துத்தநாகம் அமோனியம் குளோரைடு
துத்தநாகம் அமோனியம் குளோரைடு (Zinc ammonium chloride) என்பது (NH4)2ZnCl4 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். டெட்ரா குளோரோ சிங்கேட்டின் அமோனியம் உப்பாக துத்தநாகம் அமோனியம் குளோரைடு கருதப்படுகிறது. வெப்ப முழுக்கு துத்தநாகப்பூச்சு செயல்முறையில் இது ஓர் இளக்கியாகப் பயன்படுகிறது [1] [2][3].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டையமோனியம் டெட்ராகுளோரோசிங்கேட்டு(2-)
| |
இனங்காட்டிகள் | |
14639-97-5 | |
ChemSpider | 55644 |
EC number | 238-687-6 |
பப்கெம் | 61754 |
பண்புகள் | |
Cl4H8N2Zn | |
வாய்ப்பாட்டு எடை | 243.26 g·mol−1 |
அடர்த்தி | 1.91 கிராம்/செ.மீ3 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H302, H314, H315, H400, H411 | |
P260, P264, P270, P273, P280, P301+312, P301+330+331, P302+352, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P330 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்கள்
தொகுதுத்தநாக மேற்பூச்சுக்கு உட்படுத்தப்படவேண்டிய எஃகு, இரும்பு ஆக்சைடின் சீரற்ற மேற்பரப்பை நீக்குவதற்காக மேற்கொள்ளப்படும் அமிலத் தூய்மையாக்கல் செயல்முறைக்குள் செலுத்தப்படுகிறது. இச்செயல்முறைக்குப் பின்னர் வளிமண்டலத்தில் வெளிப்பட்டவுடன் எஃகின் மேற்பரப்பு மிகுந்த செயல்திறன் மிக்கதாக மாறி உடனடியாக ஆக்சைடு அடுக்குகள் உருவாகத் தொடங்குகின்றன. நீரிய கரைசலில் உள்ள துத்தநாகம் அமோனியம் குளோரைடு இளக்கியை எஃகின் மீது பூசுவதால் ஒட்டுமொத்தமாக இவ்வாறு எந்தவிதமான ஆக்சைடுகள் உருவாவதும் தடுக்கப்படுகிறது. மேலும் மேற்பூசும் படிநிலையின்போது உருகிய துத்தநாகம் எஃகு மேற்பரப்புடன் அதிகபட்சமாக படிவதையும் கலப்பதையும் துத்தநாகம் அமோனியம் குளோரைடு இளக்கி அனுமதிக்கிறது[4] [5].
பாதுகாப்பு
தொகுஅமெரிக்க போக்குவரத்துத் துறை துத்தநாகம் அமோனியம் குளோரைடை ஒன்பதாவது வகை தீங்கான பல்வகைப் பொருள் எனப்பட்டியலிட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Zinc Ammonium Chloride". Chemical Dictionary Online. பார்க்கப்பட்ட நாள் April 25, 2012.
- ↑ Vulte, H.T. (1902). Laboratory Manual of Inorganic Preparations. p. 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1408608405.
- ↑ Hironori Matsunaga (1982). "X-Ray Structural Study of the Successive Phase Transitions in Ammonium Tetrachlorozincate, (NH4)2ZnCl4. I. Crystal Structure Determination". J. Phys. Soc. Jpn. 51: 864-872. doi:10.1143/JPSJ.51.864.
- ↑ "The Hot-Dip Galvanizing Process". V&S Hot Dip Galvanzing. Archived from the original on 2013-06-23. பார்க்கப்பட்ட நாள் 2018-06-26.
- ↑ "Galvanizing Fluxes". Zaclon LLC.