பொருளாயதப் பெண்ணியம்

பொருளாயதப் பெண்ணியம் (materialist feminism) மகளிர் ஒடுக்குமுறையைப் புரிந்துகொள்வதில் முதலாளியமும் தந்தைவழி சமூக அமைப்பும் வகிக்கும் மையப் பாத்திரத்தை முன்னிறுத்துகிறது. இது ஒடுக்குமுறையை வரையறுக்கும் புறநிலை, பொருளாயதக் கூறுபாடுகளில் கவனம் செலுத்துகிறது.[1] பொருளாயதப் பெண்ணியத்தில் பாலினம் சமூகப் புனைவாகவும் சமூகம் பாலினப் பாத்திரங்களை வலிந்து திணிக்கிறது. இந்நிலை குழந்தை வளர்ப்பையும் வீட்டுப் பணிகளையும் மகளிர்பால் சுமத்துகிறது. பொருளாயதப் பெண்ணியத்தின் கருத்தியலான நெடுநோக்கு சமூகத்தில் மகளிர் பொருளியலாகவும் சமுக உறவிலும் ஆடவருக்குச் சமமாகப் பாவிக்கப்படவேண்டும். இக்கோட்பாடு முதலாளிட அமைப்புக்குள் உருமாற்றத்தைக் கோராமல் சமூக மாற்றத்தை மையப்படுத்துகிறது.[2]

ஜெனிஃபெர் விக்கி பொருளாயதப் பெண்ணியத்தைச் "சமூக ஏற்பாடுகள் உருவாகிய பொருளாயத நிலைமைகளை ஆய்வுசெய்யும் பெண்ணியப் புலமாக வ்வரையறுக்கிறார்; இதில் பாலினப் படிநிலைகளின் உருவாக்கமும் உள்ளடங்கும்; இதில் பாலினப் படிநிலைகள் தந்தைவழி முறைமையால் மட்டும் விளைவதாகக் கொள்ளாமல், மாறாக குறிப்பிட்ட வரலாற்றுப் பொருளாயத கட்டத்தில் நிலவும் ஒட்டுமொத்தச் சமூக, உளவியல் உறவுகளின் வலைப்பின்னலையும் சார்ந்தெழுவதாகக் கொள்ளவேண்டும்" என வாதிடுகிறார்".[3] இவர் மேலும், "...பொருளாயதப் பெண்ணியம் பாலினத்தின் சமூக உருவக்கத்தில் அனைத்துவகைப் பொருளாயத நிலைமைகளும் பத்திரம் வகிக்கின்றன எனவும் மகளிர் சமூகப் பொருளாக்க அமைப்புகளில் பல வழிமுறைகளில் இணைந்து கங்கலிக்கின்றனர் எனவும் உறுதிபடுத்துகிறது" எனக் கூறுகிறார்.[3] பொருளாயதப் பெண்ணியம் பல்வேறு இன, இனக்குழுக்களிடையிலான ஆடவரும் பெண்டிரும் தழ்நிலை பொருளியல் மட்டத்திலேயே அதிகாரச் சமனின்மையால் எப்படி இறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் இந்நிலை எப்படி ஏற்கெனவே கூடுதல் சலுகைகள் பெற்று, அதிகாரத்தில் இருப்பவர்கள் நடப்புநிலைமைகளைப் பாதுகாத்து தக்கவைக்க முயல்கின்றனர் எனவும் கருதிப் பார்க்கிறது. பொருளாயதப் பெண்ணியர்கள் அனைத்து மக்களும் கல்விகற்கவோ வாழ்க்கைப்பணிகளில் சேரவோ செல்வம் ஈட்டவோ வேண்டிய வாய்ப்புகள் உள்ளனவா எனக் கேட்கின்றனர்; அப்படி இல்லையென்றால், எவ்வகைப் பொருளாயத, சமூக நிலைமைகள் இவ்வாய்ப்புகளை தடுக்கின்றன ஏன்றும் அவற்றினை மாற்றியமைப்பது எப்படி எனவும் ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர்.[4]

வரலாறு தொகு

பொருளாயதப் பெண்ணியம் 1970 களின் கடைசியில் உரோசு மேரி கென்னசி, சுட்டீவ் ஜாக்சன், கிறித்தைன் தெல்பி போன்ற சிந்தனையாளர்களால் தோன்றியது.[2]

உரோசு மேரி கென்னசி பொருளாயதப் பெண்ணியத்தின் சுவடுகளைப் பிரித்தானிய, பிரெஞ்சுப் பெண்ணியர்களின் பணிகளில் தேடுகிறார். இவர்கள் மார்க்சியப் பெண்ணியத்துக்குப் பதில் பொருளாயதப் பெண்ணியம் எனும் சொல்லை ஆண்டனர்.[5] இவர்களின் கண்னோட்டத்தில், மார்க்சியம் பாலின வேளைப் பிரிவினையையும் உள்ளடக்கி மார்க்சியத்தை மாற்றவேண்டும் என வாதிடுகின்றனர். மார்க்சியம் வருக்க, பொருளாக்க முறைமை சார்ந்துள்ளதால், பெண்ணியரின் இலக்குப் பணிக்கு போதாது என்கின்றனர். பெண்ணியமும் தனது கருதியலான சாராம்சப் பெண் எனும் கருத்துப்படிமத்தை வரித்துள்ளதால், இதுவும் சிக்கல் மிக்கதாகவே அமைகிறது. எனவே, பொருளாயதப் பெண்ணியம் மார்க்சியத்துக்கும் பெண்ணியத்துக்கும் நேர்முகப் பதிலியாக பொருளாயதப் பெண்ணியம் எழுந்து, சமூக வளங்களின் சமனிலாத பகிர்வைச் சுட்டிக் காட்டியது.[5]

பொருளாயதப் பெண்ணியம் பிரெஞ்சுப் பெண்ணியர்களால், குறிப்பாக கிறித்தைன் தெல்பியால் உருவாக்கப்பட்டது. அப்போது இச்சொல்லை உருவாக்கியதற்காக, இவர் மற்ற பெண்ணியர்களால் பெரிதும் தாக்கப்பட்டார். பொருளாயதப் பெண்னியம் மார்க்சியத்துக்கு மிக நெருக்கமாக இருந்தாலும், மார்க்சியப் பனுவல்கலுக்குக் கட்டுப்படவில்லை; பலர் இந்தப் பெண்ணியப் பிரிவு தேவையற்றது என்றனர்; என்றாலும், புத்தியப் பெண்ணியம் புற வாழ்க்கை ஒடுக்குமுறைகளில் இருந்து விலகி, ஒடுக்குமுறை சொற்களில் கவனம் செலுத்தலானது.[6] தெல்பி சமூகத்தில் தொழிலக, வீட்டுவகை என இருவகைப் பொருளாக்க முறைமைகள் உள்ளன என நம்பினார். முதல் முறைமை முதலாளியச் சுரண்டலுக்கும் இரண்டாவது குடும்ப, தந்தைவழிமுறைச் சுரண்டலுக்கும் வழிவகுத்தது.[7]இவர் மகளிர் வாழ்க்கையில் ஒடுக்குமுறை அடிப்படை உண்மையாக உள்ளதை சரியாக விளக்கவல்ல கோட்பாடாக வரலாற்றில் பொருளாயத அணுகுமுறை மட்டுமே அமைகிறது என வாதிடுகிறார். எனவே, இவர் மகளிரும் பிற ஒடுக்கப்பட்டோரும் தம் சூழ்நிலைமையை ஆய்வுசெய்ய பொருளாயதமே உகந்தது எனக் கூறுகிறார். மேலும், உண்மையில் ஒடுக்குமுறை என்பது ஒரு பொருளாயதக் கருத்துப்படிமமே ஆகும் என்கிறார் தெல்பி.[8]இவர் வீட்டுப் பொருளாக்க முறைமை தான் தந்தைவழிச் சுரண்டல் களமாகும்; இதுவே மகளிரின் ஒடுக்குமுறைக்கு அடிப்படை ஆகும் என வாதிடுகிறார். மேலும், தெல்பி மகளிரைச் சுரண்ட, திருமணம் எனும் உழைப்பு ஒப்பந்தம் ஆண்களுக்கு உதவுகிறது.[8]

மாபெரும் வீட்டுப் புரட்சி எனும் தோலரெசு கேதன் இயற்றிய நூல் நல்ல மேற்கோள் நூலாகும். கேதன் அப்போது வீட்டகத் தனிவெளி, பொதுவெளி சார்ந்த உறவு பற்றி உருவாகிவந்த மீள்கருத்தாக்கங்களை விவாதிக்கிறார். மகளிரின் மரபான வீட்டகச் சமையல், குழந்தை வளர்ப்பு போன்ற பணிகளைப் பொதுவெளிக்குக் கொணர்ந்து சமூகமயப் படுத்தல் சிந்தனைகள் உருவாகி வந்துள்ளன.[9]

மார்க்சியப் பெண்ணிய உறவு தொகு

மார்க்சியப் பெண்ணியக் கோட்பாடு, முதலாளிய, தனிச்சொத்துவழி முறைமைகளால் மகளிர் ஒடுக்கப்படும் வழிமுறைகளை ஆய்ந்து விளக்குவதில் கவனம் குவிக்கிறது. முன்பே கூறியதைப் போல, வீட்டக வேலைப் பிரிவினையை மார்க்சியப் பெண்ணியம் கருதாமையை உணர்ந்து, அதை மேம்படுத்தவே பொருளாயதப் பெண்ணியம் உருவாகியது. எனவே, இதன் அண்மை வேர்கள் நிகரறப் பெண்ணியத்திலும் மார்க்சியப் பெண்ணியதிலும் கால்கொண்டுள்ளன;பொருளாயதப் பெண்ணியம்: மகளிர் வாழ்க்கையும் வருக்கமும் வேறுபாடும் எனும் நூலின் ஆசிரியர்களாகிய உரோசுமேரி கென்னசியும் கிறிசு இங்கிராகாமும் " வரலாற்றுப் பொருள்முதலியம், மார்க்சியப் பெண்ணியம், மரபுகடப்புப் பெண்ணியம், பொருட்படுத்தலின் அகநிலைத் தன்மையை விளக்கும் பின்னைப்புத்திய, உளப்பகுப்பாய்வுக் கோட்பாடுகள் போன்ற பல உரையாடல்களின் கட்டுமானமாக, பொருளாயதப் பெண்ணியம் விளங்குகிறது என வரையறுக்கின்றனர்".[10]

பிரிவிடை உறவுசார் அணுகுமுறைகள் தொகு

பொருளாயதப் பெண்ணியத்தின் மகளிர் குறித்த பொதுவான அடக்குமுறை கற்பிதம் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. இது முதலாளிய உறவுகளையும் தந்தைவழி முறைமையையும் இணைப்பதில் மட்டும் கவனம் குவித்து, மற்ற வருக்க, பாலின, இனக்குழு மகளிரை உள்ளடக்கத் தவறுவது முன்வைக்கப்படுகிறது.[2] காசெல் கார்பி அனைத்து மகளிரையும் ஒடுக்கும் அமைப்பாக குடும்பத்தை முன்னிறுத்தும் பொருளாயதப் பெண்ணியப் பகுப்பாய்வுக்கு அறைகூவல் விடுக்கிறார். இவர் கருப்பினக் குடும்ப ஆண், பெண் உறவு சார்ந்த விழுமியங்களும், இனங்கள் சார்ந்த வேலைப்பிரிவினை வேறுபடுவதைப் போலவே றுபடுவன என குறிப்பிடுகிறார்.[11]

அண்மைய காலத்தில், பொருளாயதப் பெண்ணியச் சிந்தனைகள் நாடுகளிடையேயான சிக்கல்களைல் கவனம் செலுத்த முயன்றுவருகிறது. பெண்ணிய வறுமை மிகுவதற்கு அறிஞர்கள் உலகளாவிய பொருளியல் மாற்றத்தைக் கருதுகின்றனர். பெண்ணிய அறிஞர்களும் நாடுகளிடையேயான பெண்ணிய நிகழ்ச்சிநிரலை வகுக்க முயன்றுவருகின்றனர்ரெடுத்துகாட்டாக, உரோசுமேரி கென்னசி மெக்சிகோ வடக்கு எள்ளையில் உள்ள நான்கு மக்குவிலாதோரா குமுகாயங்களிடையே நிலவும் அடிவேரான அமைப்புகளை பகுப்பாய்வு செய்து, பாலின அரசியல் பொருளாதாரத்தில், முதலாளிய, தந்தைவழி முறைமைகளின் உலகளாவிய தன்மையை வற்புறுத்துகிறார்.[12]

நுண்ணாய்வுகள் தொகு

பொருளாயதத்துக்கும் பெண்ணியத்துக்கும் இடையிலான உறவு சிக்கலுக்கு உள்ளாக்கப்பட்டு, இந்த இணைப்பும் இணையும் மகிழ்ச்சி தருவதாக இல்லை என மதிப்பிடப்படுகிறது.[13] பொருளாயதப் பெண்ணியம் குறித்த அக்கறையிலும் ஒரு பொதுக் குழப்பம் நிலவுகிறது. அதாவது பொருளாயதப் பெண்ணியத்துக்கும் மார்க்சியப் பெண்னியத்துக்கும் இடையில் கருதத் தக்க வேறுபாடு பெண்ணியக் கோட்பாட்டுக்கு பங்களிக்கும் அளவுக்கு உள்ளதா என்ற வினா இயல்பாக எழுகிறது.[14] என்றாலும், பொருளாயதப் பெண்ணியம் குறித்த முதன்மையான விமர்சனம் அது பிரிவிடை உறவைத் தனது கோட்பாட்டில் அடக்கவில்லை என்பதாகவே அமைகிறது.பொருளாயதப் பெண்ணியம் பாலினத்தைச் சமூகப் புனைவாகக் கூறிவந்தாலும், உரோசுமேரி கென்னசி, பெண்கள் குறித்த வரையறையின் வேறுபாடுகளை வற்புறுத்தும் அழுத்தத்தைப் பற்றி எப்படி இவை வருக்கத்தோடு நில்லாமல், இனம், பாலினங்கள், பாலுறவு ஆர்வங்களை இடைவெட்டிச் செல்கின்றன என உரைவிளக்கம் தருகிறார்.[15]

பொருளாயதப் பெண்ணியத்துக்கான கிறித்தைன் தெல்பியின் பங்களிப்புகள் மிழ்சேல் பாரட்டாலும் மேரி மெக்ளிந்தோழ்சாலும் எதிர்த்து விமர்சிக்கப்பட்டுள்ளன. அவர்கள் பொருளாயதப் பெண்ணிய வரையறை மேலும் தந்தைவழி முறைமை குறித்து மிகவும் பொருளற்ற விளக்கமே அளித்துள்ளதை சுட்டிக் காட்டுகின்றனர்; மேலும் தெல்பியின் "பொருளாயதப் பெண்ணியத்தை நோக்கி" எனும் கட்டுரையில் கவனம் மனைவியர் ஒடுக்குமுறையைப் பற்றி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளதே தவிர, உலகளாவிய மகளிர் ஒடுக்குமுறையைப் பற்றியேதும் விவாதிக்கப்படவில்லை என்பதையும் எடுத்துரைத்துள்ளனர்.[7]

சுட்டீவி ஜாக்சன் அண்மைய பொருளாயத மீளெழுச்சியின் ஆர்வமும் கூட, புதிய பொருளாயத எண்ணக்கருக்கள் முதலாளிய எண்ணக்கருக்களாகவே சுருங்கிவிட்ட தன்மையை அக்கறையுடன் எடுத்துரைத்துள்ளார்’ இது நம்மை " மீண்டும் 1970 களில் நிலவிய சிந்தனை வடிவங்களுக்கே பின்னோக்கித் தள்ளிவிடும்" என எச்சரிக்கிறார்.[2]

புத்தியப் பெண்ணிய உறவு தொகு

ஒரு பண்பாட்டுத் திருப்பம் 1990 களில் நிகழத் தொடங்கிய பிறகு மகளிர் எனும் கருத்தினத்தின் எல்லைகள்நகரத் தொடங்கின. அப்போது பெண்ணியம் பின்னைப் பெண்ணியமாக உருவெடுக்க, பெண்மை குறித்த கருத்தியல் நடப்பில் இருப்பதை ஏற்காமல் சிக்கலுக்கும் கொணர்ந்தது என சுட்டீவ் ஜாக்சன் கூறுகிறார்.[16] அப்போதைய பெண்னியர்கள் மகளிரைச் சமூகப் படிநிலையில் கருதுவதை விட்டுவிட்டு ஒரு பாலினப் பிரிவினையாக மட்டுமே கருதலாயினர். எனவே, பொருளாயதப் பெண்ணியம் மெல்ல மேலும் மேலும் அருகத் தொடங்கியது.பெண் குறித்த வரையறை சார்ந்த உரையாடல் அதன் சிறப்புநிலைகளைக் கருதத் தொடங்கவே, அவர்கள் சந்திக்கும்பாத்திரங்களும் புறநிலை ஒடுக்குமுறைகளும் பற்ரிய முதன்மை குறைய தொடங்கிவிட்டது.இது ஒருவகையில் மகளிரின் தம் நிகழ்ச்சிநிரலை எய்திவிட்டதாக கருதியதால் இருக்கலாம். மகளிருக்கு சமமை கிடைத்துவிட்டதால் மகளிரின் பாலினப் பிரிவிடை உறவச் சமன்படுத்த இறங்கியிருக்கலாம்.

கோட்பாட்டாளர்கள் தொகு

  • ஜெனிஃபெர் விக்கி
  • உரோசு மேரி கென்னசி,
  • சுட்டீவ் ஜாக்சன்,
  • கிறித்தைன் தெல்பி
  • தோலரெசு கேதன்
  • காசெல் கார்பி
  • கிறிசு இங்கிராகாம்

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Griffin, Gabriele (2017). A dictionary of gender studies (1st ). Oxford. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-183483-7. இணையக் கணினி நூலக மையம்:994878353. https://www.worldcat.org/oclc/994878353. 
  2. 2.0 2.1 2.2 2.3 Stevi Jackson (May–August 2001). "Why a materialist feminism is (Still) Possible—and necessary". Women's Studies International Forum 24 (3–4): 283–293. doi:10.1016/S0277-5395(01)00187-X. 
  3. 3.0 3.1 Ferguson, Margaret (1994). Feminism and Postmodernism. Durham, North Carolina: Duke University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0822314882. https://archive.org/details/feminismpostmode00fergrich. 
  4. "Materialist Feminism - The Feminist eZine". www.feministezine.com. பார்க்கப்பட்ட நாள் 2017-10-10.
  5. 5.0 5.1 Rosemary Hennessy (1993). Materialist Feminism and the Politics of Discourse. New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780415904803. https://archive.org/details/nlsiu.305.4.hen.14888. 
  6. Jackson, Stevi (2001). "Why a materialist feminism is (Still) Possible—and necessary". Women's Studies International Forum 24 (3–4): 283–293. doi:10.1016/s0277-5395(01)00187-x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0277-5395. http://dx.doi.org/10.1016/s0277-5395(01)00187-x. 
  7. 7.0 7.1 Barrett, Michèle; McIntosh, Mary (1979). "Christine Delphy: Towards a Materialist Feminism?". Feminist Review (1): 95–106. doi:10.2307/1394753. 
  8. 8.0 8.1 Delphy, Christine; Leonard, Diana (March 1980). "A Materialist feminism is possible". Feminist Review 4 (1): 79–105. doi:10.1057/fr.1980.8. 
  9. Kramarae, Cheris; Spender, Dale (2000). Routledge International Encyclopedia of Women: Global Women's Issues and Knowledge. New York: Routledge. பக். 766. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780415920902. 
  10. Hennessy, Rosemary (1997). Materialist Feminism: A Reader in Class, Difference, and Women's Lives. New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780415916349. 
  11. Carby, Hazel (1982), "White woman listen! Black feminism and the boundaries of sisterhood", in Gilroy, Paul (ed.), The Empire Strikes Back: Race and Racism in 70s Britain, London New York: Routledge in association with the Centre for Contemporary Cultural Studies, University of Birmingham, pp. 211–234, ISBN 9780415079099
  12. Hennessy, Rosemary (December 2009). "Open secrets: The affective cultures of organizing on Mexico's northern border". Feminist Theory 10 (3): 309–322. doi:10.1177/1464700109343254. 
  13. Rooney, Ellen (1996). "What Can the Matter Be?". American Literary History 8 (4): 745–758. doi:10.1093/alh/8.4.745. https://archive.org/details/sim_american-literary-history_winter-1996_8_4/page/745. 
  14. Martha E. Gimenez (2000). "What's material about materialist feminism?". Radical Philosophy. https://www.radicalphilosophy.com/article/what%E2%80%99s-material-about-materialist-feminism. 
  15. Hennessy, Rosemary; Mohan, Rajeswari (1989-12-01). "The construction of woman in three popular texts of empire: Towards a critique of materialist feminism". Textual Practice 3 (3): 323–359. doi:10.1080/09502368908582066. பன்னாட்டுத் தர தொடர் எண்:0950-236X. 
  16. Jackson, Stevi (2001). "Why a materialist feminism is (Still) Possible—and necessary". Women's Studies International Forum 24 (3–4): 283–293. doi:10.1016/s0277-5395(01)00187-x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0277-5395. http://dx.doi.org/10.1016/s0277-5395(01)00187-x. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருளாயதப்_பெண்ணியம்&oldid=3848613" இலிருந்து மீள்விக்கப்பட்டது