்கள் மே 18 இல் கூடி இந்த முடிவைப் பற்றி அலசிப் பார்த்தனர்;[48] இறுதியான வாக்களிப்பு பழைய முடிவுக்கு எதிராக நிறைவேறியது.[49]

பிற கல்லூரிகள் தொகு

சாரா இலாரன்சு கல்லூரி பிரின்சுட்டன் பல்கலைக்கழகத்துடன் இணைய மறுத்தது; ஆனால், 1969 இல் இருபாலார் கூட்டுக்கல்வி பயிற்றலானது. கன்னெக்டிகட் கல்லூரி 1960 களில் கூட்டுக்கல்வி நிறுவனமானது.

வெல்சு மகளிர் கல்லூரி 2005 இல் இருந்து கூட்டுக்கல்வி நிறுவனமானது. பொதுமக்கள் நிதியில் இயங்கிய தவுகிளாசு மகளிர் கல்லூரி 2007 இல் இருந்து கூட்டுக்கல்வி நிறுவனமானது.

நுண்ணாய்வு தொகு

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Sarah Gamble, ed. The Routledge companion to feminism and postfeminism (2001) p. 25
  2. Badran, Margot, Feminism in Islam: Secular and Religious Convergences (Oxford, Eng.: Oneworld, 2009 p. 227 (
  3. Freedman, Marcia, Theorizing Israeli Feminism, 1970–2000, in Misra, Kalpana, & Melanie S. Rich, Jewish Feminism in Israel: Some Contemporary Perspectives (Hanover, N.H.: Univ. Press of New England (Brandeis Univ. Press) 2003 pp. 9–10
  4. "women's movement (political and social movement)". Britannica Online Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 2012-07-20.
  5. Davis, Joshua Clark (2017-08-08) (in en). From Head Shops to Whole Foods: The Rise and Fall of Activist Entrepreneurs. Columbia University Press. பக். 129–175. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780231543088. https://books.google.com/books?id=UjEtDwAAQBAJ&pg=PT146&dq=head+shops&hl=en&sa=X&ved=0ahUKEwjd04HtgMnVAhUB2oMKHb7uBDEQ6AEIMjAC#v=onepage&q=feminist%20business&f=false. 
  6. இது பின்வரும் மேற்கோள்களில் வெளிப்படுகிறது:
  7. Murray Knuttila, Introducing Sociology: A Critical Approach (4th ed. 2008 Oxford University Press)
  8. Simone de Beauvoir, The Second Sex, 1949.
  9. Moi, Toril (2002). "While we wait: The English translation of The Second Sex". Signs: Journal of Women in Culture and Society 27 (4): 1005–1035. doi:10.1086/339635. 
  10. Echols, Alice (1989). Daring to be Bad: Radical Feminism in America, 1967–1975. University of Minnesota Press. பக். 269–278. https://archive.org/details/daringtobebadrad0000echo. 
  11. Hogan, Kristen (2016). The Feminist Bookstore Movement: Lesbian Antiracism and Feminist Accountability. Durham, North Carolina: Duke University Press. https://archive.org/details/feministbookstor0000hoga. 
  12. 12.0 12.1 12.2 Arrow, Michelle (2007). "'It Has Become My Personal Anthem': 'I Am Woman', Popular Culture and 1970s Feminism". Australian Feminist Studies 22 (53): 213–230. doi:10.1080/08164640701361774. 
  13. Wollman, Elizabeth L. (3 July 2012). "Women and the Music Industry in the 1970s". The Gilder Lehrman Institute of American History.
  14. "Overview I Am Woman (1972)". ASO – Australia's audio and visual heritage online. பார்க்கப்பட்ட நாள் 2012-07-20.
  15. "The Anthem and the Angst", Sunday Magazine, Melbourne Sunday Herald Sun/Sydney Sunday Telegraph, June 15, 2003, Page 16.
  16. Betty Friedan, "It Changed My Life" (1976), pp. 257
  17. "Reddy to sing for the rent", Sunday Telegraph (Sydney), November 13, 1981
  18. "Helen still believes, it's just that she has to pay the rent too", by John Burns of the Daily Express, reprinted in Melbourne Herald, December 16, 1981
  19. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Chicago Sun-Times இம் மூலத்தில் இருந்து 2011-07-21 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20110721221948/http://southtownstar.suntimes.com/southtown/columns/vickroy/x07-dvy2.htm. 
  20. Wollman, Elizabeth. "Women and the Music Industry in the 1970s". History Now.
  21. Gourley, Catherine. Ms. and the Material Girls: Perceptions of Women from the 1970s to 1990s. பக். 26. 
  22. 22.0 22.1 Gourley, Catherine (2008). Ms. and the Material Girls: Perceptions of Women from the 1970s through the 1990s. Minneapolis, MN: Twenty-First Century. பக். 26. 
  23. Gaar, Gillian (1992). She's a Rebel: The History of Women in Rock & Roll. Seattle: Seal Press. https://archive.org/details/shesrebelhistor00gaar. 
  24. Harvey, Steve (January 28, 1973). "Radical Chic: How Protest Became Saleable". Los Angeles Times. http://0-hnpl.bigchalk.com.catalog.toledolibrary.org/hnweb/hnpl/do/document?set=searchalleras&start=151&rendition=x-article-image&inmylist=false&urn=urn%3Aproquest%3AUS%3BPQDOC%3BHNP%3BPQD%3BHNP%3BPROD%3Bx-article-image%3B603643512&mylisturn=urn%3Aproquest%3AUS%3BPQDOC%3BHNP%3BPQD%3BHNP%3BPROD%3Bx-citation%3B603643512. 
  25. 25.0 25.1 25.2 Wollman, Elizabeth. "Women and the Music Industry in the 1970s". The Gilder Lehrman Institute of American History. பார்க்கப்பட்ட நாள் March 9, 2017.
  26. 26.0 26.1 26.2 Liveton, Sharon (May 14, 1988). "Olivia Records: A Healthy Gain in 15 Years". Los Angeles Times. http://0-hnpl.bigchalk.com.catalog.toledolibrary.org/hnweb/hnpl/do/document?set=searchalleras&start=26&rendition=x-article-image&inmylist=false&urn=urn%3Aproquest%3AUS%3BPQDOC%3BHNP%3BPQD%3BHNP%3BPROD%3Bx-article-image%3B2166468282&mylisturn=urn%3Aproquest%3AUS%3BPQDOC%3BHNP%3BPQD%3BHNP%3BPROD%3Bx-citation%3B2166468282. 
  27. 27.0 27.1 McKenna, Kristine (December 11, 1977). "Feminist Record Company: Women Who Love the Spin They're In". Los Angeles Times. http://0-hnpl.bigchalk.com.catalog.toledolibrary.org/hnweb/hnpl/do/document?set=searchalleras&start=1&rendition=x-article-image&inmylist=false&urn=urn%3Aproquest%3AUS%3BPQDOC%3BHNP%3BPQD%3BHNP%3BPROD%3Bx-article-image%3B650283422&mylisturn=urn%3Aproquest%3AUS%3BPQDOC%3BHNP%3BPQD%3BHNP%3BPROD%3Bx-citation%3B650283422. 
  28. "The Women's Liberation Music Archive". The Women's Liberation Music Archive. பார்க்கப்பட்ட நாள் March 9, 2017.
  29. 29.0 29.1 29.2 29.3 Japenga, Ann (September 21, 1980). "Women's Music Festival: Alternative in Yosemite". Los Angeles Times. http://0-hnpl.bigchalk.com.catalog.toledolibrary.org/hnweb/hnpl/do/document?set=searchalleras&start=1&rendition=x-article-image&inmylist=false&urn=urn%3Aproquest%3AUS%3BPQDOC%3BHNP%3BPQD%3BHNP%3BPROD%3Bx-article-image%3B658294452&mylisturn=urn%3Aproquest%3AUS%3BPQDOC%3BHNP%3BPQD%3BHNP%3BPROD%3Bx-citation%3B658294452. 
  30. Seara, Marita (November 29, 2015). "Historia del Feminismo en España" [History of Feminism in Span]. Voces Visibles (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் March 30, 2019.
  31. Bloom, Alexander; Brines, Wini, தொகுப்பாசிரியர்கள் (2015). Takin' it to the Streets. New York: Oxford University Press. பக். 81. 
  32. Ruth Rosen (2000). The World Split Open: How the Modern Women's Movement Changed America. New York: The Penguin Group. பக். 100. 
  33. Patterson, James T. (2000). Grand Expectations: The United States, 1945–1974. New York: Oxford University Press. பக். 33. 
  34. Rosen (2000), ப. 8.
  35. Rosen (2000), ப. 78.
  36. 36.0 36.1 Shulman, Alix Kates (1980). "Sex and Power: Sexual Bases of Radical Feminism". Signs 5 (4, Women: Sex and Sexuality): 592. 
  37. Bloom & Brines (2015), ப. 44.
  38. "Mount Holyoke:A Detailed History". mtholyoke.edu இம் மூலத்தில் இருந்து 2007-09-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070926222407/http://www.mtholyoke.edu/cic/about/detailed.shtml. 
  39. "Smith Tradition". smith.edu இம் மூலத்தில் இருந்து 2007-01-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070101215838/http://www.smith.edu/collegerelations/presidents.php. 
  40. "A Brief history of Bryn Mawr College". brynmawr.edu இம் மூலத்தில் இருந்து 2008-01-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080120065225/http://www.brynmawr.edu/visit/history.shtml. 
  41. "Mississippi Public Universities – Mississippi's University System". Mississippi.edu. 1925-09-15. பார்க்கப்பட்ட நாள் 2012-07-20.
  42. Mississippi University for Women v. Hogan, 458 U.S. 718 (1982)
  43. MUW – Planning and Institutional Effectiveness பரணிடப்பட்டது அக்டோபர் 17, 2010 at the வந்தவழி இயந்திரம்
  44. "Venerable School for Women Is Going Co-ed". The New York Times. 1990-05-04. https://select.nytimes.com/gst/abstract.html?res=F30610F73C540C778CDDAC0894D8494D81. 
  45. "Mills Students Protesting Admission of Men". The New York Times. 1990-05-05. https://query.nytimes.com/gst/fullpage.html?res=9C0CE6DE1738F936A35756C0A966958260. 
  46. Bishop, Katherine (1990-05-06). "Disbelieving and Defiant, Students Vow: No Men". The New York Times. https://select.nytimes.com/gst/abstract.html?res=F30616FC355E0C758CDDAC0894D8494D81. பார்த்த நாள்: April 6, 2010. 
  47. "Protest Continues at College Over Decision to Admit Men". The New York Times. 1990-05-08. https://query.nytimes.com/gst/fullpage.html?res=9C0CE1DE133EF93BA35756C0A966958260. 
  48. "College to Reconsider Decision to Admit Men". The New York Times. 1990-05-12. https://query.nytimes.com/gst/fullpage.html?res=9C0CE5DA1130F931A25756C0A966958260. 
  49. Bishop, Katherine (1990-05-19). "Women's College Rescinds Its Decision to Admit Men". The New York Times. https://select.nytimes.com/gst/abstract.html?res=F30616F63C550C7A8DDDAC0894D8494D81. பார்த்த நாள்: April 6, 2010. 

மேலும் படிக்க தொகு

புற இணைப்புகள் தொகு