துணை வஞ்சி
துணைவஞ்சி என்பது புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் ஒன்று. புறநானூற்றில் ‘துணைவஞ்சி’ என்று துறையிடப்பட்டுள்ள பாடல்கள் 6 உள்ளன. இது வஞ்சித் திணையின் துறை.
விளக்கம்
தொகு- வேந்தனை வேந்தன் அடல் (போரிட்டு அழித்தல்) வஞ்சி எனப்படும் தொல்காப்பியம் பொருளதிகாரம் 64 இப்படி அழிப்போரைத் துணைவர் ஆகும்படி கூறுவது துணைவஞ்சி.
இலக்கியம்
தொகு- கருவூரில் சேரனின் காவல் மரத்தை வெட்டும்போது கோட்டைக்குள் பதுங்கியிருக்கும் சேரனைத் துணைவனாக எண்ணுமாறு சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை வேண்டியது. [1]
- கோட்டையை அடைத்குக்கொண்டு உள்ளே இருந்த நெடுங்கிள்ளியும், கோட்டையை முற்றுகையிட்டிருந்த நலங்கிள்ளியும் விட்டுக்கொடுத்துத் துணைவராகும்படி வேண்டியது. [2]
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக் காலடியில் இடும்போது தடுத்து அம் மக்களுக்குத் துணையாகும்படி வேண்டியது. [3]
- சோழன் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி நலங்கிள்ளி தன் கோட்டையை முற்றுகையிட்டிருந்தபோது உறையூருக்கு வந்த புலவர் இளந்தத்தனை ஒற்று வந்தான் என எண்ணிக் கொல்லச் சென்றபோது தடுத்து நிறுத்தி உய்யக் கொண்டது. [4]
- பிறர் நாட்டைச் சூறையாடும்போது அந்நாட்டுக் காவல் மரத்தை வெட்டவேண்டாம். (பகைவன் மக்களைத் துணையாகக் கொள்க) என வேண்டியது. [5]
- கோப்பெருஞ்சோழன் மக்கள் தமக்குள் பகைமை கொண்டிருந்தனர். (நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோர் இவர்கள்) அதனால் அரசன் அவர்களுக்கு அரசு தராமல் தானே ஆண்டுவந்தான். அரசனுக்குப் பின்னர் ஆட்சி யாருக்குச் சேரும் என்னும் உண்மையை எடுத்துக் கூறி மக்களோடு துணைநின்று நாட்டை விட்டுக்கொடுக்கும்படி கூறியது. (கோப்பெருஞ்சோழன் விட்டுக்கொடுத்துவிட்டு வடக்கிருந்து உயிர் துறந்தான். [6]
இலக்கணம்
தொகு- தொல்காப்பியமோ புறப்பொருள் வெண்பாமாலையோ இத் துறையைக் குறிப்பிடவில்லை. இது பன்னிரு படலம் நூலின் வழியே குறிப்படப்பட்ட துறையாகும்.
அடிக்குறிப்பு
தொகு- ↑ ஆலத்தூர் கிழார் புறநானூறு 36
- ↑ கோவூர் கிழார் புறநானூறு 45
- ↑ கோவூர் கிழார் புறநானூறு 46
- ↑ கோவூர் கிழார் புறநானூறு 47
- ↑ காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் புறநானூறு 57
- ↑ புல்லாற்றூர் எயிற்றியனார் புறநானூறு 213