தீ இவன்

2023 தமிழ்த் திரைப்படம்

தீ இவன் (Thee Ivan) என்பது 2023 ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை ஜெயமுருகன் முத்துசாமி எழுதி, இயக்கி, இசையமைத்து, தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சுகன்யா நடிக்கிறார்.[1] படத்தில் டி. எம். ஜெயமுருகனின் மகனான சுமன் ஜே.-வும் கேரளத்தில் இருந்து அறிமுகமாகும் தீபிகாவும் இளம் காதலர்களாக நடிக்கின்றனர். மேலும் ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, யுவராணி ஜான் விஜய், சிங்கம்புலி, ராதாரவி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், இயக்குநர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர், பெராரே, டி. எம். ஜெயமுருகன், சுமன் ஆகியோர் நடித்துள்ளார்.

தீ இவன்
இயக்கம்ஜெயமுருகன் முத்துசாமி
தயாரிப்புஜெயமுருகன் முத்துசாமி
கதைஜெயமுருகன் முத்துசாமி
திரைக்கதைஜெயமுருகன் முத்துசாமி
இசைஜெயமுருகன் முத்துசாமி
நடிப்பு
கலையகம்மனிதன் சினி ஆர்ட்ஸ்
வெளியீடு8 திசம்பர் 2023
ஓட்டம்177 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டதாக இப்படத்தின் கதை உள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் கதை நடப்பதாக சித்தரிக்கபட்டுள்ளது. ஒரு நவீன கிராமத்தில் அமைதியாக வாழும் குடும்பத்தில் அண்ணன் தங்கை இருவருக்குமிடையிலான பாசத்துக்கு காதல் தடையாக காதல் குற்றுக்கிடுகிறது. குடும்பத் தலைவரான கார்த்தி சிக்கலை எவ்வாறு கையாண்டு தீர்க்கிறார் என்பதே கைதை ஆகும்.

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

இப்படத்தை டி. எம். ஜெயமுருகன் எழுதி இயக்கியுள்ளார். மேலும் அவரது சொந்த பதாகையான மனிதன் சினி ஆர்ட்ஸ் என்ற பதாகையின் கீழ் தயாரித்துள்ளார். படத்திற்கான இசையையும் டி. எம். ஜெயமுருகன் அமைத்துள்ளார்.[2]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீ_இவன்&oldid=4161372" இலிருந்து மீள்விக்கப்பட்டது