துசுயந்த் குமார் கெளதம்

இந்திய அரசியல்வாதி

துசுயந்த் குமார் கௌதம் (Dushyant Kumar Gautam) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஆவார்.[2] இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக அரியானாவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] இவர் நீண்ட காலமாக பாஜகவின் தாழ்த்தப்பட்ட பிரிவுடன் தொடர்புடையவர். இவர் கடந்த காலங்களில் தில்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். அரியானாவில் உள்ள கர்னால் மாவட்டத்தின் இந்திரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் ஐஎன்எல்டி தலைவர் ராம் குமார் காஷ்யப்பின் மாநிலங்களவை உறுப்பினரின் எஞ்சிய பதவிக் காலமான 2.5 ஆண்டுகள் பதவி வகித்தார்.

துசுயந்த் குமார் கெளதம்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
மார்ச்சு, 2020 – ஆகத்து, 2022
தொகுதிஅரியானா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 29, 1957 (1957-12-29) (அகவை 66)
கபீர் பசுதி, நெகுருத்தியா, மலாக்கஞ்ச், தில்லி
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்இலட்சுமி
வாழிடம்(s)விவேக் விகா, சகாத்ரா, தில்லி
முன்னாள் கல்லூரிதில்லி பல்கலைக்கழகம்[1]
தொழில்அரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "Shri Dushyant Gautam| National Portal of India".
  2. "BJP adds 3.8 crore new members against a target of 2.2 crore in membership drive". தி எகனாமிக் டைம்ஸ். 21 August 2019. பார்க்கப்பட்ட நாள் 28 April 2020.
  3. "BJPs Jangra and Gautam, Congs Hooda elected unopposed to Rajya Sabha". Outlook. 18 March 2020. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
  4. "Sharad Pawar, Harivansh among several candidates elected unopposed to Rajya Sabha". 18 March 2020. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துசுயந்த்_குமார்_கெளதம்&oldid=3940295" இலிருந்து மீள்விக்கப்பட்டது